என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதால், உங்களுக்குள் இருக்கும் தனித்திறைமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    • நூலகம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் ஐ.ஜி., தமிழ் சந்திரன் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளியை, பயிற்சி பிரிவு ஐ.ஜி., தமிழ் சந்திரன் ஆய்வு செய்தார். கோவை பள்ளிக்கு வந்த அவருக்கு, பள்ளி முதல்வர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், பள்ளியின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஐ.ஜி. தமிழ் சந்திரன், பயிற்சி பெறும் போலீசாருடன் கலந்துரையாடினார்.

    போலீசார் மத்தியில் அவர் பேசியதாவது:-

    பயிற்சிக்கு பிறகு பணியிலும், வாழ்க்கையிலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இப்போதே கற்றுத்தேர்ந்து கொள்ள வேண்டும். போலீஸ் பணிக்கு உடல்தகுதி மிகவும் முக்கியமானது. எக்காரணம் கொண்டும் தொப்பை வருவதற்கு விடக்கூடாது. போலீஸ் பணியில் சேரும் போது, என்ன அளவில் உடை அணிந்தீர்களோ, அதே அளவு கொண்ட உடையை ஓய்வு பெறும்போ தும் அணிவது முக்கியம். அப்போதுதான், நீங்கள் உடல் தகுதியோடு இருப்பதாக அர்த்தம்.

    போலீஸ் பணியில் சேர்ந்து விட்டதால், உங்களுக்குள் இருக்கும் தனித்திறைமையை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். போலீஸ் பணியானது, மன அழுத்தம் தரக்கூடியது. அதில் இருந்து விடுபட, தனித்திறமையை வளர்த்து பராமரிப்பது முக்கியம். இவ்வாறு ஐ.ஜி., தமிழ் சந்திரன் பேசினார்.

    போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நூலகம், உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

    • பேரணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
    • போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வால்பாறை,

    உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறை போலீஸ் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

    வால்பாறை அரசு கல்லூரி நுழைவாயிலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி காந்தி சிலை, போஸ்ட் ஆபிஸ், அண்ணா சிலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
    • ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான களரிப் போட்டியில் பங்கேற்ற ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 7 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார்.

    பாரத தேசத்தின் தற்காப்பு கலைகளில் ஒன்றாக களரிப் பயட்டு திகழ்கிறது. வீரமும் சாகசமும் நிறைந்த இக்கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு களரிப் பயட்டு சங்கம் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாநில அளவிலான களரிப் போட்டி திருப்பூரில் ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். கோவையில் இருந்து ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மெய்பயட்டு, சுவாடுகள், உருமி, ஹை கிக், ஸ்வார்ட் அண்ட் சீல்ட் ஆகிய 5 பிரிவுகளில் கலந்து கொண்ட ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் மொத்தம் 23 பதக்கங்களை தட்டி தூக்கினர்.

    குறிப்பாக, ஸ்ரீனிவாசன், தமோஹரா, த்யான், அதிரா, ஈஷா, சுவாமி மஹன்யாஸ், சுவாமி மிதுன் ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

    கோவையில் உள்ள ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியில் இந்தியாவின் பாரம்பரிய கலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. யோகா, இசை, நடனம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் சேர்த்து தற்காப்பு கலையான களரியும் கடந்த 15 வருடங்களாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டு அர்ப்பணிப்புக்கு பிறகு கல்வியை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் 'ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி' என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

    • திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை,

    கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை போன்ற துறைகளை பா.ஜனதா அரசியலுக்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் நாகராஜன் தலைமையில் கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து கோவை மண்டல வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என கோரி சாலையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 -க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழ் பண்பாடு, கலாச்சாரம், சித்தர்களை பற்றி தெரிந்துகொள்ள கோவை வந்துள்ளோம் என்றனர்.
    • கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சித்த நாடி குறித்து ஆலோசனை செய்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் குருடிமலை அடிவாரம் அருகே புதிதாக சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இந்த கோவிலில் சுந்தரலிங்கேஸ்வரருடன் சுந்தரவல்லி அம்பாளும் ஒரே சன்னதியில் இருக்கும்படி கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களை சார்ந்த சித்த மருத்துவர்கள், வர்ம கலைஞர்கள் 15 பேர் மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 16 பேர் கொண்ட குழுவினர் ரஷ்ய தமிழர் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் கடந்த 14 -ந்தேதி சென்னை வந்தனர். பின்னர் அங்கிருந்து மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு சென்று பார்த்தனர்.

