என் மலர்
அரியலூர்
நத்தம் அருகே கல்லுக்கட்டி வேளாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி மகன் மனோகரன்(வயது23). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக நத்தம்-செந்துறை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பாப்பம்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மனோகரன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே தலை சிதறி பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பொருட் களை எடுத்து செல்ல பயன்படுத்தும் பிளாஸ் டிக் கைப்பைகள், தட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை முற்றிலும் பயன்படுத்த கூடாது.
எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து துறை அரசு அலுவலர்களும் கடைபிடிப்பதுடன் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை, காகிதப்பை, பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரியலூரில் உள்ள ஸ்டேடியத்தில் அரியலூர் மாவட்ட அமைச்சூர் டேக்வாண்டோ சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
இதில் மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கான சப்- ஜூனியர் போட்டியில் கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கோவிந்தசாமி, மாற்றும் பள்ளி முதலவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். #tamilnews
அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக அரசின் 9-ம் வகுப்பு புதிய பாட புத்தகம் திட்டம் குறித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அதிகாரி செல்வம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கியு ஆர் கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி எடுத் துரைக்கப்பட்டது. இது ஆன் லைன் மற்றும் ஆப் லைன் மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புத்தகம் எடுத்து செல்லாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் மாணவர்கள் கியுஆர் கோடு மூலம் காணொலி மூலம் பாடத்திட்டத்தை அறிந்து படித்தல் மூலம் அதனை புரிந்து, அறிந்து படிக்க முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாம் தமிழ், ஆங்கிலம், கணிதம் என ஒவ்வொரு படத்திற்கும் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
6-வகுப்பு ஆசிரியர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கீழப்பழுவூர் சாமி பள்ளியிலும் பாட புத்தகம் குறித்த ஆசிரியர்களுக்கு விளக்க பயற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட திட்டங்கள் மாணவர் களின் திறனானது மேம்படுத்தப்படும். மாணவர்கள் தங்களை அனைத்து விதத்திலும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் போட்டி போட முடியும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்தின் எளிமை, பெருமை, அட்டை படம், கோடு மற்றும் அதன் 6 இலக்க நம்பர் ஆகியவற்றை குறித்து ஆசிரியர் களுக்கு விளக்கி கூறினார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் தனியார் சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. தனியார் சிமெண்ட் ஆலைக்கு லாரி மூலம் சென்னையிலிருந்து மிகப் பெரிய எந்திரங்கள் ஏற்றி வந்தது.
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கம்பிகள் தாழ்வான பகுதிகளில் இருந்ததால் லாரி கிளீனர் ரமேஷ் (வயது 21) லாரி மேல் ஏறி மின்சார கம்பியை குச்சியால் தூக்கி விடும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்,
இந்த சம்பவம் தேதி 11.1.2008 அன்று நடந்தது. இது குறித்து அரியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர். அரியலூர் குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 14 சாட்சிகளில் 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.
விசாரனை அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பார்ட் தயாபரன் ஓய்வு பெற்றுள்ளார், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இது தொடர்பான வழக்கில் ஆஜராக கூறி அனுப்பிய சம்மனை பெற்றுக் கொண்டு ஓராண்டுக்கும் மேலாக கோர்ட்டிற்கு அவர் வரவில்லை.
கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தயாபரனுக்கு பிடிவராண்ட் பிறப்பித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 23.7.2018 அன்று வருகிறது.
ஜெயங்கொண்டம் நகர இளைஞரணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்ணன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவசங்கர், இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் கவிதைபித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சுபாசந்திரசேகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர திமுக இளைஞரணியினர் செய்திருந்தனர். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி கணேசன் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பெற்றோர்கள் ஆசிரியர் கழகத் தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் அசோகன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் வேலுமணி தீர்மானங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
முன்னதாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் புதிய தலைவராக கீதா தேர்ந்தெடுக்கபட்டார். கூட்டத்தில் ஆசிரியர்கள், ஏராளமான பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 40). இந்த தம்பதியினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நெசவுத்தொழிலாளியான பாலு தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்ததால் தனது மகளுடன் சென்னையில் தங்கி அங்குள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி பாலு வீட்டை பூட்டிவிட்டு மனைவி கிருஷ்ணவேணியுடன் ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று பாலுவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து பாலுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீட்டுக்கு பாலு தனது மனைவியுடன் வந்தார். பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாலு குடும்பத்தினர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிகடைகளில் பிளாஸ்டிக்பைகளின் பயன்பாட்டை வியாபாரிகள் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சங்கர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
நேற்று நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி பகுதியில் கடைவீதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டபோது 25 கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் ஜெயங்கொண்டத்தில் சுற்றுச்சூழல் மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால், வணிகர்கள், சில்லரை வியாபாரிகள், தங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டது.
எனவே தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரில் 50 மைக்ரானுக்கு குறைவாக, ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கடைகாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டது. மேலும் கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் போது வேடிக்கை பார்த்த பொது மக்களிடமும் பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் அவ்வாறு கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பைகள், பாலித்தீன் விரிப்புகள், பிளாஸ்டிக்கப்புகள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. #tamilnews
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜெயங்கொண்டம், தா.பழூர் ஆகிய துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, இரும்புலிக்குறிச்சி, தா.பழூர், சிலால், வான திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைகுடம், சோழ மாதேவி, தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைப் பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக் குறிச்சி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






