என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகள் அஜினா தேவி (வயது 21). சிதம்பரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை அஜினா தேவி கல்லூரிக்கு செல்லவில்லை. ஆனால் வீட்டில் இருந்தார். அப்போது கிருஷ்ணன், அவரது மனைவி வெளியே சென்ற சமயத்தில் வீட்டை பூட்டிய அஜினா தேவி திடீர் என தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சிறிது நேரம் கழித்து கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவை தட்டிப்பார்த்த போது நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. பதறி போன அவர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தார். அப்போது அஜினா தேவி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி உடனடியாக அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அஜினா தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அஜினா தேவி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் குளிக்கும் போது தன்னை ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்தார். அதனால்தான் தற்கொலை செய்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது.
போலீசார் வழக்குபதிவு செய்து அஜினா தேவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் மஞ்சகுப்பத்தில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர் செம்மண்டலம் பஸ் நிறுத்தம் அருகில் இரவு நேரத்தில் அழுதுகொண்டிருந்தார். அப்போது ரோந்து சென்ற கடலூர் டி.எஸ்.பி. ஆரோக்கிய ராஜ் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தன்னை காதலன் முன்பு பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து விசாரித்ததில் அந்த பெண்ணின் காதலன் குண்டுஉப்பலவாடியை சேர்ந்த 20 வயது வாலிபர் என்றும். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதும் தெரியவந்தது.
அந்த பெண் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது கம்மியம்பேட்டை பாலத்தின் கீழ்பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் குப்பன்குளத்தை சேர்ந்த கிஷோர் (வயது 19), சதீஷ் (19), கடலூர் புதுபாளையத்தை சேர்ந்த ஆரீப் என தெரியவந்தது.
இவர்களில் ஒருவர்தான் அந்த பெண்ணை காதலன் கண்முன் பலாத்காரம் செய்தார். இதனை வெளியே தெரிவித்தால் காதலன், காதலி சேர்ந்து இருக்கும் போட்டோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து திருப்பாதிரிபுலியூர் போலீஸ்நிலையத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் வைத்திருந்த செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த செல்போன்களில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். எனறாலும் வேறு ஏதேனும் ஆபாச வீடியோக்கள் அழிக்கப்பட்டிருக்கிறதா? வேறு எந்த பெண்களையாவது மிரட்டி அந்த கும்பல் ஆபாச வீடியோக்கள் எடுத்துள்ளதா? இந்த கும்பல் அடிக்கடி யார் யாரிடம் பேசியுள்ளனர்? இது தொடர்பான தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல். விவசாயி. இவர் தனது வயலில் விளைந்த 200 நெல் மூட்டைகளை அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அப்போது அங்கு பணிபுரிந்த எழுத்தர் ராமச்சந்திரன் என்பவர் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் 200 மூட்டைக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
அதிர்ச்சி அடைந்த விவசாயி அழகுவேல் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை சிறுபாக்கம் பகுதிக்கு சென்றனர்.
அப்போது விவசாயி அழகுவேல் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் கிருஷ்ணசாமிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் கிருஷ்ணசாமி, எழுத்தர் ராமச்சந்திரனிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று அந்த பகுதி ஏழை எளிய மக்கள் ரேசன் கடைக்கு சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இந்தநிலையில் அங்கு செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி சமைத்து உண்ண முடியாதவாறு அளவில் பெரியதாகவும், புழு, வண்டுகள் உள்ளது. மேலும் அரிசியில் தூசி, சிறு கற்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.
இதுதவிர இந்த அரிசியை பலமுறை நீரில் சுத்தம் செய்து சமைத்தாலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சிதம்பரம் அருகே முள்ளோடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சத்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆகிறது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்யா வெளியில் சென்றார். வெளியில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. சத்யா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கணவர் மணிகண்டன் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடு என பல்வேறு இடத்தில் தேடினார். எங்கு தேடியும் சத்யா எங்கு போனார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து கணவர் மணிகண்டன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சத்தியா எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் நேற்று நள்ளிரவு 21 வயது பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் தனியாக நின்றார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். தனியாக நின்ற பெண்ணை போலீசார் சென்று பார்த்த போது அவர் அழுது கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:-
கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, 3 வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது எங்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் என்னையும் எனது காதலனையும் ஒன்றாக சேர்த்து வைத்து செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்து விடுவோம் என மிரட்டினர்.
பின்னர் திடீரென்று எனது காதலனை 2 நபர்கள் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டனர். பின்னர் அவர்களில் ஒருவர் நான் எவ்வளவோ தடுத்தும், கதறி கெஞ்சிய போதும் என்னை வலுக்கட்டாயமாக என் காதலன் முன்பு பாலியல் பலாத்காரம் செய்தான். அதன் பின்னர் மீதமுள்ள 2 பேரும் என்னை பலவந்தம் செய்தனர்.
பின்னர் 3 பேரும், என்னையும் என் காதலனையும் மிரட்டி, இங்கு நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பினர்.
இவ்வாறு அவர் கதறியபடி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த 3 நபர்கள் யார் என காதலனிடம் விசாரித்த போது அவர் யார் என தெரியவில்லை என கூறினார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து காதலனிடம் காண்பித்தனர். அப்போது காதலியை கற்பழித்த 3 நபர்கள் இவர்கள்தான் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த 3 நபர்களின் செல்போன்களை கைப்பற்றிய போலீசார் ஏதேனும் கற்பழிப்பு வீடியோ அல்லது புகைப்படம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்
மேலும் இந்த 3 நபர்கள் ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்த மற்றும் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர்சந்தை பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டனர். பின்னர் தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாதவன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் குளோப் ஆகியோர் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் பழனிவேல், ராஜகோபால், எத்திராஜ், ஆளவந்தார், பாபு, சுப்புராயன், சாந்தகுமாரி, அனந்தநாராயணன், ஸ்டாலின், பஞ்சாட்சரம், வைத்திலிங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக கடலூர் அண்ணா பாலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென்று சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் செல்லாததால் 150 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
கடலூர்:
எல்.ஐ.சி பங்கு விற்பனையை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி ஊழியர் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கடலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை செயலாளர் ரேஷிஸ் தலைமை தாங்கினார். வேலூர் கோட்டை இணைச்செயலாளர் வைத்திலிங்கம் வேலைநிறுத்த கோரிக்கைகள் கொடுத்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் வெங்கடேசன், வங்கி ஊழியர் ஓய்வு பெற்ற சங்கத்தின் தலைவர் மருதவாணன், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, கடலூர் தாலுகா ஒன்றிய ஊழியர் சங்கத் தலைவர் மீரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் கிளை பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.






