என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள‌ இடத்தை இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    தாம்பரம்:

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு கட்டிடம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்ட தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சித்த மருத்துவமனை மற்றும் காசநோய் ஆஸ்பத்திரியின் இடங்களுக்கு நடுவே உள்ள நிலத்தில் இடம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. 5 ஏக்கர் நிலத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக 4.3 ஏக்கர் நிலத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடமும் அமைய இருக்கிறது.

    புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ள‌ இடத்தை இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மருத்துவ துறை இயக்குனர் நாராயண பாபு, காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா. மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டலத் தலைவர் காமராஜ் உடன் இருந்தனர்.

    மாமல்லபுரம் அருகே 70 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியை சேர்ந்தவர் சொக்கம்மாள் (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். சொக்கம்மாள் மகனுடன் வசித்து வந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

    இதனால் வலியால் அவதிப்பட்டு வந்த சொக்கம்மாள் திடீரென மண் எண்ணை்னையை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு பஸ்நிலையத்திற்கு 10 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டில் தற்போது உள்ள பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லவும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு பஸ்நிலையத்திற்கு 10 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் பஸ்நிலையம் 5 ஏக்கரிலும், பணிமனைக்கு 5 ஏக்கரும் ஒதுக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

    பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமானது ஆகும். இந்த இடத்தில் உள்ள நேதாஜி நகரில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி சுமார் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

    இதையடுத்து 40 குடும்பத்தினரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதற்கு முன்பும் இதேபோல் இடத்தை காலிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து நாங்கள் தப்பித்தோம். இதையடுத்து நாங்கள் எங்களிடம் உள்ள பணத்தை வைத்து வீடு கட்டி உள்ளோம். இப்போது இடத்தை காலி செய்யுமாறு கூறுகிறார்கள். நாங்கள் எங்கே செல்வோம் என்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, 1960ம் ஆண்டு மருத்துவகல்லூரிக்காக தொழில் அதிபர் ஒருவர் 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்து இருந்தார். அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அவர்களுக்கு பட்டா கிடையாது. புதிய பஸ்நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளோம் என்றார்.

    கிருஷ்ன யோகமந்திரம், உஸ்டாசனம், வஜீராசனம், திரிகோராசனம், வக்ராசனம், கபாலபதி, நாடிசுத்ரி, பிராமரி பிரானயம் உள்ளிட்ட யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    ஜூன் மாதம் 21ந்தேதி உலக யோகா தினத்தை கொண்டாடும் வகையில் “யோகா உத்சவம்” என்ற பெயரில் நிகழ்ச்சியை மத்திய அரசு நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

    இதன் 43வது நிகழ்ச்சியாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மாமல்லபுரத்தின் முக்கிய புராதன சின்னமான கடற்கரை கோயில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் மத்திய மந்திரி எல்.முருகன், மத்திய மீன்பண்ணை சேர்பர்சன் அமர்சிங் சவ்கானா, கால்நடை மற்றும் மீன்வளத்துறை இணை செயலர் ஜவ்கார், மீன்வளத்துறை உறுப்பினர் செயலர் கிர்பா, மீன்வளத்துறை நலவாரிய ஆணையர் பழனிச்சாமி, அதிகாரி அந்தோணி சேவியர், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    யோகா நிகழ்ச்சி இன்று காலை 6:30க்கு தொடங்கி 8மணி வரை நடைபெற்றது. இதனை கே.எம்.யோகாலயா, அபிராமி யோகாலயா அமைப்பினர் நடத்தினர்., கிருஷ்ன யோகமந்திரம், உஸ்டாசனம், வஜீராசனம், திரிகோராசனம், வக்ராசனம், கபாலபதி, நாடிசுத்ரி, பிராமரி பிரானயம் உள்ளிட்ட யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது.

    மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட அனைவரும் கடற்கரை கோவில் பின்னணியில் யோகா பயிற்சி செய்தனர். முன்னதாக எல். முருகன் பேசியதாவது:

    பிரதமர் மோடியும், சீன அதிபரும் இந்த இடத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்தில் யோகா உத்சவ் நிகழ்ச்சி நடப்பது பெருமை வருகிற ஜூன் 1ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

    சர்வதேச அளவில், சர்வதேச யோகா தினமாக அறிவிப்பிற்கு இதை எடுத்துச்சென்ற பெருமை பிரதமர் மோடியை சேரும். இந்தியாவில் பிறந்த கலை இன்றைக்கு உலகம் முழுவதும், அத்தனை நாடுகளிலும் யோகாகலை பின்பற்றி கொண்டு இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் யோகாக்கலை உலகமெங்கும் சென்று சேர்ந்து இருக்கிறது.

    யோகா நம்முடைய மனதை பலப்படுத்துகிறது. பல்வேறு வியாதிகளுக்கு தீர்வாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறை நம்முடைய அவசர வாழ்க்கை முறை உணவுப் பழக்கங்கள் மொத்தமாக நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கெண்டு இருக்கின்றன. நம்முடைய ஆரோக்கியம் பேணுவதற்கு யோக ஒரு முக்கிய கலையாக உள்ளது. பல வியாதிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு யோக ஒரு முக்கிய கலையாக இன்றையக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.

    பாரததேசத்தில் தோன்றிய கலை இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிச்சூரில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் வைகரை அம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலை திறக்க நிர்வாகி ஜெமின் என்பவர் வந்தபோது அங்கிருந்த உண்டியலை கொள்ளை கும்பல் அடியோடு பெயர்த்து தூக்கி சென்று இருப்பது தெரியவந்தது. உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோரோனா நோயில் இருந்த தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    செங்கல்பட்டு:

    கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தல் மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுபூசி முகாம் நடந்தது. தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2118 தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை 917874 பேர் முதல் தவணையும், 721742 பேர் 2ம் தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

    பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோரோனா நோயில் இருந்த தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 16,60,499 முதல்தவணையும் 13,21,750 பேர் 2ம் தவனையும் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். இன்று மாவட்டத்தில் மொத்தம் 2039 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 92349 பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 203 சுகாதார பணியாளர்கள் 1082 முன்கள பணியாளர்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி செவிலியர்கள் பயிற்சி பள்ளி மாணவர் 497 பேர் பங்கேற்கின்றனர். இந்த தடுப்பூசி முகாமை முழுமையாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3340 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 5600 பணியாளர்கள இதில ஈடுபட்டனர். திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமை தலைமைச்செயலர் இறையன்பு நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவகர்லால், திருமழிசை பேரூராட்சி செயலாளர் ரவி உடன் இருந்தனர்.

    அகில இந்திய கட்டுனர் சங்கம் செங்கை மையத்தின் 2022-2023ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் எல்.வேலாயுதம் பதவி ஏற்றார்.


    அகில இந்திய கட்டுனர் சங்கம் செங்கை மையத்தின் 2022-2023ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் எல்.வேலாயுதம் பதவி ஏற்றார்.

    பதவி ஏற்பு விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஊரக துறை மற்றும் சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் டாக்டர் ஜெகத்ரட்சன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

    முன்னாள் தேசிய தலைவர் பீஸ்மா ராதா கிருஷ்ணன், ஆடிட்டர் ராஜசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில தலைவர் கே.ஜெகநாதன், தேசிய துணைத் தலைவர் வேதானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு மு.மோகன், எம்.திருசங்கு, உடனடி மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு வந்த அனைவரையும் வெங்கடேசன் வரவேற்றார்.

    முன்னதாக தலைவர் பதவி ஏற்ற டாக்டர் எல்.வேலாயுதம் தனது ஏற்புைரயில், “சங்கத்தின் கோரிக்கையினை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நிச்சயம் முயற்சி செய்வேன். சங்க உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு கூப்பிட்ட நேரத்தில் கூப்பிட்ட இடத்தில் சென்று தீர்வு காண துணை நிற்பேன். தலைவர் என்பது ஒரு பொறுப்புதான். உங்களில் ஒருவனாக உங்களின் பிரதிநிதியாக அரசுக்கும் கட்டுனர்களுக்கும் ஒரு நல்ல உறவை ஏற்படுத்த அயராது பாடுபடுவேன்” என்றார்.

