என் மலர்
கோயம்புத்தூர்
கோவை,
தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோவையில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாள்களான நாளை (12-ந் தேதி), மற்றும் ஞாயிறு (13-ந் தேதி), சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி ஆகிய தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பும் விதமாக ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுத லாக 50 சிறப்பு பஸ்கள் வருகிற இன்று முதல் இயக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
- கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.
- சிங்காநல்லூர் போலீசார் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளான 13 பேரையும் கைது செய்தனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் உலக நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது51).
இவர் அந்த பகுதியில் சொந்தமாக இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் முத்தையா இரும்பு குடோன் வைத்துள்ள இடத்தை அந்த இடத்தின் உரிமையாளர் விற்பதற்கு முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து முத்தையா, இடத்தின் உரிமையாளரான பிரபுவை தொடர்பு கொண்டு, தானே இந்த இடத்தை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். இடத்தின் உரிமையாளரும் இதற்கு சம்மதித்தார்.
அதன்படி இடத்தை வாங்குவதற்காக முத்தையா, இட உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் முன்பணமும் கொடுத்தார். இதையடுத்து இடத்தை பத்திரம் எழுதி தருமாறு கூறினார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட நிலத்தின் உரிமையாளர் அதன்பிறகு இடத்தை எழுதி கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் முத்தையா, நிலத்திற்கு நான் பணம் கொடுத்து விட்டேன். இடத்தை என் பெயருக்கு எழுதி தாருங்கள் என வற்புறுத்தி வந்தார். இதனால் முத்தையா மீது இடத்தின் உரிமையாளருக்கு கோபம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு குடோனில், முத்தையாவும், மற்றொரு நபரும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது குடோனுக்குள் இடத்தின் உரிமையாளர் பிரபு 13 பேர் கும்பலுடன் குடோனுக்கள் அத்துமீறி நுழைந்தார்.
சத்தம் கேட்டு முத்தையா எழுந்தார். கும்பலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட முயன்றார். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கும்பல் முத்தையாவையும், அவருடன் இருந்த மற்றொரு நபரையும் சத்தம் வெளியில் வராத வண்ணம் வாயில் துணியை வைத்து பொத்தி குடோனில் உள்ள அறைக்குள் தூக்கி சென்றனர்.
பின்னர் அங்கு 2 பேரையும் கயிறால் கட்டி வைத்தனர். தொடர்ந்து குடோனில் இருந்த இரும்பு கம்பிகள், சி.சி.டி.வி காமிராக்கள், 2 வாகனங்கள், அலுவலகத்தில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.27 லட்சம் ஆகும்.
இந்த நிலையில் காலையில் பணிக்கு வந்தவர்கள் பார்த்து, கட்டிபோடப்பட்டிருந்த முத்தையாவை காப்பாற்றினர். இதுகுறித்து முத்தையா சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரபு, தனது கூட்டாளிகளான கண்ணன், அஜ்பத்தாரி, வீரபாகு, வீரைய்யா, பென்னி, பார்த்தசாரதி, பிரபு என்ற வெள்ளையன், சங்கர் கணேஷ், பாலமுருகன், பார்த்தசாரதி உள்பட 13 பேருடன் சேர்ந்து குடோனுக்குள் புகுந்து முத்தையாவை கட்டி போட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளான 13 பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டேவிட் நான் பேசி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தகளை தெரிவித்தார்.
- டேவிட்டை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்தவர் கவுதமன்(வயது41).
இவர் கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி ஒயில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது.
அதன்படி அவருக்கு, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதமும் வந்தது. இதையடுத்து கவுதமன் தனது மாமனாரை சந்தித்து தனக்கு வந்த கடிதம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், மருமகனுக்கு வேலை கிடைப்பதற்காக தனக்கு தெரிந்த டேவிட் என்ற கணேசனிடம் அழைத்து சென்று விவரத்தை தெரிவித்தார்.
அதற்கு அந்த நபரும், எனக்கு நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரிகளை தெரியும். நான் பேசி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தகளை தெரிவித்தார்.
மேலும் இதற்கு சில, பல லட்சங்கள் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கவுதமன், டேவிட் கேட்ட ரூ.4 லட்சத்தை கொடுத்தார்.
அதன்பின்னர் 2 வாரங்கள் கழித்து டேவிட், கவுதமனை சந்தித்து, சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கையெழுத்திட்ட பணி நியமனத்திற்கான ஆணையை கவுதமனிடம் வழங்கினார். அவரும் உண்மையிலேயே வேலை கிடைத்து விட்டது என நினைத்தார்.
பணி ஆணையை எடுத்து கொண்டு கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கவுதமன் கேட்ட போது, அது போலியானது என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபரை பற்றி விசாரித்த போது தான் அவர், கவுதமனின் தங்கை கணவரிடமும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரும் தங்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து 2 பேரும் காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதி வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டேவிட் இதுபோன்று பலரி டம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் டேவிட்டை தேடி வந்தனர். இந்த நிலையில் துடியலூர் பகுதியில் டேவிட் வசிப்பதாக தகவல் வரவே அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தை சேர்ந்தவர் கவுதமன்(வயது41).
