என் மலர்tooltip icon

    கடலூர்

    கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் வழங்கிவிட்டு, கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்ததை கைவிடவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் வழங்கிவிட்டு, கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்ததை கைவிடவேண்டும். வாராக் கடன்களை முழு கடன் வசூல் செய்தல் வேண்டும்.

    வங்கிகளில் வைப்பு நிதி வைத்துள்ள சேமிப்பாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி அளித்திட வேண்டும். வங்கிகளில் வாடிக்கையாளர்களை பாதிக்கும் அதிகபட்ச சேவைக் கட்டணங்களை ரத்து செய்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். வங்கிகளில் தற்காலிக சக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், வங்கி முகவர்கள் பணிகளை வரன்முறைபடுத்தி நிரந்தரமாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை வங்கி முன்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

    திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மீரா தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்க திருமலை, உதவித் தலைவர் ரமணி, வங்கி அதிகாரிகள் சங்க கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்க புதிய செயலாளர் ஸ்ரீதரன் தொடக்க உரையாற்றினார்.

    இதில் வேலூர் கோட்டை ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க இணைச் செயலாளர் வைத்திலிங்கம், கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர், வட ஆற்காடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சார்ல்ஸ், கடலூர் வங்கி ஊழியர் சங்க தலைவர் லட்சுமணன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் தாலுகா வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் யயாதி சுப்பாராவ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க சண்முகம் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட மத்திய குழு உறுப்பினர் கோகுல்நாத் நன்றி கூறினார்.

    பண்ருட்டியில் பூட்டிய வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம்கணபதி நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (45).இவர் பண்ருட்டி ஜவகர் தெருவில் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி கொண்டு சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 கிராம் தங்க நகை மற்றும் பத்தாயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து கடலூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகைநிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதை கருதி கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ராட்சத குழாய் மூலம் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த ஏரிக்கு மேட்டூர் அணை, பருவகாலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. இந்த தண்ணீரை வைத்து வீராணம் ஏரியின் பாசன பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை முடிந்து உளுந்து பயறு விதைத்துள்ளனர்.

    மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது என்றாலும் சென்னை மாநகருக்கு குடிநீர் அனுப்புவதை கருதி கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.70 அடியாக உள்ளது. நேற்று 42.65 அடி தண்ணீர் இருந்தது. வீராணம் ஏரிக்கு 474 கன அடி நீர் வருகிறது.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அது இன்று 67 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் புவனகிரி யூனியன் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இரவு வீட்டில் தனது குடும்பத்துடன் தூங்கினார். வீட்டு முன்பு அவரது கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.

    இரவு நேரத்தில் காரில் திடீரென்று தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தீ அருகே நின்ற மோட்டார் சைக்கிள் மீதும் பற்றியது.

    இதனால் அந்த இடம் ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்தது. அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து பதறினார். இது குறித்து உடனடியாக சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த மாவட்ட உதவி அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    எனினும் கார், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து செல்வராஜ் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக யாரோ எனது கார், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்துள்ளார். செல்வராஜ் தெரிவித்துள்ளபடி கார், மோட்டார் சைக்கிளுக்கு யாராவது தீ வைத்தார்களா? அவரது வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் சற்று பனிமூட்டம் இருந்துவரும் நிலையில் நேரம் கடக்க கடக்க கடும் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சூறாவளி காற்றுடன் மிக கனமழை பெய்து வந்த காரணத்தினால் மாவட்டம் முழுவதும் வெள்ளைக்காடானது.

    இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக அவ்வபோது மாவட்டம் முழுவதும் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என அனைவரும் அறிந்ததே. மேலும் கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் அளவு பதிவானது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் சற்று பனிமூட்டம் இருந்துவரும் நிலையில் நேரம் கடக்க கடக்க கடும் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதன் காரணமாக மதிய நேரங்களில் அனல் காற்று வீசி வருவதோடு வழக்கத்தைவிட புழுக்கம் அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் முகத்தில் துணி கட்டிக் கொண்டும், சிலர் குடைப்பிடித்து நடந்து செல்வதையும் காண முடிந்தது. மேலும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இது போன்ற வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வருங்காலங்களில் கோடைகாலம் மற்றும் அக்னி நட்சத்திர வெயில் போன்றவற்றை கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக தாக்க கூடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் காணப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தற்போது வழக்கத் தைவிட சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ராட்சத குடையை நட்டு வைத்தும், சிலர் தலையில் துணியால் போர்த்திக் கொண்டும் வியாபாரம் செய்தனர்.

    மேலும் நீர்மோர், பழச்சாறு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, பதனீர், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொண்டனர்.

    விருத்தாசலத்தில் நடுரோட்டில் ஆசிரியையை, மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காட்டுக்கூடலூர் ரோடு, திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் சரவணகுமார். இவருடைய மனைவி ரேகா (வயது 42). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கூடத்தின் அருகிலேயே வீடு இருப்பதால், ரேகா தினசரி பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா, மதிய உணவு இடைவேளையின்போது சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும், வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு நடந்து சென்றார்.

    அப்போது அப்பகுதியில் பள்ளி சீருடையில் பதுங்கி இருந்த 18 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன், திடீரென தான் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் நடுரோட்டில் வைத்து ரேகாவின் தலையில் வெட்டினார். இதில் வலி தாங்க முடியாமல் ரேகா கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    அதற்குள் அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து பொதுமக்கள், காயமடைந்த ஆசிரியை ரேகாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதன் அடிப்படையில் ஆசிரியையை கத்தியால் வெட்டிய மாணவன் யார்? என்று விசாரணை நடத்தி வருவதுடன், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பண்ருட்டியில் நடந்தது.
    பண்ருட்டி:

    பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பண்ருட்டியில் நடந்தது. நகராட்சிஆணையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது:- ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

