என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை உடல்
நெய்வேலி அருகே புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை உடல்
- நாய்கள் கூட்டமாக கூச்சல் போட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
- பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை தலை இல்லாமல் கிடந்தது.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையம் செல்லும் வழியில் மேலகுப்பம் பகுதியில் என்எல்சிக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் உள்ள புதர் ஒன்றில் இன்று காலை நாய்கள் கூட்டமாக கூச்சல் போட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் நாய்கள் கூட்டமாக இருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை தலை இல்லாமல் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அம்மேரி கிராம நிர்வாக அதிகாரி பெருமாள் மற்றும் பொதுமக்கள் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தை உடலை நாய்களிடமிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சிளம் குழந்தையை இங்கு வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? யாரேனும் கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






