என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் கைது

    கீழப்பழுவூர் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகில் உள்ள கவுண்டர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி தனலட்சுமி(வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். 

    அப்போது தண்ணீர் கொடுத்த தனலட்சுமியிடம் இருந்து சுமார் 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சங்கிலியை பறித்தது அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த சித்திரவேலின் மகன் வினோத்குமார்(29) என்பது தெரியவந்தது. 
    மேலும் அவர் இருசக்கர வாகனத் திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×