என் மலர்
கடலூர்
- கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது.
- மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருந்தக ங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்வதாக மருத்துவ துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைனையடுத்து வேப்பூர் அரசு வட்ட தலைமை டாக்டர் அகிலன் கண்ணன் , மருந்தக ஆய்வாளர் நாராயணசாமி , வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட குழுவினர் வேப்பூர் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் கரு கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கரு கலைப்பு மாத்திரைகள் முறையான மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது என மருந்தக உரிமையாளர்களை எச்சரித்தனர் இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது.
- என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்வேலி:
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு சமைத்து சாப்பிட்டனர்.
இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து இன்று 8-வது நாளாக ஜீவா ஒப்பத தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
- தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.
நெய்வேலி:
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 7-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் ஏற்படும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலூர்:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் ஏற்படும் என மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- பயிரிட்டு வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாலிக், சின்னதுரை ஆகியோர் வளையமாதேவி கிராமத்திற்கு வந்தனர்.
கடலூர்:
என்.எல்.சி. 2-ம் சுரங்க விரிவாகத்திற்காகவும், 3-ம் சுரங்கம் அமைப்பதற்காகவும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி, கரிவெட்டி போன்ற கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இங்கு கடந்த ஒரு வாரகாலமாக வாய்க்கால் அமைக்கும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அங்கு பயிரிட்டு வரும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டமும், அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
அங்குள்ள மக்களை காண்பதற்காக வந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் தினமும் திருப்பி அனுப்படுகின்றனர். இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாலிக், சின்னதுரை ஆகியோர் வளையமாதேவி கிராமத்திற்கு வந்தனர். இவர்களை அங்கிருந்த போலீசார் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் தடுத்து நிறுத்தினர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார். இதையடுத்து அங்கேயே கோஷங்கள் எழுப்பி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது.
- நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தார்,
கடலூர்:
சிதம்பரம் அடுத்த வீரசோ ழகன் பகுதியை சேர்ந்த வர் பாலமுருகன் (வயது 50). விவசாயி. இவருக்கு கடந்த சில தினங்க ளுக்கு முன்பாக கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை நடை பெற்றது. இதையடுத்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பாலமுருகனுக்கு அடிக்கடி கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாத்திரை உட்கொண்டும் வலி குறையாமல் துடித்துள்ளார். வலி பொருக்க முடியாத பால முருகன், நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரது குடும்பத்தார், பாலமுருகனை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பான புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 37). முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டி பாளையத்திற்கு சென்றார் . அங்கு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த காத்தவராயனை ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார்.
- 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சொரத்தன்குழி பஸ் நிலையம் அருகே பாப்பா ன்கொல்லை பழனிவேல் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தங்கமணி கடையில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த மாம்பழம் என்கிற அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார். தங்கமணி தரமறுத்ததால் அவரை ஆபாசமாக திட்டினார்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி கடையில் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அசோக் ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.
- 2-ம் கட்ட முகாம்கள் 5-ந் தேதி தொடங்குகிறது
- விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24.07.2023 முதல் நடை பெற்று வருகிறது. மேற்படி முதற்கட்ட விண்ணப்ப பதிவிற்காக ஏற்கனவே நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் உள்ள முகாம்கள் நடை பெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக ஏற்கனவே 20.07.2023 முதல் 23.07.2023 வரை வழங்கப்பட்டது.
மேற்படி விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற்ற வர்கள் விண்ணபங்களை இதுவரை முகாமில் அளித்துக் கொள்ள வில்லை என்றால் வருகிற 3.8.2023 மற்றும் 4.8.2023 ஆகிய நாட்களில் தங்களுக்குரிய நியாய விலைக் கடை முகாம்களில் கொடுத்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடை பெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரி பார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் வரும் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலைகடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய வற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக இன்று (1-ந் தேதி) முதல் 4.8.2023 வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி விண்ணப்பங் களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 14 ஒன்றி யங்களில் 557 நியாய விலைக் கடைகளில் 2-ம் கட்ட முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- லாரி மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கே விழுந்தது.
- உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து முந்திரி தொலும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இது பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவில் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் புங்கை மரத்தின் மீது மோதியது. இதில் புங்கைமரம் அடியோடு சாய்ந்தது சாலையின் குறுக்கோ விழுந்தது. மேலும், மின்கம்பத்தில் இருந்த கம்பிகள்அறுந்து சாலையில் தொங்கியது. உடனடியாக மின்சாரம் நின்றதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சரிசெய்து மின் இணைப்பு வழங்கினர்.
- ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
- சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
நெய்வேலி:
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். 6-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கடலூரில் பேச்சுவார்த்தை நடக்கிறது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும்.
- போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
- கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.
இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. பா.ம.க. போராட்டம் நடத்தியதால் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பணி மீண்டும் தொடங்கியது. விளைநிலங்களுக்கு செல்லாமல் மேல் வளையமாதேவியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கரைகளை சமன்செய்யும் பணியிலும், பாலத்தின் அருகில் கால்வாய் வெட்டும் பணியிலும் என்.எல்.சி. நிறுவனம் ஈடுபட்டது.
4-வது நாளான நேற்று பணிகள் நடைபெற்றது. விடிய விடிய இந்த பணி நடந்தது. இன்று 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,500 மீட்டர் அகலத்தில் சுமார் 1 ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வளையமாதேவியில் விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண் மொழிதேவன் அறிவித்து இருந்தார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
வளையமாதேவியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்காததால் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிவித்தார்.
அதன்படி இன்று காலை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