    காரைக்காலை சேர்ந்த சித்தர் புத்த கயா அழைப்பின் பேரில் தற்போது குருடிமலை அடிவாரம் அருகே கட்டப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலை பார்வையிட்டனர். இவர்களில் 9 பேர் கிறிஸ்தவ மதத்தையும், 7 பேர் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களை கோவில் நிர்வாகிகள் ரமேஷ், கனகராஜ், மோகன், தாமு மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர் சீனிவாசன் ரஷ்யர்களை மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சித்த நாடி குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் காரைக்கா லை சேர்ந்த சித்தர் புத்த கயா ரஷ்ய நாட்டவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

    இதுகுறித்து ரஷ்ய குழுவை சேர்ந்த பேராசிரியர் முருகதாஸ் கூறியதாவது,

    உலகில் எங்கும் இல்லாத வகையில் கலாச்சாரம், பண்பாட்டில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதனை பார்ப்பதற்காகவும், சித்தா, வர்ம கலைகளின் பிறப்பிடமான இந்தியாவிற்கு ரஷ்யா நாட்டை சேர்ந்த மொத்தம் 16 பேர் எனது தலைமையில் வந்துள்ளனர். நாங்கள் தமிழகத்தின் பல இடங்களிலுள்ள கோவில்கள், சித்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். தற்போது கோவைக்கு வந்து ள்ளோம். மேலும் வாழ்வை உணர்ந்து வாழ, சித்தர்கள் வழியை ரஷ்ய நாட்டவர்களும் தெரிந்து கொள்ளவே இது போன்ற பயணங்களை மேற்கொள்கி றோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ரஷ்ய மாணவி ஒருவர் கூறும் போது, நாங்கள் தமிழ் பண்பாடு, கலாச்சாரம், சித்தர்களை பற்றி தெரிந்துகொள்ள கோவை வந்துள்ளோம் என்றார்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் குருடிமலை அடிவாரம் அருகே புதிதாக சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    இந்த கோவிலில் சுந்தரலிங்கேஸ்வரருடன் சுந்தரவல்லி அம்பாளும் ஒரே சன்னதியில் இருக்கும்படி கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களை சார்ந்த சித்த மருத்துவர்கள், வர்ம கலைஞர்கள் 15 பேர் மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 16 பேர் கொண்ட குழுவினர் ரஷ்ய தமிழர் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் கடந்த 14 -ந்தேதி சென்னை வந்தனர். பின்னர் அங்கிருந்து மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு சென்று பார்த்தனர்.

    காரைக்காலை சேர்ந்த சித்தர் புத்த கயா அழைப்பின் பேரில் தற்போது குருடிமலை அடிவாரம் அருகே கட்டப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலை பார்வையிட்டனர். இவர்களில் 9 பேர் கிறிஸ்தவ மதத்தையும், 7 பேர் இஸ்லாமிய மதத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களை கோவில் நிர்வாகிகள் ரமேஷ், கனகராஜ், மோகன், தாமு மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர் சீனிவாசன் ரஷ்யர்களை மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சித்த நாடி குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் காரைக்கா லை சேர்ந்த சித்தர் புத்த கயா ரஷ்ய நாட்டவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

    இதுகுறித்து ரஷ்ய குழுவை சேர்ந்த பேராசிரியர் முருகதாஸ் கூறியதாவது,

    உலகில் எங்கும் இல்லாத வகையில் கலாச்சாரம், பண்பாட்டில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதனை பார்ப்பதற்காகவும், சித்தா, வர்ம கலைகளின் பிறப்பிடமான இந்தியாவிற்கு ரஷ்யா நாட்டை சேர்ந்த மொத்தம் 16 பேர் எனது தலைமையில் வந்துள்ளனர். நாங்கள் தமிழகத்தின் பல இடங்களிலுள்ள கோவில்கள், சித்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தோம். தற்போது கோவைக்கு வந்து ள்ளோம். மேலும் வாழ்வை உணர்ந்து வாழ, சித்தர்கள் வழியை ரஷ்ய நாட்டவர்களும் தெரிந்து கொள்ளவே இது போன்ற பயணங்களை மேற்கொள்கி றோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ரஷ்ய மாணவி ஒருவர் கூறும் போது, நாங்கள் தமிழ் பண்பாடு, கலாச்சாரம், சித்தர்களை பற்றி தெரிந்துகொள்ள கோவை வந்துள்ளோம் என்றார்.

    • சத்தியபாண்டி கொலை வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    • ரவுடி தில்ஜீத்க்கு போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்ற போது கால்முறிவு ஏற்பட்டது.

    கோவை,

    கோவையில் சத்தியபாண்டி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவ ர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் தற்போது கோவையில் வசித்து வரும் தில்ஜித் (வயது 44) என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சத்திய பாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில், தலைமறைவாக இருந்த தில்ஜித்தை போலீசார் தேடி வந்தனர்.

    அவர் கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை, கொல்கத்தா என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்தார்.

    இந்தநிலையில் தில்ஜித் கோவை வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரை நேற்றிரவு ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்ய சென்றனர். போலீசாரை பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓடினார்.

    அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது.

    இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட தில்ஜித்தை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    • முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது.
    • யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குபட்பட்ட சமயபுரம், நெல்லிமலை வனப்பகுதிகளில் நடமாடிய பாகுபலி யானை தற்போது வாயில் காயத்துடன் சுற்றித்திரிகிறது.

    இதையடுத்து வனத்திலுள்ள பாகுபலி காட்டுயானையை கண்காணிக்க கடந்த வாரம் சாடிவயல் வனப்பகுதியில் இருந்த 2 மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது.