இவர் கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி ஒயில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்ததாக தெரிகிறது.
அதன்படி அவருக்கு, நெடுஞ்சாலைத்துறையில் இருந்து நேர்முகத் தேர்வுக்கான கடிதமும் வந்தது. இதையடுத்து கவுதமன் தனது மாமனாரை சந்தித்து தனக்கு வந்த கடிதம் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர், மருமகனுக்கு வேலை கிடைப்பதற்காக தனக்கு தெரிந்த டேவிட் என்ற கணேசனிடம் அழைத்து சென்று விவரத்தை தெரிவித்தார்.
அதற்கு அந்த நபரும், எனக்கு நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரிகளை தெரியும். நான் பேசி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தகளை தெரிவித்தார்.
மேலும் இதற்கு சில, பல லட்சங்கள் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய கவுதமன், டேவிட் கேட்ட ரூ.4 லட்சத்தை கொடுத்தார்.
அதன்பின்னர் 2 வாரங்கள் கழித்து டேவிட், கவுதமனை சந்தித்து, சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் கையெழுத்திட்ட பணி நியமனத்திற்கான ஆணையை கவுதமனிடம் வழங்கினார். அவரும் உண்மையிலேயே வேலை கிடைத்து விட்டது என நினைத்தார்.
பணி ஆணையை எடுத்து கொண்டு கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கவுதமன் கேட்ட போது, அது போலியானது என்பது தெரியவந்தது.
மேலும் அந்த நபரை பற்றி விசாரித்த போது தான் அவர், கவுதமனின் தங்கை கணவரிடமும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரும் தங்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து 2 பேரும் காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதி வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், டேவிட் இதுபோன்று பலரி டம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் டேவிட்டை தேடி வந்தனர். இந்த நிலையில் துடியலூர் பகுதியில் டேவிட் வசிப்பதாக தகவல் வரவே அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- சிவக்குமார் ஆன்லைனில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
- மனைவி மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள விமல்நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி ராஜஸ்திரிக்கா (35). சிவக்குமார் தொழில் மற்றும் குடும்ப தேவைக்காக ஆன்லைனில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் ரூ.10 லட்சம் வரை பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது மனைவியிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் சிவக்குமார் தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு தகவல் அனுப்பினார்.
அதில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளேன். கடனை சமாளிக்க முடியவில்லை. நான் போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜஸ்திரிக்கா கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக கூறியது. இது குறித்து அவர் மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் சுமை காரணமாக மனைவிக்கு தகவல் அனுப்பி விட்டு மாயமான மருந்து விற்பனை பிரதிநிதியை தேடி வருகிறார்கள்.
- மாநிலத்தில், 109 கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 இடங்கள் முதுநிலை பிரிவில் உள்ளன.
- கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.சி.ஏ., பிரிவு தவிர்த்து, 20 முதுநிலை பிரிவுகளில், 557 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
கோவை,
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளுக்கு, முதலாண்டு மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை, இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என, கல்லூரி கல்வி இயக்குனர் கீதா தெரிவித்தார்.
மாநிலத்தில், 109 கலை அறிவியல் கல்லூரிகளில், 24 ஆயிரத்து 341 இடங்கள் முதுநிலை பிரிவில் உள்ளன. மாணவர்கள் விண்ணப்பங்களை www.tngasa.in/ www.tngase.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.சி.ஏ., பிரிவு தவிர்த்து, 20 முதுநிலை பிரிவுகளில், 557 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இக்கல்லூரியில் உதவி மையங்கள், 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குநர் கீதா கூறுகையில், உதவி மையங்கள் செயல்படும் கல்லூரி விபரங்களை, மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என்றார்.
- இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்த்து பாதுகாப்பாக குழி தோண்டி புதைக்க வேண்டும்.
- இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் புலி, கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. சோலை காடுகளும், பசுமை மாறாக்காடுகளும் உள்ளன. இவற்றை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக அக்கா மலை புல்வெளி பகுதியை மத்திய அரசு தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது. வனத்தையும், அவற்றில் வாழும் வன விலங்குகளையும் பாதுகாக்க வனத்துறையினர் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவற்றின் ஒரு பகுதியாக மனித-விலங்கு மோதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீப காலமாக வால்பாறை நகர் மற்றும் தேயிலை தோட்ட பகுதியில் திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதால் அவற்றைத் தேடி சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் இதை கண்காணித்து, இறைச்சிக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டு வதை தவிர்க்க தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். திறந்த வெளியில் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் இருந்து வெளியாகும் இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்த்து பாதுகாப்பாக குழி தோண்டி புதைக்க வேண்டும்.
இதனால் வனவிலங்குகள் இறைச்சிக் கழிவுகளை தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது தவிர்க்கப்படும். மனித-வன விலங்கு மோதல் தடுப்பு குழுவிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எச்சரிக்கை மீறி திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
- உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது.
