என் மலர்
கடலூர்
- பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் மறியல் செய்தனர்.
- மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த கரும்பு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும். முன்னதாக இந்த கரும்பை வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் நேரிடையாக கரும்புக்கு பணம் கொடுத்து விடுவார்கள். இதனால் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பொங்கல் தொகுப்பின் போது பன்னீர் கரும்பு வழங்கப்பட்டு வந்தது.
இதேபோல் தி.மு.க. ஆட்சி வந்ததும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று காலை ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் பன்னீர் கரும்புடன் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யாததால் எங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மறுபரிசீலனை செய்து பன்னீர் கரும்பு பொங்கல் தொகுப்புடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்
- கடலூர் மாநகராட்சியில் இதுவரை 30 மாடுகளும், 180 பன்றிகளும் பிடிக்கப்பட்டுள்ளது
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடு், பன்றி் உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் வெளியில் சுற்றினால் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு பிடித்து, கால்நடைகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாபர் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில தினங்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் மற்றும் பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர்.
மேலும் அதன் உரிமையாளர்கள் வந்தபோது அவர்களிடம் உரிய அபராதம் பெறப்பட்டு வருங்காலங்களில் சாலைகளில் பன்றிகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். கடலூர் மாநகராட்சியில் இதுவரை 30 மாடுகளும், 180 பன்றிகளும் பிடிக்கப்பட்டுள்ளது. இது போனற நடவடிக்கைகளினால் வருங்காலங்களில் மாநகராட்சி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். பொதுமக்களும் இடையூறு இன்றி சாலையில் செல்லலாம். மாநகராட்சி ஊழியர்கள் தொடர் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
- வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, மாநகராட்சி கடை வாடகைகள் உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், அதிகாரிகள் தீவிர வரி வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரிகள் மற்றும் மாநகராட்சி கடை வாடகையை உடனடியாக கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் மிக முக்கிய சாலையாக இருந்தவரும் லாரன்ஸ் சாலையில் வள்ளியம்மை பஜார் உள்ளது.
இங்குள்ள ஒரு சில கடைகளுக்கு சொத்து வரி பாக்கி இருப்பதாக மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு, வரி கட்ட வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன. இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தரப்பில் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது 78 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நூதன முறையில் வியாபாரிகள் வரி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது.
- தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.
கடலூர்:
என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது. இது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இங்குள்ள நிலக்கரி கொள்கலன் பிரிவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக தீக்காயமடைந்தவர்கள் நெய்வேலி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. தகவலறிந்து வந்த என்.எல்.சி., நிறுவன உயரதிகாரிகள் திடீரென தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேணுகோபால் வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
- தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கடலூர்:
வடலூர் கோபியார் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது இல்லத்திலிருந்து பெத்தணாங்குப்பம் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்ல முயற்றி செய்த போது, பின்புறமிருந்து வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வடலூர் போலீசார் உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேணுகோபாலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மின்சார கம்பி உரசியதில் கரும்புகள் தீப்பிடித்தது.
- கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரின் சொந்தமான நிலத்தில் கரும்பு விவசாயம் செய்துள்ளார். இன்று காலை அப்பகுதியில் அதிக காற்று வீசுவதால் மேலே செல்லும் மின்சார கம்பி உரசியதில் கரும்புகள் தீப்பிடித்தது. இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலையை அலுவலர் சண்முக தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் கரும்பு நிலங்கள் முழுவதும் தீயில் இருந்து தப்பியது.
- நாய்கள் கூட்டமாக கூச்சல் போட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
- பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை தலை இல்லாமல் கிடந்தது.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையம் செல்லும் வழியில் மேலகுப்பம் பகுதியில் என்எல்சிக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் உள்ள புதர் ஒன்றில் இன்று காலை நாய்கள் கூட்டமாக கூச்சல் போட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் நாய்கள் கூட்டமாக இருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை தலை இல்லாமல் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அம்மேரி கிராம நிர்வாக அதிகாரி பெருமாள் மற்றும் பொதுமக்கள் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தை உடலை நாய்களிடமிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சிளம் குழந்தையை இங்கு வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? யாரேனும் கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- சுவர் விரிசலின் வழியாக பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது.
