என் மலர்
அரியலூர்
மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் கல்லீரல் வீக்கத்தின் பாதிப்புகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
hepatitis- இந்த வார்த்தையினை பலரும் அடிக்கடி கேள்விப்படுகின்றனர். அப்படி என்றால் என்ன? hepatitis- என்றால் கல்லீரல் வீக்கம் எனப்பொருள்படும். itis- என்றாலே வீக்கம் என்று பொருள் கொள்ளலாம். hepatitis- கல்லீரல் Gastritis-வயிற்றில் வீக்கம், கிArthritis- மூட்டுகளில் வீக்கம் என்று பொருள் வரும். நாம் இங்கு பார்க்கப் போவது கல்லீரல் வீக்கத்தினைப் பற்றியது ஆகும்.
இந்த கல்லீரல் வீக்கம் சில மருந்துகள், குடி பழக்கம் காரணமாக ஏற்படலாம். அநேக நேரங்களில் வைரஸ் தாக்குதல் காரணமாகவும் கல்லீரல் வைரஸ் தாக்குதல் காரணமாகவும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வைரஸ் ஏ, பி, சி என பொதுவாகக் காணப்படுகின்றது.
பொதுவில் பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு வாரங்களுக்கு அறிகுறி கூட தெரியாது இருக்கலாம். அறிகுறி காட்டத் தொடங்கும் போது இந்த மூன்று பிரிவு வைரசுகளும் சோர்வு, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, வயிற்று வலி, ஜுரம், கண்ணில் மஞ்சள், சருமத்தில் லேசான மஞ்சள் எனத் தோன்றலாம். வைரஸ் பி, சி பிரிவு நீண்ட நாளைய பாதிப்பாக இருக்கும் போது அறிகுறிகளே தெரியாது இருக்கலாம். இவ்வாறு சில வருடங்கள் கூட இருக்கலாம். அறிகுறிகள் காட்டும் நேரம் கல்லீரல் மிக அதிக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம்.
வைரஸ் ‘ஏ’ பிரிவு அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. சிறு பாதிப்பினைக் கொடுக்கலாம். பல நேரங்களில் பாதிப்பு அடைந்த வர்கள் எந்த அறிகுறியும் உணரக் கூட மாட்டார்கள். அதுவே போய் விடும். எந்த நீண்ட நாள் பாதிப்பும் இருக்காது.
வைரஸ் ‘ஏ’ பிரிவு உணவு, தண்ணீர் மூலமாகத்தான் பரவும். கையினை சோப்பு கொண்டு கழுவுவதனை குறிப்பாக காலை கடன்களை முடித்த பிறகு கண்டிப்பாய் செய்ய வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், அதிகம் வேக வைக்காத உணவுகள் இவற்றின் மூலமும் பரவும். குறிப்பாக மனித கழிவுப் பொருள் வெளியேற்றத்திற்குப் பிறகும், பின்னர் அன்றாடம் உணவுப் பொருட்களை கையாளும் முன்பும் கண்டிப்பாய் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
வைரஸ் ‘பி’ பிரிவு சில சாதாரண அறிகுறிகளை குறுகிய காலத்திற்கு காட்டலாம். பின்னர் அது தானாகவே கூட சரியாகி விடும். ஆனால் இது வளர்ந்தவர்களுக்கு காணப்படும் ஒன்று. ஆனால் சிலருக்கு இவ்வாறு நிகழாமல் நீண்ட கால பாதிப்பு இந்த வைரஸ் தாக்கிய பெரியவர்களுக்கு ஏற்படுகின்றது. 90 சதவீதம் சிறு குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் போது அவர்களின் வாழ்நாள் முழுவதும் இந்த வைரஸ் அவர்களுடனேயே இருக்கின்றது. காலப்போக்கில் கல்லீரலில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
‘பி’ பிரிவு வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம், திரவம் மூலம் பரவுகிறது. பாதிக்கப் பட்டவருடனான பாதுகாப்பு இல்லாத உடல் உறவு, ஊசிகள், ரேசர்கள், பல் தேய்க்கும் பிரஷ் மூலம் பரவுகின்றது. பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்கு பிரசவ காலத்தில் பரப்பி விடலாம்.