கோவை,
கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு நேற்று ஓரே நாளில் தக்காளி வரத்து 130 டன்களாக அதிகரித்தது. இதனால், நாட்டுத்தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், கோவை க்கு வழக்கமாக வரும் உள்ளூர் தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இருந்தது.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கோவைக்கு உள்ளூர் தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளியின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலை குறைந்து வருகிறது.
இதுகுறித்து கோவை தியாகி குமரன் மார்க்கெட்டின் அனைத்து மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
நேற்று எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து நாட்டுத்தக்காளி 100 டன்னும், தியாகி குமரன் மார்க்கெட்டுக்கு 30 டன்னும் வந்துள்ளது.
அதே சமயம் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆப்பிள் தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாட்டுத் தக்காளி கிலோ ரூ.50, ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.
- 2 பேரும் கட்டாயப்படுத்தி ஈரான் பெண்ணை மது குடிக்க வைத்தனர்.
- ஈரான் பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை:
ஈரான் நாட்டை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் பி.பார்ம் பிசியோதெரபி படித்து முடித்து விட்டு மும்பையில் தங்கி இருந்தார்.
அப்போது இவருக்கு கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஈரான் பெண்ணை கோவைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் பெண் கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை தேடி வந்தார்.
தோழி மூலமாக ஈரான் பெண்ணுக்கு புதுசித்தாபுதூரை சேர்ந்த ராஜூ (32) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
சம்பவத்தன்று இரவு ராஜூ, ஈரான் பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கிளப்பிற்கு சாப்பிடுவதற்காக அழைத்தார். இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு ராஜூவுடன் அவரது நண்பர் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ் (40) என்பரும் வந்து இருந்தார். அங்கு ராஜூவும், ஜோன் பிரான்சிசும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 2 பேரும் ஈரான் பெண்ணை மது குடிக்க அழைத்தனர். ஆனார் அவர் மதுகுடிக்க மறுத்து விட்டார். இதனையடுத்து 2 பேரும் கட்டாயப்படுத்தி ஈரான் பெண்ணை மது குடிக்க வைத்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து ஈரான் பெண்ணிடம் போதையில் தவறாக நடக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் கிளப்பை விட்டு வெளியே வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேரும் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர்.
இது குறித்து ஈரான் பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து ஈரான் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராஜூ, ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- பாக்கியம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
- பாக்கியத்திடம் 2.5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார்.
பீளமேடு,
கோவை பெரியநாயக்கன்பாளையம், பொன்னி நகரைச் சேர்ந்த சிவபிரகாஷ் மனைவி பாக்கியம் (வயது 51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பாக்கியம் சம்பவத்தன்று லட்சுமி மில் சிக்னலில் இருந்து அரசு பஸ்சில் ஹோப் காலேஜிக்கு சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் பாக்கியத்திடம் 2.5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார்.
இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஊதிய உயர்வு இல்லாமல் தூய்மை பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
- ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கு ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும்.
கோவை:
கோவை மாநகரில் 100 வார்டுகள் உள்ளன. இந்த 100 வார்டுகளில் தேங்கும் குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகளை தூய்மை பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
கோவை மாநகராட்சியில் 2,400 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1,800 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும், பல ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருபவர்களை நிரந்த ஊழியர்களாக ஆக்கவும் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊதிய உயர்வு இல்லாமல் தூய்மை பணியாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணியை தனியார் மயமாக்க உள்ளது.
இதனை கைவிட வலியுறுத்தியும், ஆண்டுக்கணக்கில் கூலி தொழிலாளர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலை முன்பு இருந்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக கருப்புகொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த ஊர்வலத்தை கோவை-ஓசூர் சாலையில் அ.தி.மு.க. அலுவலகம் அருகே தடுப்புகள் வைத்து அடைத்து போலீசார் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு தூய்மை பணியை தனியார் மயத்திடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர் நிரந்தர பணியிடங்களை தனியாருக்கு, தாரை வார்க்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையானது தூய்மை பணியாளர்களுக்கு எதிரானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், தூய்மை பணி தனியார் மயத்தையும் கைவிட வேண்டும்.
ஒரே மாதிரியான வேலைக்கு அனைவருக்கு ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக எங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது.
- சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
கோவை,
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. இதனையொட்டி கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி கோவையில் உள்ள ராகவேந்திரா கோவில் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு கிராஸ்கட் ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஏராளமானோர் படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.படம் முடிந்ததும் தியேட்டர் முன்பு கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் 25 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ராஜேஷ் குமார், பாபு, செந்தில் குமார், பாலாஜி, குபேரன் சுரேஷ், நாகராஜ், செந்தில், ரஜினி குணா, ஸ்ரீனிவாசன் மணிவண்ணன், பட்டணம் ரவி, வெங்கடாசலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 2 பேருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.
- கணவன், மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை,
கோவை, கண்ணப்பன் நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் நிபுன்பாபு(31). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரம் அடைந்த கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து நிபுன்பாபுவை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.இதுகுறித்து நிபுன்பரு ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






