என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்
    X
    பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

    பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- பண்ருட்டி நகர்மன்ற தலைவர் பேச்சு

    பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பண்ருட்டியில் நடந்தது.
    பண்ருட்டி:

    பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பண்ருட்டியில் நடந்தது. நகராட்சிஆணையாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது:- ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

    எனவே வருகிற 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தவும்,விற்பனை செய்யவும் கூடாது அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும். நகர் மன்ற உறுப்பினர்கள், வியாபார பிரமுகர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துப்புரவு அலுவலர் முருகேசன் வரவேற்றார். நகராட்சி மேலாளர் ரவி, துப்புரவு ஆய்வாளர்கள் ஜெயச்சந்திரன், பாக்கியநாதன், கவுன்சிலர்கள் மோகன், ஆனந்தி, ராமலிங்கம், ரமேஷ்,‌ஷமீம் பேகம், லாவண்யா முத்துவேல், சலீம் ரிஷ் வான் சாதிக்பாஷா, சரிநிஷா சபீர்பாஷா, ராமதாஸ்,வெங்கடேசன், பிரியா பாக்கியராஜ்,கார்த்தி, முருகன், சுவாதி, வர்த்தக பிரமுகர்கள் கே.என்.சி. மோகன், வானவில் ராஜா, வீரப்பன், முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×