என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் இன்று வங்கி ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம்
கடலூர்:
அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் வழங்கிவிட்டு, கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்ததை கைவிடவேண்டும். வாராக் கடன்களை முழு கடன் வசூல் செய்தல் வேண்டும்.
வங்கிகளில் வைப்பு நிதி வைத்துள்ள சேமிப்பாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி அளித்திட வேண்டும். வங்கிகளில் வாடிக்கையாளர்களை பாதிக்கும் அதிகபட்ச சேவைக் கட்டணங்களை ரத்து செய்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். வங்கிகளில் தற்காலிக சக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், வங்கி முகவர்கள் பணிகளை வரன்முறைபடுத்தி நிரந்தரமாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை வங்கி முன்பு வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் மீரா தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்க திருமலை, உதவித் தலைவர் ரமணி, வங்கி அதிகாரிகள் சங்க கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்க புதிய செயலாளர் ஸ்ரீதரன் தொடக்க உரையாற்றினார்.
இதில் வேலூர் கோட்டை ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க இணைச் செயலாளர் வைத்திலிங்கம், கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர், வட ஆற்காடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சார்ல்ஸ், கடலூர் வங்கி ஊழியர் சங்க தலைவர் லட்சுமணன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் தாலுகா வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் யயாதி சுப்பாராவ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க சண்முகம் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட மத்திய குழு உறுப்பினர் கோகுல்நாத் நன்றி கூறினார்.