    எனவே வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தவும்,விற்பனை செய்யவும் கூடாது அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும். நகர் மன்ற உறுப்பினர்கள், வியாபார பிரமுகர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துப்புரவு அலுவலர் முருகேசன் வரவேற்றார். நகராட்சி மேலாளர் ரவி, துப்புரவு ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், பாக்கியநாதன், கவுன்சிலர்கள் மோகன், ஆனந்தி, ராமலிங்கம், ரமேஷ்,‌ஷமீம் பேகம், லாவண்யா முத்துவேல், சலீம் ரிஷ் வான் சாதிக்பாஷா, சரிநிஷா சபீர்பாஷா, ராமதாஸ்,வெங்கடேசன், பிரியா பாக்கியராஜ்,கார்த்தி, முருகன், சுவாதி, வர்த்தக பிரமுகர்கள் கே.என்.சி. மோகன், வானவில் ராஜா, வீரப்பன், முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    கடலூரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை குறைத்திட கோரியும் , எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், வங்கி, ரெயில்வே தனியார் மயமாவதை கண்டித்தும், கடலூர் புதுச்சேரி ரெயில்பாதை திட்டம் வராமல் தடுப்பதை கண்டித்தும், சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் கடலூர் மாநகராட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி அமைத்திட கோரியும், கடலூரில் மருத்துவ கல்லூரி அரசு பெண்கள் கல்லூரி ஆண்கள், மகளிர் பாலிடெக்னிக் , சட்டக்கல்லூரி, நவோதையா பள்ளி அமைத்திட கோரியும் வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை ஆதரித்தும் ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணைபொதுச்செயலாளர் புருஷோதமன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு செயலாளர் கருப்பையன் பேசினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ணபிரான், மாயவேல் கோபால், லட்சுமிநாராயணன், காசிநாதன், ரமணி , கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் செல்வகணபதி, பன்னீர்செல்வம், இளங்கோவன், ரெங்கநாதன், செல்வராஜ், மோகன், கண்ணன், நடராஜன், திருநாவுக்கரசு, குணசேகரன், ராஜேந்திரன் , ஆறுமுகம், பாலுபச்சையப்பன், நாகலிங்கம், சண்முகம், கோமதிநாயகம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். வேலூர் கோட்ட இணைசெயலாளர் வைத்தியலிங்கம் நிறைவுரை ஆற்றினார். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.
    கடலூரில் மருத்துவ கல்லூரி அரசு பெண்கள் கல்லூரி ஆண்கள், சட்டக்கல்லூரி, நவோதையா பள்ளி அமைத்திட கோரியும் வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை ஆதரித்தும் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் பெட்ரோல் , டீசல் விலை குறைத்திட கோரியும் , எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல், வங்கி, ரெயில்வே தனியார் மயமாவதை கண்டித்தும், கடலூர் புதுச்சேரி ரெயில்பாதை திட்டம் வராமல் தடுப்பதை கண்டித்தும், சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் கடலூர் மாநகராட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி அமைத்திட கோரியும், கடலூரில் மருத்துவ கல்லூரி அரசு பெண்கள் கல்லூரி ஆண்கள், மகளிர் பாலிடெக்னிக் , சட்டக்கல்லூரி, நவோதையா பள்ளி அமைத்திட கோரியும் வருகிற 28, 29-ந்தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை ஆதரித்தும் ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணைபொதுச்செயலாளர் புருஷோதமன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு செயலாளர் கருப்பையன் பேசினார் . கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ணபிரான், மாயவேல் கோபால், லட்சுமிநாராயணன், காசிநாதன், ரமணி , கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் செல்வகணபதி, பன்னீர்செல்வம், இளங்கோவன், ரெங்கநாதன், செல்வராஜ், மோகன், கண்ணன், நடராஜன், திருநாவுக்கரசு, குணசேகரன், ராஜேந்திரன் , ஆறுமுகம், பாலுபச்சையப்பன், நாகலிங்கம், சண்முகம், ,கோமதிநாயகம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். வேலூர் கோட்ட இணைசெயலாளர் வைத்தியலிங்கம் நிறைவுரை ஆற்றினார். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.
    பண்ருட்டி அருகே குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 32). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (24).

    இன்று காலை கணவன்- மனைவி இருவரும் டீக்கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். அப்போது கணவன்- மனைவி இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் காயத்ரியை கோபத்தில் திட்டிய முரளி கடையை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் காயத்ரி மனமுடைந்தார்.

    உடனே கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். காயத்ரியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சட்டசபை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பஞ்சாயத்து தலைவர்களுடன் 2-வது நாளாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணா கிராம ஒன்றிய 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த 8 மாதமாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்காததை கண்டித்து சட்டசபை முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக செல்ல முயன்றனர்.

    இதனை அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவுபடி, துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், அசோகன், நந்த குமார், ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் பஞ்சாயத்து தலைவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் பேசினர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, தாசில்தார் சிவா.கார்த்திகேயன் ஆகியோர் உறுதியளித்தனர்.

    இதனால் சமாதானம் அடைந்த பஞ்சாயத்து தலைவர்களை மீண்டும் நேற்று பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பி.டி.ஒ.க்கள் சித்ரா, விஜயா உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முழுவதுமாக தவிர்த்து கடலூர் மாநகராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் கூறினார்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணர்வு கூட்டம் வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதுமாக பயன்படுத்துவதை வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் மாசு ஏற்பட்டு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உருவாகும்.

    மேலும் பொதுமக்கள், வணிகர்கள் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் பொருட்கள் வாங்கச் செல்லும்போது கண்டிப்பாக மஞ்சப்பை கொண்டு செல்ல வேண்டும்.

    இதன் மூலம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது முழுவதுமாக தவிர்த்து கடலூர் மாநகராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநகராட்சியாக மாற்ற அனைவரும் தமிழக முதலமைச்சர் உத்தரவை கடைபிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன், பொறியாளர் பொறுப்பு மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் ராஜா, வணிகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×