ஆனால் ஒருவரை தொடுவதால் இது ஏற்படுவதில்லை. பொதுவில் சுகாதாரம் கருதி மற்றவர்களின் உணவுகளை பங்கிட்டு கொள்ள வேண்டாம். மற்ற சுகாதார குறைவு பாதிப்புகள் ஏற்படலாம் என்றுதான் வலியுறுத்து கின்றோம். பாதிக்கப்பட்டவர் இருமுவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவாது. இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் முக கவசமும், கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவு தலும் அவசியம். வைரஸ் ‘சி’ பிரிவில் சுமார் 30 சதவீத மக்கள் இதனை குறைந்த கால கட்டத்தில் வென்று விடுகின்றனர். மற்றவர்கள் இதனை வாழ்நாள் முழுவதும் உடலில் (கல்லீரலில்) சுமக்கின்றனர். ‘சி’ பிரிவு மிக அபாயகரமான விளைவுகளைத் தரக்கூடியது. இன்றைய காலத்தில் இதற்கு மிக முன்னேற்றமான மருத்துவ முறைகள் உள்ளன.

எப்படி நம்மை நாம் பாது காத்துக் கொள்வது? ‘ஏ’ பிரிவு வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக பாத்ரூம் சென்று வரும் போது அவசியம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வைரஸ் பி, சி, பிரிவு பாதிப்புகளை தவிர்க்க ரேசர்கள், நகம் வெட்டும் கருவிகள், பல் தேய்க்கும் பிரஷ்கள் இவற்றினை பகிர்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சலூன் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் பாதுகாப்பற்ற தவறான உடல் உறவால் பரவும் வாய்ப்புகளும் உண்டு என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் வைரஸ் தவிர்ப்பு வாக்சினை மருத்துவர் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைரஸ் ‘ஏ’ பிரிவில் வயிற்றுப் போக்கு, வாந்தி இவற்றினை தவிர்க்க முறையான சிகிச்சை தேவை. தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளுதல், தாது உப்புகள் குறையாமல் அதற்கான மருத்துவர் அறிவுரைப்படி ஊட்டச்சத்து திரவங்கள் எடுத்துக் கொள்வது அவசியம். உடல் நலம் தேறும் வரை கடினமான உழைப்பினை தவிர்க்க வேண்டும்.
வைரஸ் ‘பி’ பிரிவுக்கு வைரசினைகட்டுப் பாட்டில் வைப்பதற்கும், கல்லீரலை பாதுகாப்ப தும் மருத்துவ அவசியம் ஆகின்றது. இவர்களுக் கான சிகிச்சை முறையினை சிறப்பு மருத்துவரே முடிவு செய்வார். கண்டிப்பாக சிகிச்சையினை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய மருத்துவ முன்னேற்றத்தின் மூலம் மிக நல்ல தீர்வுகளை காணும் வசதி உள்ளது என்பதே மகிழ்ச்சியான செய்திதான்.
வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ பாதிப்பிற்கு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயல்பட முடியாத நிலையை அடையலாம். கல்லீரல் நம் உடலுக்காக சில வித வேலைகளை செய்கின்றது. அதன் செயல் இழப்பு எத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். கல்லீரல் புற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெற தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
இந்த கல்லீரல் வீக்கம் சில மருந்துகள், குடி பழக்கம் காரணமாக ஏற்படலாம். அநேக நேரங்களில் வைரஸ் தாக்குதல் காரணமாகவும் கல்லீரல் வைரஸ் தாக்குதல் காரணமாகவும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வைரஸ் ஏ, பி, சி என பொதுவாகக் காணப்படுகின்றது.
