search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் பூங்கா
    X
    வண்டலூர் பூங்கா

    வண்டலூர் பூங்காவில் ஊழியரை தாக்கிய வெள்ளைப்புலி

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டு சரியாக அடைக்கப்படாததால் திடீரென வெள்ளைப்புலி பாய்ந்து ஊழியரை தாக்கியது. பெரிய அளவில் காயம் ஏற்படாததால் ஊழியர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பறவைகள், பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இங்குள்ள ‘நகுலன்’ என்ற வெள்ளைப்புலி கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சரிவர உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து வெள்ளைப்புலியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து வெள்ளைப்புலியை மருத்துவ பரிசோதனை செய்யவும் அதன் மாதிரிகளை சேகரிக்கவும் ஊழியர்கள் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து வெள்ளைப்புலியை கூண்டில் அடைத்துவிட்டு பராமரிப்பாளர் செல்லையா மற்றும் அவருடன் பணிசெய்யும் ஊழியர்கள் அதன் மாதிரிகளை சேகரிக்க முயன்றனர்.

    அப்போது கூண்டு சரியாக அடைக்கப்படாததால் திடீரென வெள்ளைப்புலி பாய்ந்து ஊழியர் செல்லையாவை தாக்கியது. இதில் புலியின் நகங்கள் பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    செல்லையாவுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் வெள்ளைப்புலியின் உடல் நிலையை கண்காணித்து அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×