என் மலர்
கோயம்புத்தூர்
- மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மணமகனை தேடினர்.
- மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளகுறிச்சியை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-வது ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 19 வயது ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆட்டோ டிரைவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என அவர்கள் தங்களது மகளுக்கு அறிவுரை கூறினார்.
மேலும் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மணமகனை தேடினர். பின்னர் வாலிபர் ஒருவரை பேசி நேற்று திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர். ஆனால் மாணவிக்கு இது பிடிக்கவில்லை.
வேதனை அடைந்த மாணவி நேற்று மாலை இதுகுறித்து தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர்.
அதன்படி மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தங்களது மகள் மாயமானதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தங்களது மகளை அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து அவர்கள் ஆழியாறு போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
- வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது.
- கடந்த வாரம் மதுரையில் 8 கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது.
கோவை:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார்.
தமிழகத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ள ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் நடைபயிற்சி மேற்கொள்ள கோவையில் இடம் தேர்வு செய்யும் பணியை அவர் இன்று காலை ஆய்வு செய்தார். கோவை ரேஸ்கோர்ஸ் முதல் வாலாங்குளம் வரையிலான 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வை அவர் மேற்கொண்டார். இதற்காக அவர் 8 கிலோ மீட்டர் நடந்தே சென்றார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
ஜப்பான் டோக்கியோ சென்ற போது அங்கு 8 கிலோமீட்டர் தூரம் ஹெல்த் வாக் ரோடு அமைக்கப்பட்டு இருந்தது. மனிதர்கள் தினந்தோறும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் சீராக இருக்கும்.
இதேபோல் தமிழகத்தில் 38 வருவாய் மாவட்ட தலைநகரங்களில் 8 கிலோ மீட்டர் நடைபாதையை அமைத்து மரம், இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடி வெடுத்துள்ளோம்.
மக்களை நடப்பதற்கு பயிற்றுவிக்கும் வகையில் இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடந்தது.
கடந்த வாரம் மதுரையில் 8 கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பாதையை தேர்வு செய்து பணிகளை செய்து வருகிறார்கள். விரைவில் முதலமைச்சர் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் நடைபாதைகளை தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடம் கோவை ரேஸ்கோர்சாக உள்ளது. வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைப்பது போன்ற பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
- சுப்பிரமணியம் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
- 2¾ பவுன் தங்க நகைகளை கொள்ளை போனது.
கோவை
கோவை சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 63). ஓய்வு பெற்ற போலீஸ்காரர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் ராமநாதபுரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
அப்போது சுப்பிரமணியம் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம், உள்பட 2 ¾பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய சுப்பிரமணியம் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சஞ்சய்குமார் பெரிய நாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக உள்ளார்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கோவை,
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவர் பெரிய நாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக உள்ளார். இவரது மனைவி பூர்ணிமா (வயது 23). இவர்களுக்கு கடந்த 1 அரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று தனது தாயை தொடர்பு கொண்ட இவர் கணவருடன் வீட்டிற்கு வருவதாக செல்போன் மூலம் தெரிவித்தார். ஆனால் செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பூர்ணிமா தனது அறைக்கு சென்றார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தொங்கி னார். இதனை பார்த்து அவரது குடும்ப த்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக பூர்ணிமாவை மீட்டு கோவையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பூர்ணிமா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1 அரை வருடத்ததில் பூர்ணிமா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- கடந்த 15 ஆணடுகளாக இங்கு சென்டர் மீடியேட்டர் இல்லாமல் ஒரு வழிப்பாதை இருக்கிறது.
- கீழே விழும் தம்பதி மீது லாரி ஏறி இறங்கும் காட்சியும் பதிவாகி உள்ளது.
நீலாம்பூர், ஜூன்.26-
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள புளியங்காட்டை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது66). இவரது மனைவி பாக்கி யலட்சுமி(60).
இவர்களுக்கு கவுதம் (31) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தற்போது உறவினர் ஒருவர் வீட்டில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கே ற்பதற்காக கவுதம் சிலதின ங்களுக்கு முன்பு புளியங்கா ட்டிற்கு வந்தார்.
நேற்று சிங்காநல்லூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெகநாதன், அவரது மனைவி பாக்கியலட்சுமி ஒரு மோட்டார் சைக்கிளி லும், கவுதம், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கோவைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் திருச்சி- கோவை சாலையில் சிந்தா மணிபுதூர் அருகே உள்ள கொச்சி சாலையில் வந்தனர். பின்னர் அந்த சாலையில் வலதுபுறமாக திரும்ப முயன்றனர்.
அந்த சமயம் அவ்வழியாக கேரளாவை நோக்கி வந்த லாரி ஒன்று வேகமாக வந்து ஜெகநாதனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
அப்போது லாரியின் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியதில் தம்பதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
பெற்றோர் தன் கண்முன் விபத்தில் சிக்கி இறந்ததை நேரில் பார்த்த கவுதம் கதறி அழுதார். இந்த அங்கிருந்த வர்களை கண் கலங்க செய்தது.
