search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyalur police warrant"

    அரியலூர் கோர்ட்டில் சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் தனியார் சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. தனியார் சிமெண்ட் ஆலைக்கு லாரி மூலம் சென்னையிலிருந்து மிகப் பெரிய எந்திரங்கள் ஏற்றி வந்தது.

    அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கம்பிகள் தாழ்வான பகுதிகளில் இருந்ததால் லாரி கிளீனர் ரமேஷ் (வயது 21) லாரி மேல் ஏறி மின்சார கம்பியை குச்சியால் தூக்கி விடும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்,

    இந்த சம்பவம் தேதி 11.1.2008 அன்று நடந்தது. இது குறித்து அரியலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர். அரியலூர் குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 14 சாட்சிகளில் 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது.

    விசாரனை அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பார்ட் தயாபரன் ஓய்வு பெற்றுள்ளார், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இது தொடர்பான வழக்கில் ஆஜராக கூறி அனுப்பிய சம்மனை பெற்றுக் கொண்டு ஓராண்டுக்கும் மேலாக கோர்ட்டிற்கு அவர் வரவில்லை.

    கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தயாபரனுக்கு பிடிவராண்ட் பிறப்பித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை மீண்டும் 23.7.2018 அன்று வருகிறது.
    ×