பொதுவில் பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு வாரங்களுக்கு அறிகுறி கூட தெரியாது இருக்கலாம். அறிகுறி காட்டத் தொடங்கும் போது இந்த மூன்று பிரிவு வைரசுகளும் சோர்வு, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, வயிற்று வலி, ஜுரம், கண்ணில் மஞ்சள், சருமத்தில் லேசான மஞ்சள் எனத் தோன்றலாம். வைரஸ் பி, சி பிரிவு நீண்ட நாளைய பாதிப்பாக இருக்கும் போது அறிகுறிகளே தெரியாது இருக்கலாம். இவ்வாறு சில வருடங்கள் கூட இருக்கலாம். அறிகுறிகள் காட்டும் நேரம் கல்லீரல் மிக அதிக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம்.
வைரஸ் ‘ஏ’ பிரிவு அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. சிறு பாதிப்பினைக் கொடுக்கலாம். பல நேரங்களில் பாதிப்பு அடைந்த வர்கள் எந்த அறிகுறியும் உணரக் கூட மாட்டார்கள். அதுவே போய் விடும். எந்த நீண்ட நாள் பாதிப்பும் இருக்காது.
வைரஸ் ‘ஏ’ பிரிவு உணவு, தண்ணீர் மூலமாகத்தான் பரவும். கையினை சோப்பு கொண்டு கழுவுவதனை குறிப்பாக காலை கடன்களை முடித்த பிறகு கண்டிப்பாய் செய்ய வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், அதிகம் வேக வைக்காத உணவுகள் இவற்றின் மூலமும் பரவும். குறிப்பாக மனித கழிவுப் பொருள் வெளியேற்றத்திற்குப் பிறகும், பின்னர் அன்றாடம் உணவுப் பொருட்களை கையாளும் முன்பும் கண்டிப்பாய் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
வைரஸ் ‘பி’ பிரிவு சில சாதாரண அறிகுறிகளை குறுகிய காலத்திற்கு காட்டலாம். பின்னர் அது தானாகவே கூட சரியாகி விடும். ஆனால் இது வளர்ந்தவர்களுக்கு காணப்படும் ஒன்று. ஆனால் சிலருக்கு இவ்வாறு நிகழாமல் நீண்ட கால பாதிப்பு இந்த வைரஸ் தாக்கிய பெரியவர்களுக்கு ஏற்படுகின்றது. 90 சதவீதம் சிறு குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் போது அவர்களின் வாழ்நாள் முழுவதும் இந்த வைரஸ் அவர்களுடனேயே இருக்கின்றது. காலப்போக்கில் கல்லீரலில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
‘பி’ பிரிவு வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம், திரவம் மூலம் பரவுகிறது. பாதிக்கப் பட்டவருடனான பாதுகாப்பு இல்லாத உடல் உறவு, ஊசிகள், ரேசர்கள், பல் தேய்க்கும் பிரஷ் மூலம் பரவுகின்றது. பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்கு பிரசவ காலத்தில் பரப்பி விடலாம்.
ஆனால் ஒருவரை தொடுவதால் இது ஏற்படுவதில்லை. பொதுவில் சுகாதாரம் கருதி மற்றவர்களின் உணவுகளை பங்கிட்டு கொள்ள வேண்டாம். மற்ற சுகாதார குறைவு பாதிப்புகள் ஏற்படலாம் என்றுதான் வலியுறுத்து கின்றோம். பாதிக்கப்பட்டவர் இருமுவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவாது. இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் முக கவசமும், கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவு தலும் அவசியம். வைரஸ் ‘சி’ பிரிவில் சுமார் 30 சதவீத மக்கள் இதனை குறைந்த கால கட்டத்தில் வென்று விடுகின்றனர். மற்றவர்கள் இதனை வாழ்நாள் முழுவதும் உடலில் (கல்லீரலில்) சுமக்கின்றனர். ‘சி’ பிரிவு மிக அபாயகரமான விளைவுகளைத் தரக்கூடியது. இன்றைய காலத்தில் இதற்கு மிக முன்னேற்றமான மருத்துவ முறைகள் உள்ளன.
