search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லீரல் வீக்கத்தின் பாதிப்புகள்
    X
    கல்லீரல் வீக்கத்தின் பாதிப்புகள்

    மருத்துவம் அறிவோம் - கல்லீரல் வீக்கத்தின் பாதிப்புகள்

    மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் கல்லீரல் வீக்கத்தின் பாதிப்புகள் குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    hepatitis- இந்த வார்த்தையினை பலரும் அடிக்கடி கேள்விப்படுகின்றனர். அப்படி என்றால் என்ன? hepatitis- என்றால் கல்லீரல் வீக்கம் எனப்பொருள்படும். itis- என்றாலே வீக்கம் என்று பொருள் கொள்ளலாம். hepatitis- கல்லீரல் Gastritis-வயிற்றில் வீக்கம், கிArthritis- மூட்டுகளில் வீக்கம் என்று பொருள் வரும். நாம் இங்கு பார்க்கப் போவது கல்லீரல் வீக்கத்தினைப் பற்றியது ஆகும்.

    இந்த கல்லீரல் வீக்கம் சில மருந்துகள், குடி பழக்கம் காரணமாக ஏற்படலாம். அநேக நேரங்களில் வைரஸ் தாக்குதல் காரணமாகவும் கல்லீரல் வைரஸ் தாக்குதல் காரணமாகவும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வைரஸ் ஏ, பி, சி என பொதுவாகக் காணப்படுகின்றது.

    பொதுவில் பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு வாரங்களுக்கு அறிகுறி கூட தெரியாது இருக்கலாம். அறிகுறி காட்டத் தொடங்கும் போது இந்த மூன்று பிரிவு வைரசுகளும் சோர்வு, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, வயிற்று வலி, ஜுரம், கண்ணில் மஞ்சள், சருமத்தில் லேசான மஞ்சள் எனத் தோன்றலாம். வைரஸ் பி, சி பிரிவு நீண்ட நாளைய பாதிப்பாக இருக்கும் போது அறிகுறிகளே தெரியாது இருக்கலாம். இவ்வாறு சில வருடங்கள் கூட இருக்கலாம். அறிகுறிகள் காட்டும் நேரம் கல்லீரல் மிக அதிக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கலாம்.
    வைரஸ் ‘ஏ’ பிரிவு அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. சிறு பாதிப்பினைக் கொடுக்கலாம். பல நேரங்களில் பாதிப்பு அடைந்த வர்கள் எந்த அறிகுறியும் உணரக் கூட மாட்டார்கள். அதுவே போய் விடும். எந்த நீண்ட நாள் பாதிப்பும் இருக்காது.

    வைரஸ் ‘ஏ’ பிரிவு உணவு, தண்ணீர் மூலமாகத்தான் பரவும். கையினை சோப்பு கொண்டு கழுவுவதனை குறிப்பாக காலை கடன்களை முடித்த பிறகு கண்டிப்பாய் செய்ய வேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள், அதிகம் வேக வைக்காத உணவுகள் இவற்றின் மூலமும் பரவும். குறிப்பாக மனித கழிவுப் பொருள் வெளியேற்றத்திற்குப் பிறகும், பின்னர் அன்றாடம் உணவுப் பொருட்களை கையாளும் முன்பும் கண்டிப்பாய் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    வைரஸ் ‘பி’ பிரிவு சில சாதாரண அறிகுறிகளை குறுகிய காலத்திற்கு காட்டலாம். பின்னர் அது தானாகவே கூட சரியாகி விடும். ஆனால் இது வளர்ந்தவர்களுக்கு காணப்படும் ஒன்று. ஆனால் சிலருக்கு இவ்வாறு நிகழாமல் நீண்ட கால பாதிப்பு இந்த வைரஸ் தாக்கிய பெரியவர்களுக்கு ஏற்படுகின்றது. 90 சதவீதம் சிறு குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் போது அவர்களின் வாழ்நாள் முழுவதும் இந்த வைரஸ் அவர்களுடனேயே இருக்கின்றது. காலப்போக்கில் கல்லீரலில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

    ‘பி’ பிரிவு வைரஸ் பாதிக்கப்பட்டவரின் ரத்தம், திரவம் மூலம் பரவுகிறது. பாதிக்கப் பட்டவருடனான பாதுகாப்பு இல்லாத உடல் உறவு, ஊசிகள், ரேசர்கள், பல் தேய்க்கும் பிரஷ் மூலம் பரவுகின்றது. பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்கு பிரசவ காலத்தில் பரப்பி விடலாம்.