- பாம்பு மீது ஏதேனும் பொருட்கள் பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ளவர்களை கடித்து விடும். அதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் சேர்ந்தவர் கவிதா. இவர் வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தபோது குட்டி பாம்பு ஒன்று வீட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து பெரிய பாம்பும் பின் தொடர்ந்து சென்று உள்ளது.
அதிர்ச்சி அடைந்த கவிதா மற்றும் அவர்களது பிள்ளைகள் பாம்பை தேடி பார்த்து உள்ளனர். ஆனால் பாம்பு தென்படவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் சுவர் விரிசலில் பாம்பு சண்டையிடும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் சுவர் விரிசலின் வழியாக பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சுவரை உடைத்து உள்ளே இருந்த பாம்பை லாபகமாக பிடித்தார். அந்த பாம்பு 5 அடி நீள நல்ல பாம்பு என தெரிய வந்தது. ஆனால் அந்த பாம்பு ஒரு இரையை விழுங்கி இருந்ததால் நகர முடியாமல் தவித்தது. பின்னர் ஒரு சில நிமிடத்தில் தான் உண்ட இரையை வெளியே கக்கும்போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் குட்டி நல்ல பாம்பை தனது இறையாக விழுங்கியது தெரியவந்தது. பின்னர் பாம்பு தான் விழுங்கிய குட்டி பாம்பை வெளியில் கக்கியது.
இதனை தொடர்ந்து வன அலுவலர் செல்லா, பிடிபட்ட நல்ல பாம்பை பாட்டிலில் அடைத்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் கவிதா நல்ல பாம்பு சாமி பாம்பாகும். ஆகையால் அதனை பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும்.
மேலும் எனது கணவர் இறப்பதற்கு முன்பு 2 பாம்பு ஒன்றாக இருந்தபோது அதில் ஒரு பாம்பை அடித்ததால் இறந்தது. அதன் பின்பு சில மாதங்களில் எனது கணவர் இறந்து விட்டார்.
தற்போது இந்த நல்ல பாம்பு அடிக்கடி எங்கள் வீட்டு பகுதிக்கு வந்து செல்லும். இதுவரை எங்களை எதுவும் செய்ததில்லை. ஆகையால் இது சாமி பாம்பு என கூறினார்.
அப்போது செல்லா பாம்பு மீது ஏதேனும் பொருட்கள் பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ளவர்களை கடித்து விடும். அதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஒத்துழைக்கக் கூடாது. மேலும் இந்த பாம்பை பாதுகாப்பான காட்டுப் பகுதியில் விடுவதன் மூலம் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது என கூறி அங்கிருந்து நல்ல பாம்பை கொண்டு சென்றார். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் .
- துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன் குளம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 7 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக ஒரு சிலர் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் முரளி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வாகனத்துடன் வீடுகளை இடிக்க சென்றனர் . அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், அ.தி.மு.க கவுன்சிலர் தஷ்ணா, நிர்வாகி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் அதிகாரியிடம் பேசுகையில், இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது மேலும் இவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட உள்ளது ஆகையால் வீடுகள் இடிப்பதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த பகுதியில் ஒரு சில கட்டிடங்கள் அரசு இடங்களை ஆக்கிரமித்து பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனையும் உரிய முறையில் அளவீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக ஆணையாளர் நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் தஷ்ணா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் எழில் என்பவர் திடீர் என மண்எண்ணை கேனுடன் வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே துணை மேயர் தாமரைசெல்வன் மற்றும் போலீசார் மண்எண்ணை கேனை பிடுங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- கெல்வின் (வயது37) என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
- ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆபத்தாரணபுரம் பகுதியில் கெல்வின் (வயது37) என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனையொட்டி அவர்கடையிலிருந்து ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர். இதே போல் ராகவேந்திரா சிட்டியில் சபியுல்லா பெட்டி க்கடையில் ரூ.1500, மதிப்பிலான, புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
- பண்ருட்டியில் சாராயம் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சாராயபாக்கெட் களையும்,கஞ்சாபொட்டலங்களையும் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பண்ருட்டி அருகே மனம் தவிழ்ந்த புத்தூர் சுடுகாடு அருகில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சாண்டி(வயது21) என்பவரைகைது செய்தார். பின்னர் அவரிடம் இருந்து ஏராளமான சாராயபாக்கெட் களையும்,கஞ்சாபொட்டலங்களையும் பறிமுதல் செய்து பண்ருட்டி படுத்தி சிறையில் அடைத்தனர்.