பாதிக்கப்பட்டவரின் ரத்தம் தவறாக மற்றவருக்கு செலுத்தப்பட்டால் இந்த பாதிப்பு ஏற்படலாம். இன்றைய மருத்துவத்தில் ரத்தம் செலுத்துவதற்கு முன்பு பல பரிசோதனைகளை செய்கின்றனர். எனவே இவ்வகையில் வைரஸ் ‘சி’ பரவுவது மிகவும் குறைந்துள்ளது எனலாம். கிருமி பாதிக்கப்பட்டவர்களின் ஊசிகளை முறையாய் அப்புறப்படுத்திவிட வேண்டும். பச்சை குத்திக் கொள்ளுதல் கூட கிருமி பாதிப்பிற்கு காரணம் ஆகலாம். எப்போழுதோ ஒரு முறை பல வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருந்தால் கூட பாதிக்கப்பட்டவர் வைரஸ் ‘சி’ கிருமி உடனேயே அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.

டாக்டர் கமலி ஸ்ரீபால்
தொடர்ந்து இருக்கும் இந்த பிரிவு வகைகள் கல்லீரலை அறிகுறி இல்லாமல் தாக்கி கொண்டே வரலாம். கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்தில் முடியலாம்.எப்படி நம்மை நாம் பாது காத்துக் கொள்வது? ‘ஏ’ பிரிவு வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக பாத்ரூம் சென்று வரும் போது அவசியம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வைரஸ் பி, சி, பிரிவு பாதிப்புகளை தவிர்க்க ரேசர்கள், நகம் வெட்டும் கருவிகள், பல் தேய்க்கும் பிரஷ்கள் இவற்றினை பகிர்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக சலூன் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் பாதுகாப்பற்ற தவறான உடல் உறவால் பரவும் வாய்ப்புகளும் உண்டு என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் வைரஸ் தவிர்ப்பு வாக்சினை மருத்துவர் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைரஸ் ‘ஏ’ பிரிவில் வயிற்றுப் போக்கு, வாந்தி இவற்றினை தவிர்க்க முறையான சிகிச்சை தேவை. தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளுதல், தாது உப்புகள் குறையாமல் அதற்கான மருத்துவர் அறிவுரைப்படி ஊட்டச்சத்து திரவங்கள் எடுத்துக் கொள்வது அவசியம். உடல் நலம் தேறும் வரை கடினமான உழைப்பினை தவிர்க்க வேண்டும்.
வைரஸ் ‘பி’ பிரிவுக்கு வைரசினைகட்டுப் பாட்டில் வைப்பதற்கும், கல்லீரலை பாதுகாப்ப தும் மருத்துவ அவசியம் ஆகின்றது. இவர்களுக் கான சிகிச்சை முறையினை சிறப்பு மருத்துவரே முடிவு செய்வார். கண்டிப்பாக சிகிச்சையினை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய மருத்துவ முன்னேற்றத்தின் மூலம் மிக நல்ல தீர்வுகளை காணும் வசதி உள்ளது என்பதே மகிழ்ச்சியான செய்திதான்.
வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ பாதிப்பிற்கு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயல்பட முடியாத நிலையை அடையலாம். கல்லீரல் நம் உடலுக்காக சில வித வேலைகளை செய்கின்றது. அதன் செயல் இழப்பு எத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். கல்லீரல் புற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெற தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
வெளிநாடு பயணிகளின் நலன் கருதி, ஆஸ்திரேலியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் உலக சுகாதார மையம் இன்னும் ஒப்புதல் வழங்காத நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சிகிச்சை முறை பொருட்கள் நிர்வாகம் (டிஜிஏ), ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாவது:-
சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள கோவேக்சின் மற்றும் பி.பி.ஐ.பி.பி. கார்வி ஆகிய தடுப்பூசிகள், ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இந்த தடுப்பூசிகள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குவதாகவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தொற்று பரவும் வாய்ப்புகள் குறைவு எனவும் கூடுதல் தகவல் தெரியவந்துள்ளது.
