என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
பல்லாவரத்தில் போதை மாத்திரையுடன் வாலிபர் கைது
பல்லாவரத்தில் போதை மாத்திரையுடன் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரம் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் 260 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பல்லாவரம் அடுத்த ஜீவா நகரை சேர்ந்த கார்த்திக் (24) என்பதும், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை வாங்கி தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