தகவல் அறிந்த சூலூர் போலீசார் விரைந்து வந்து ஜெகநாதன், பாக்கியலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்ைத ஏற்படுத்தி யதாக லாரி டிரைவர் முகமது சாதிக்கிடம் விசா ரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தம்பதி மீது லாரி மோதும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த வீடியோ காட்சியில் தம்பதி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வலது புறமாக திரும்ப முயற்சிக்கின்றனர்.
அப்போது பின்னால் வரக்கூடிய லாரியை ஓட்டி வந்தவர் சிக்னல் கொடுக்கா மலும், ஹாரன் அடிக்கா மலும் வந்து, இவர்கள் மீது மோதும் காட்சிகளும், கீழே விழும் அவர்கள் மீது லாரி ஏறி இறங்கும் காட்சியும் உள்ளது. இது பார்ப்பவ ர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி யது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதா வது:-
சிந்தாமணி புதூரில் உள்ள கொச்சி பைபாஸ் சாலையில் ஏராளமான விபத்துக்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
கடந்த 15 ஆணடுகளாக இங்கு சென்டர் மீடியேட்டர் இல்லாமல் ஒரு வழிப்பாதை இருக்கிறது. இதனால் அடிக்கடி இங்கு விபத்து க்கள் நடந்து வருகிறது.
எனவே விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் சென்டர் மீடியே ட்டர் வைக்க வேண்டும், போக்குவரத்து சீர் செய்யும் பணியில் போலீசாரும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த காப்பகம் 28-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
- 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வசதி க்காக குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, சமூக நலம், குழந்தைகள் பாதுகாப்பு, தமிழ் வளர்ச்சி, கருவூலம், கலால், ஆதிதிராவிடர் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், சமூக பாதுகாப்பு, மாற்று த்திறனாளிகள் மறுவாழ்வு உள்ளிட்ட துறைகளில் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர்.
இவர்களில் பள்ளி செல்லும் வயதை அடை யாத குழந்தைகள் இருக்கும் பெற்றோரும் உள்ளனர். அவர்களின் நலன் கருதி, குழந்தைகள் காப்பகம் அமைக்க கலெக்டர் கிரா ந்திகுமார் உத்தரவி ட்டார்.
அதன்படி கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கட்டிடத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூடம் அருகே காப்பகம் அமைக்க ப்பட்டு ள்ளது.
சின்னஞ்சிறு குழந்தை கள் மகிழ்ச்சியான சூழலில், பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அக்கூடம் முழுவதும் விலங்குகள், பறவைகளின் உருவங்கள் கலர்,கலராக வரையப்ப ட்டுள்ளன. கரும் பலகை, தொலைக்காட்சி ஆகிய வையும் நிறுவப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பும் விளையாட்டு சாதன ங்களும், குட்டி நாற்காலி களும் வாங்கப்பட்டுள்ளன.
வருகிற 28-ந் தேதி முதல் செயல்படுத்த கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார். அதற்காக கலெ க்டரின் நேர்முக உதவியா ளர் கோகிலா தலைமையி லான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். குழந்தைகளை பராமரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஒரு ஆசிரியை நியமிக்கப்பட உள்ளனர்.
ஒருங்கிணைந்த ஊட்ட ச்சத்து மேம்பாட்டு திட்டம் மூலம் ஊழியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டு ள்ளது.
கலெக்டரின் இம்முயற்சி சிறு குழந்தைகளுடன் இருக்கும் அரசு ஊழியர்க ளுக்கு பேருதவியாக இருக்கும். பணியிடத்தி லேயே குழந்தைகள் காப்ப கமும் இருப்பதால், நிம்மதி யான மனநிலையுடன் அரசு ஊழியர்கள் பணியாற்றும் வாய்ப்பு உருவாகும் என அதிகாரிகள் எதிர்பா ர்க்கின்றனர்.
- சென்னைக்கு தினசரி நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.
- பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் தவறி விழுந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.சென்னை பெருங்குடியைச்சேர்ந்த பாக்யராஜ் (45). டீ தூள் வியாபாரி. இவர் வியாபாரம் நிமித்தமாக ஊட்டி செல்ல திட்டமிட்டார்.
அதன்பேரில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் பயணித்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கிய அவர் பின்னர் ஊட்டி செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ெரயில் வரும் போது அசதியில் அவர் உறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் ெரயிலில் உள்ள நடைபாதையில் தவறி விழுந்து உள்ளது. இதனை அவர் கவனிக்கவில்லை. அப்போது ரோந்துப்பணியில் இருந்த ெரயில்வே காவலர் முருகன் அப்பணத்தை மீட்டு மேட்டுப்பாளையம் ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒப்படைத்தார்.இந்த நிலையில் பணம் தவற விட்டது குறித்து அறிந்த ெரயில் பயணி பாக்கியராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ெரயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ெரயில் பயணி பாக்யராஜிடம் விசாரித்த பின்னர் அந்த பணத்தினை பத்திரமாக மேட்டுப்பாளையம் ெரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
ெரயிலில் பயணி தவற விட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
- தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலய தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.
தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியை அருட்தந்தை.விக்டர் பால்ராஜ் நிறைவேற்றினர். பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைத்து தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தேர் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், அண்ணா மார்கெட், அண்ணாஜி ராவ் ரோடு, ஊட்டி ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஹென்றி லாரன்ஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
- அதிக விலைக்கு விற்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 3 நாட்களில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
கோவை,
நாடு முழுவதும் வருகிற 29-ந் தேதி இஸ்லாமிய மக்களின் தியாக திருநா ளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்து ஏழை- எளிய மக்கள் மற்றும் உறவி ர்களுக்கு வழங்குவது வழக்கம்.
இதற்காக கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய உக்கடம், கோட்டைமேடு, புல்லுக்காடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர்.
மேலும் பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் ஆடுகளின் விலை ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-
கோவை மாநகர பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்ப னைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. குறைந்த பட்சம் இந்த 3 நாட்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
கோவை உக்கடம் போத்தனூர் கரும்புக்கடை கோட்டைமேடு பொன் விழா நகர் போன்ற பகுதிகளில் ஆடு வியா பாரம் சூடு பிடித்து ள்ளது. தமிழகத்தில் செம்பட்டி, மதுரை, திண்டுக்கல், பல்லடம் போன்ற சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்ப னைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆட்டுக்குத் தேவையான புல் கேரளா பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டுவர ப்பட்டன. இந்த புல்லின் விலை ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஜூன் மாதம் இறுதியாகியும் ஒரு கனமழை கூட பெய்யவில்லை.
- சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது.
கோவை,
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பெய்யும். தற்போது ஜூன் மாதம் கடைசி வாரத்துக்கு வந்த நிலையிலும், ஒரு கனமழை கூட கோவை மாவட்டத்தில் பெய்யவில்லை.
அணைகள் வறண்டன
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது. அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆங்காங்கே குட்டை குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.
மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையிலும் மொத்த உயரம் 100 அடியில், 81 அடி உயரத்துக்கே தண்ணீர் இருக்கிறது. பாதிக்கும் மேல் சேறு நிரம்பியிருக்கும் இந்த அணையும், மழையை எதிர்பார்த்தே இருக்கிறது.
இந்த பகுதியில் இருக்கும் பாசன அணைகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆழியாறு அணையில் 57 அடி (மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி), திருமூர்த்தி அணையில் 23 அடி (மொத்த உயரம் 60 அடி), பரம்பிக்குளத்தில் 15 அடி (மொத்த உயரம் 72 அடி) மட்டுமே தண்ணீர் இருக்கிறது.
ஜூன் மாதத்தில் நேற்று வரை பெய்திருக்க வேண்டிய இயல்பு மழை, 137.2 மி.மீ., ஆகும். ஆனால், கண்ணாமூச்சி காட்டும் பருவக்காற்றால், இதுவரை 58.4 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது, 57 சதவீதம் பற்றாக்குறை யாகும்.வரும் நாட்களிலும் மழை பெய்ய தவறினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- அரசு பள்ளியை போன்று தனியார் பள்ளிகளும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.
- தனியார் பள்ளிகளையும் நாங்கள் எங்கள் பள்ளி போன்று தான் கருதுகிறோம்.
வடவள்ளி:
கோவை தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி இயக்குனர் எஸ்.நாகராஜ் முருகன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கோவை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கிகார ஆணைகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
அரசு பள்ளியை போன்று தனியார் பள்ளிகளும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.
சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் அரசு பள்ளிகளை போன்று தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது.
தனியார் பள்ளிகளையும் நாங்கள் எங்கள் பள்ளி போன்று தான் கருதுகிறோம். அனைத்து மாணவர்களின் நலன் கருதியே நாங்கள் பலவற்றை செய்து வருகிறோம்.
அரசு பள்ளியும், தனியார் பள்ளியும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் இணைந்து செயல்பட்டு சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமித்து தாய்மொழியை கற்று கொடுக்க வேண்டும்.
கொரோனாவால் மக்கள் மட்டுமல்ல பள்ளி நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு துணையாக நீங்கள் இருங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் திருச்சி தனியார் பள்ளி இயக்கக இணை இயக்குனர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி நன்றி தெரிவித்தார்.
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
- ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.
கோவை:
கோவையில் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
இந்த சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துக்களும், இந்த விபத்துக்களில் உயிரிழப்புகளும் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மாநகர போலீசார், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்கவும், 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று ஒருசிலர் போலீசாரின் உத்தரவை கடைபிடித்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
இந்த திட்டம் அமலானதை அடுத்து முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகர போலீசார் முக்கியமான சாலைகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாலைகளில் வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி அணியவில்லை என்றால், அந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாநகரில் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே இதனை கடைபிடித்தனர். ஆனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதனை யாரும் கடைபிடித்த மாதிரி தெரியவில்லை.
வழக்கம் போலவே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.
விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறோம். ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