இதனால், கோவேக்சின் மற்றும் பி.பி.ஐ.பி.பி. கார்வி ஆகிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடையின்றி ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டு டோஸ் கோவேக்சின் போட்டுக்கொண்ட 12 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பி.பி.ஐ.பி.பி. கார்வி தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது சர்வதேச மாணவர்கள் நாடு திரும்புவதற்கும், தொழிலாளர்கள் பயணம் செய்வதற்கும் வழிவகை செய்யும்.
மேலும், நவம்பர் 1-ம்தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் பயண விலக்கு பெறாமலே வெளிநாடுகளுக்கு செல்லலாம்.
இவ்வாறு அறிவித்துள்ளது.
கீழப்பழுவூர் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் உள்ள கவுண்டர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி தனலட்சுமி(வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
அப்போது தண்ணீர் கொடுத்த தனலட்சுமியிடம் இருந்து சுமார் 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சங்கிலியை பறித்தது அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேலின் மகன் வினோத்குமார்(29) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் இருசக்கர வாகனத் திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆலோசகர் பாலகிருஷ்ணன், இணைச்செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் வீராசாமி, மாவட்ட தலைவர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருளுக்கும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் வாங்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இச்சட்டங்களால் விவசாயமும், விவசாயிகளும் மேலும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள், என்று தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டி சந்தையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி புளியடி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீன்சுருட்டி பகுதியில் நடைபெற்ற சந்தைக்கு வந்தார். மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு காய்கறிகள் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்றவரை தேடி வருகிறார்.
அரியலூர் அண்ணா சிலை அருகில் கட்டுமானத்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் கட்டுமானத்துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிமெண்டு விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக விற்பதை தடை செய்ய வேண்டும். மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
தினமும் அதிகரித்து வரும் இரும்பு கம்பி, செங்கல் மற்றும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 70). விவசாயியான இவர் வாழைத்தண்டு வியாபாரி ஆவார். நேற்று இவர் இலையூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த சிமெண்டு கலவை லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் முன்பக்க சக்கரம் ஏரி இறங்கியதில் முருகேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் லாரி டிரைவர் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் பாபநாசம் கல்லடி தெருவை சேர்ந்த மணிமாறன்(30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). விவசாயியான இவர் தனது மனைவி இளமதியுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் கணேசன் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இளமதி வீட்டை பூட்டிவிட்டு மிளகாய்ப்பொடி அரைக்க அரவை ஆலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மதியம் கணேசனும், இளமதியும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும் இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு, நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் இடையக்குறிச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவிந்தபுத்தூர் மேலத்தெருவை சேர்ந்த பூங்கொடி (வயது 37) வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் தினேஷ் மற்றும் ஆறுமுகம். இருவரும் நண்பர்கள். கல்லூரி மாணவர்கள்.
இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குழுமூரில் இருந்து அங்கனூருக்குசென்றுள்ளனர். அப்போது முருகேசன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மீது எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டுசிகிச்கைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகத்திற்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தெற்கு முதலியார் தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 85). இவர் இயற்கை உபாதை கழித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கேணிக்கரை திருக்குளத்தில் கால் கழுவ இறங்கியபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து ஏரியில் மூழ்கி இறந்தார். இதையறியாமல் அவரது உறவினர்கள் நேற்று முன் தினம் இரவு பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஏரிக்கு வந்தவர்கள், தண்ணீரில் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 கைதிகள் உரிய கொரோனோ பரிசோதனையுடன், டாக்டருடைய ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம், உடையார்பாளையம், தா.பழூர் போன்ற போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சாராயம், மது விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள், ஜெயங்கொண்டத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கிளைச் சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் கைதிகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், ஜெயிலர் பழனிக்குமார் பரிந்துரையின்பேரில் ஆயுதப்படை தலைமை காவலர் பீட்டர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 கைதிகளை உரிய கொரோனோ பரிசோதனையுடன், டாக்டருடைய ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.