    ஆனால் ஒருவரை தொடுவதால் இது ஏற்படுவதில்லை. பொதுவில் சுகாதாரம் கருதி மற்றவர்களின் உணவுகளை பங்கிட்டு கொள்ள வேண்டாம். மற்ற சுகாதார குறைவு பாதிப்புகள் ஏற்படலாம் என்றுதான் வலியுறுத்து கின்றோம். பாதிக்கப்பட்டவர் இருமுவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவாது. இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் முக கவசமும், கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவு தலும் அவசியம். வைரஸ் ‘சி’ பிரிவில் சுமார் 30 சதவீத மக்கள் இதனை குறைந்த கால கட்டத்தில் வென்று விடுகின்றனர். மற்றவர்கள் இதனை வாழ்நாள் முழுவதும் உடலில் (கல்லீரலில்) சுமக்கின்றனர். ‘சி’ பிரிவு மிக அபாயகரமான விளைவுகளைத் தரக்கூடியது. இன்றைய காலத்தில் இதற்கு மிக முன்னேற்றமான மருத்துவ முறைகள் உள்ளன.

    பாதிக்கப்பட்டவரின் ரத்தம் தவறாக மற்றவருக்கு  செலுத்தப்பட்டால் இந்த பாதிப்பு ஏற்படலாம். இன்றைய மருத்துவத்தில் ரத்தம் செலுத்துவதற்கு முன்பு பல பரிசோதனைகளை செய்கின்றனர். எனவே இவ்வகையில் வைரஸ் ‘சி’ பரவுவது மிகவும் குறைந்துள்ளது எனலாம். கிருமி பாதிக்கப்பட்டவர்களின் ஊசிகளை முறையாய் அப்புறப்படுத்திவிட வேண்டும். பச்சை குத்திக் கொள்ளுதல் கூட கிருமி பாதிப்பிற்கு காரணம் ஆகலாம். எப்போழுதோ ஒரு முறை பல வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருந்தால் கூட பாதிக்கப்பட்டவர் வைரஸ் ‘சி’ கிருமி உடனேயே அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.

    டாக்டர் கமலி ஸ்ரீபால்
    டாக்டர் கமலி ஸ்ரீபால்
    தொடர்ந்து இருக்கும் இந்த பிரிவு வகைகள் கல்லீரலை அறிகுறி இல்லாமல் தாக்கி கொண்டே வரலாம். கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் ஆபத்தில் முடியலாம்.

    எப்படி நம்மை நாம் பாது காத்துக் கொள்வது? ‘ஏ’ பிரிவு வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. குறிப்பாக பாத்ரூம் சென்று வரும் போது அவசியம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வைரஸ் பி, சி, பிரிவு பாதிப்புகளை தவிர்க்க ரேசர்கள், நகம் வெட்டும் கருவிகள், பல் தேய்க்கும் பிரஷ்கள் இவற்றினை பகிர்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக சலூன் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் பாதுகாப்பற்ற தவறான உடல் உறவால் பரவும்  வாய்ப்புகளும் உண்டு என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் வைரஸ் தவிர்ப்பு வாக்சினை மருத்துவர் கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    வைரஸ் ‘ஏ’ பிரிவில் வயிற்றுப் போக்கு, வாந்தி இவற்றினை தவிர்க்க முறையான சிகிச்சை தேவை. தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளுதல், தாது உப்புகள் குறையாமல் அதற்கான மருத்துவர் அறிவுரைப்படி ஊட்டச்சத்து திரவங்கள் எடுத்துக் கொள்வது அவசியம்.  உடல் நலம் தேறும் வரை கடினமான உழைப்பினை தவிர்க்க வேண்டும்.

    வைரஸ் ‘பி’ பிரிவுக்கு வைரசினைகட்டுப் பாட்டில் வைப்பதற்கும், கல்லீரலை பாதுகாப்ப தும் மருத்துவ அவசியம் ஆகின்றது. இவர்களுக் கான சிகிச்சை முறையினை சிறப்பு மருத்துவரே முடிவு செய்வார். கண்டிப்பாக சிகிச்சையினை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இன்றைய மருத்துவ முன்னேற்றத்தின் மூலம் மிக நல்ல தீர்வுகளை காணும் வசதி உள்ளது என்பதே மகிழ்ச்சியான செய்திதான்.
    வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ பாதிப்பிற்கு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயல்பட முடியாத நிலையை அடையலாம். கல்லீரல் நம் உடலுக்காக சில வித வேலைகளை செய்கின்றது. அதன் செயல் இழப்பு எத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். கல்லீரல் புற்று நோயில் இருந்து பாதுகாப்பு பெற தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
    Next Story
    ×