என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இருந்து திண்டிவனம் நோக்கி இன்று அதிகாலை டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 தொழிலாளர்கள் இருந்தனர்.
மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம், இரட்டை ஏரி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி திடீரென டிராக்டர் மீது மோதியது.
அந்த நேரத்தில் பின்னால் வந்த ஆம்னி பஸ்சும் லாரி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் லாரியும், டிராக்டரும் சாலையில் கவிழ்ந்தது.
டிராக்டரில் இருந்த 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்த 3 பேரும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருகிற ஜூலை மாதம் 28ந்தேதி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன. தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி ஷாலினி ஆகியோர் ஒரே போட்டியில் பங்கேற்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும். இன்னும் பல நாடுகள் இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம், அகில இந்தியா செஸ் கூட்டமைப்பும், உலக செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பும் சேர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் இந்திய அணி நான்கு குழுக்களாக பங்கேற்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு விரைவில் பயிற்சி அளிக்கும் பணி தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் தங்கமாரியப்பன். இங்கு ராம்குமார்(21) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இரவு அவர், ஓட்டலின் மாடியில் தூங்கினார். அதிகாலை அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ராம்குமார் செல்போனில் பேசியபடி மாடியில் இருந்த ஏ.சி.யின் வெளிப்புற பெட்டியின் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த பெட்டி வெடித்து தீப்பற்றியது. இதில் அருகில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ராம்குமார் தீயில் கருகி அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ராம்குமாரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவைகள், பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள ‘நகுலன்’ என்ற வெள்ளைப்புலி கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சரிவர உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து வெள்ளைப்புலியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து வெள்ளைப்புலியை மருத்துவ பரிசோதனை செய்யவும் அதன் மாதிரிகளை சேகரிக்கவும் ஊழியர்கள் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளைப்புலியை கூண்டில் அடைத்துவிட்டு பராமரிப்பாளர் செல்லையா மற்றும் அவருடன் பணிசெய்யும் ஊழியர்கள் அதன் மாதிரிகளை சேகரிக்க முயன்றனர்.
அப்போது கூண்டு சரியாக அடைக்கப்படாததால் திடீரென வெள்ளைப்புலி பாய்ந்து ஊழியர் செல்லையாவை தாக்கியது. இதில் புலியின் நகங்கள் பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
செல்லையாவுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் வெள்ளைப்புலியின் உடல் நிலையை கண்காணித்து அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு:
நந்திவரம் கூடுவாஞ்சேரி அருகே ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் இளம்பரிதி, நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள்,ஜே.சி.பி.எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.18 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் அனைத்து அரசு ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்படும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்து உள்ளனர்.
தாம்பரம்:
பல்லாவரம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் 260 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பல்லாவரம் அடுத்த ஜீவா நகரை சேர்ந்த கார்த்திக் (24) என்பதும், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை வாங்கி தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
ஊரப்பாக்கத்தை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு வரும் முன்காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவர பட்ட திட்டம். இது 2011ம் ஆண்டு வரை செயல்பட்டு கொண்டிருந்தது. அதற்கு பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வினர் இத்திட்டத்தை கைவிட்டனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் சுகாதாரத்தில் அதிக கவனம் காட்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் முன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார்.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் இந்த மாதிரியான முகாம்களை பயன்படுத்தி கொண்டு சுகாதாரமான வாழ்க்கை வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய செயலாளர் ஆராவமுதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரப்பாக்கம் பவானி கார்த்தி, துணை தலைவர் ரேகா கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய் கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம் அடுத்த வசந்தபுரியில் உள்ள சிற்பக்கூடத்தில் 5 டன் எடை உள்ள பஞ்சலோக "சோடசரஸ்வதி" சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதனை கடந்த ஒரு ஆண்டாக 60 சிற்பக்கலைஞர்கள் இணைந்து செய்து உள்ளனர். இந்த சரஸ்வதி பஞ்சலோக சிலைய 7அடி உயரம், 8 அடி அகலத்தில் கலைநயத்துடன் காணப்படுகிறது. சரஸ்வதி தேவிக்கு வீணையுடன் 12 கைகள் வடிவமைத்து இருக்கிறார்கள்.
சிவனின் தொப்புளில் அமர்ந்து இருக்கும் சோடசரஸ்வதி உலகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது., ஒன்று சேலத்தில் கருங்கல் சிலையாக இருக்கிறது. இரண்டாவது தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு, அலுமினியம் கொண்டு பஞ்சலோகத்தில் வித்தியாசமான சிற்ப சாஸ்திரம் முறையில் செய்யப்பட்ட இந்த சிலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வடிவமைக்கும் போதே ஆன்மீக உணர்வுகளை உணர்ந்ததாக சிற்பிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பஞ்சலோக சரஸ்வதி சிலை வாலாஜாபாத் அடுத்த ஊத்துகாடு கிராமத்தில் உள்ள விஜயகார்டன் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. உலகில் இரண்டாவது சிலை என்பதால் ஆர்வமுடன் பார்க்க குவிந்த பக்தர்கள் சிலையை பயபக்தியுடன் வழிபட்டு சென்றனர்.
மாமல்லபுரம் மீனவர் கிராம பகுதிகளான வெண்புருஷம் கடற்கரை பகுதியை தூய்மையாக வைக்கும் நோக்கத்தில் அங்கு திதி செய்யவோ, அஸ்திகளை கரைக்கவோ கூடாது என ஊர்மக்கள் தீர்மானம் செய்து அதை கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அமாவாசை தினமான இன்று வெளியூர்களில் இருந்து எவரேனும் இங்கு வந்து மூதாதையர் திதி சடங்குகள் செய்யக்கூடாது, கடற்கரையில் அஸ்தி கரைக்ககூடாது என வெண்புருஷம் கிராம மக்கள் தற்போது ஊரின் நுழைவு வாயிலில் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 27ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரு கின்றன.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி செய்யப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மது விலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆட்டோ டிரைவர் சீருடை அணிவது கட்டாயம், அவரவர் ஆட்டோக்களில் உரிமையாளர் பெயர், செல்போன் எண்ணை எழுதி வைக்க வேண்டும், வெளிநாட்டவர் எவரேனும் போதை பொருட்கள் கேட்டாலோ, விற்பனை செய்தாலோ போலீசாருக்கு தகவல் தர வேண்டும், தலைமுடிகளை நேர்த்தியாக வெட்டி, காதில் கடுக்கன் போன்ற கம்மல்கள் போடாமல் “ஜென்டில்மேன்” போன்று இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
மேலும் ஆட்டோ சங்கங்களில் உள்ள உறுப்பினர் அனைவரும் தங்களது விபரங்களை ஒரு வாரத்தில் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, அடுத்த மாதம் முதல் மாமல்லபுரம் நகரம், கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வந்து விடும். 24மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையோரம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக கோவில் நிலம் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளது.
இந்த இடங்களின் ஒரு பகுதியான மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம், சாலவான்குப்பம், சூலேரிக்காடு, நெம்மேலி, பேரூர், கிருஷ்ணன் காரணை, இளந்தோப்பு சாலையோரம் 37ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 30ந் தேதிக்குள் ஆக்ரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று வரை கடந்த 3 நாட்களில் சுமார் ரூ. 300கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களை நவீன டிஜிட்டல் நிலஅளவை கருவி மூலம் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.