    இந்த யானைகளின் உதவியுடன் பாகுபலி காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க 2 மருத்துவ குழுவினர் வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக பாகுபலி யானையை மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

    பாகுபலி யானை இடம் மாறி ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் குன்னூர் ஆறு வரும் வழியில் ஒரே இடத்தில் நின்று 3 மணி நேரம் பலா பழத்தை ருசித்துள்ளது. அந்த இடம் யானையை மீட்க முடியாத அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. அதனால் வனத்துறையினரால் நேற்று யானையை மீட்க முடியவில்லை. இன்றும் தொடர்ந்து பாகுபலி யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறியதாவது:-

    பாகுபலி காட்டுயானைக்கு வலியின் தாக்கம் அதிகம் உள்ளதால் தான் கடந்த வாரம் தாசனூர் பகுதியிலுள்ள கோவில் சுவரை உடைத்து சென்றுள்ளது. இதுவரை பயிர்களை சேதப்படுத்தி வந்தது தற்போது உடைமைகளை சேதப்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். 

    • சத்தியநாராயணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கும்பகோணம் உடையாளூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சத்தியநாராயணன் (வயது 19). இவர் திருமலையாம் பாளையத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி அங்குள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று அறையில் தனியாக இருந்த சத்தியநாராயணன் அறையில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நண்பர்களின் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட சத்தியநாராயணன் கும்பகோணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பேசாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் இறந்த சத்தியநாராயணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கூடலூர் நகர தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.
    • தமிழ்நாடு முன்னேற விடாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

    கவுண்டம்பாளையம்,

    பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகர தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதற்கு கூடலூர் நகர மன்ற தலைவரும், செயலா ளருமான அறிவரசு தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ் வரவே ற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், கூடலூர் நகராட்சி துணை தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்க ளாக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிக் கொண்டி ருக்கிறார். அவரது பணிக ளுக்கு அனைவரும் உதவியாக இருக்க வேண்டும்.

    தமிழ்நாடு முன்னேற விடாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை நாம் முறியடித்தாக வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றி, வரும் தேர்தலில் பா.ஜ.க. அரசை வீழ்த்தி ஆக வேண்டும்.

    அப்போதுதான் தமிழ்நாடு இன்னும் உன்னத நிலையை அடையும். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்போரை நசுக்கும் நட வடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது. இது மிகவும் கண்டி க்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தலைமை கழக பேச்சாளர்கள் திருப்பூர் கூத்தரசன், உடுமலை தண்டபாணி, நரசிம்ம நாயக்கன்பா ளையம் நகர செயலாளர் ஸ்ரீதரன், கூடலூர் நகர துணைச் செயலாளர் கிரேசி, செல்வி, நகர பொருளாளர் சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிர மணியம் , நகர இளைஞரணி அமை ப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் உதயகுமார், பாலச்சந்திரன், வக்கீல் பிரபு மற்றும் கூடலூர் நகர கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூடலூர் நகர துணைச் செயலாளர் துரை.செந்தில்குமார் நன்றி கூறினார்.  

    • சமூக வலைதள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.
    • கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கோவைப்புதூரை சேர்ந்தவர் ஊர்மிளா (வயது 42).

    இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உஸ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த நபர் தான் சமூக வலைதள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்தால் கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். பிறகு என்னை அவர்களது டெலிகிராம் குழுவில் இணைத்து விட்டார்.

    பின்னர் ஒரு இணையதள லிங்கை அனுப்பி அதில் தனது விவரங்களை பதிவு செய்தால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார். அதனை உண்மை என நம்பிய நானும் அவர் சொன்னது போல் பதிவு செய்தேன். அப்போது முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்தற்காக ரூ.210 கமிஷனாக அனுப்பினார். இதையடுத்து நான் ரூ.1000 முதலீடு செய்தேன். அதில் கமிஷன் என கூறி ரூ.1410 எனது வங்கி கணக்குக்கு வந்தது. இதனால் பண ஆசையில் மேலும் ரூ.5000 முதலீடு செய்தேன். எனக்கு ரூ.6420 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18,30,000 வரை முதலீடு செய்தேன். ஆனால் அவர் எனக்கு கமிஷன் தரவில்லை.

    எனவே சந்தேகமடைந்த நான் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எனது பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாததால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றிய நபரை கண்டு பிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.
    • பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கரட்டுமேட்டை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் இறந்து விட்டார்.

    சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கட்டிட வேலை செய்து வருகிறார். மாணவியின் வீட்டின் அருகே நரசிபுரம் வெள்ளிமலை பட்டினத்தைச் சேர்ந்த மதன்கு மார் (வயது 20) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்து அங்குள்ள டயர் கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கும், வாலி பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி மதன்குமார் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மதன்குமார் மாணவியை கட்டா யப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல க்கூடாது என அவர் மாணவியை மிரட்டி விட்டு சென்றார்.

    நடந்த சம்பவத்தை மாணவி தனது உறவுப்பெ ண்ணிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து கோவில்பா ளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் 13 வயது மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். 

    ×