    விழாவில் செங்கை மையத்தின் துணைத் தலைவர் வி.ரங்கநாதன், செயலாளர் விவேக் ராமகிருஷ்ணன், இணை செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் இ.கெஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.சந்திரபாபு, ஆர்.கிருஷ்ண மூர்த்தி, கே.கே.ராகவன், பி.சீனுவாசன், முன்னாள் கட்டுனர் சங்க நிர்வாகிகளும், செங்கல்பட்டு வியாபார சங்க உறுப்பினர்கள், வெற்றி ரியல்ஸ் குடும்பங்கள் மற்றும் கன்சக்சன்ஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அறு சுவை உணவு வழங்கப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

    பல்லாவரம் பகுதியில் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து கொள்ளையடித்த ஆந்திரா கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சையத் தவுலத்(78). இவர் கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுத்து வந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

    இதனை தனிப்படை போலீசார் கண்காணித்த போது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாங்காட்டில் இருந்த கூட்டாளிகள் 6 பேரும் சிக்கினர்.

    விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாபு, ரமேஷ், சுரேஷ், முரளி, கிருஷ்ணன், பாபு, கார்த்திக் ஆகியோர் என்பதும் பல்லாவரம், சங்கர்நகர், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து வருபவர்களை நோட்ட மிட்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், 4 மோட்டார் சைக்கிள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மறைமலைநகரில் கார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் அடுத்த பேரமனூர் அருகே கார் தயாரிக்கும் தொழில் சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

    மேலும் வருகிற ஜீன் மாதம் 30ந் தேதி தொழிற் சாலையை மூடப்போவதாகவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த கார் தொழில் சாலையில் புதிதாக எலெக்ட்ரிக் கார் உற்பத்தி உற்பத்தி செய்யப்போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

    இதையடுத்து தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கினால் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று நிரந்தர ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை வலியுறுத்தி இன்று காலை ஏராளமான தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, எலெக்ட்ரிக் கார் உற்பத்தி குறித்து தொழிற்சாலை நிர்வாகம் சரியான தகவல் தரவில்லை. ஏற்கனவே வேலை செய்து வரும் எங்களுக்கு வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளதால் யார் இந்த தொழிற் சாலையை வாங்கி கார் உற்பத்தியை தொடங்கினாலும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் கார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கல்பாக்கம் அருகே விபத்தில் மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த உய்யாலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது33). மீனவர். இவர் மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் கோவளம் நோக்கி சென்றார். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன்ராஜ் பலியானார்.

    வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்தவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான சத்தியசாய் மருத்துவ கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களில் 7 பேருக்கு கடந்த மாதம் 30ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மேலும் 18 பேருக்கு தொற்று உறுதியானது. ஏற்கனவே ஐ.ஐ.டி.யில் 172 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இந்த கல்லூரியிலும் கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் ராகுல்நாத், துணை இயக்குனர் பரணிதரன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்தவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் லேசான அறிகுறிதான். எனவே பதட்டப்பட தேவையில்லை.

    மொத்தம் 2 விடுதிகள் உள்ளன. அவற்றில் 900 மாணவமாணவிகள் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்கள் தனிமையில் வைக்கப்பட் டுள்ளார்கள்.

    விடுதிகள் அமைந்துள்ள பகுதிகள் முழுமையாக சுகாதாரத்துறை கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்லூரியுடன் இணைந்து மருத்துவ மனையும் இருப்பதால் அங்கு நோயாளிகள் பலர் வருவார்கள். எனவே அவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று உறுதியானதும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு அனைவரையும் பரிசோதித்து கட்டுப்படுத்தினார்கள். அதேபோல் கண்டுபிடிக்கப்படும் அனைவருக்கும் தீவிரசிகிச்சை அளித்து பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர்.

    அதேபோல் இந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.

    இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    இதையும் படியுங்கள்... பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்தால் ஹெலிகாப்டர் சவாரி பரிசு - சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு

    கல்பாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    மாமல்லபுரம்:

    சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது45). இவர் நண்பர் பழனிவேலுடன் தொழில் சம்பந்தமாக மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்றார். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கொடப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வளைவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற நண்பர் பழனிவேல் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×