என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியில் மழை பெய்தது.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. தூறலாக பெய்ய தொடங்கிய மழை, தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைக்கு முன்பாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • 2 இடங்களில் நடைபெறுகிறது

    அரியலூர்:

    தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. தொலை தூரத்தில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 2 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:

    அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளையும் (வியாழக்கிழமை), திருமழபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவேளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கதண்டுகள் பறந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது
    • 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளிக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கடந்த சில நாட்களாக கதண்டு கூடு கட்டி இருந்துள்ளது. இந்நிலையில் அக்கிராமத்தில் நடைபெற்ற பால்குட திருவிழாவின் போது வெடி வெடித்ததில் கதண்டுகள் பறந்துள்ளது. அவை நேற்று காலையிலும் பள்ளி வளாகத்தில் பறந்து கொண்டு இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கதண்டுகளை தீயிட்டு அழித்தனர். 

    • பெண் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்
    • மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் இளவரசன் (வயது 43). இவர் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதேபோல் 2015-ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்கெடுமை செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் இளவரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ெபரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி இளவரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தவிட்டார்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி மனைவி வசந்தா (51). இவர் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இவரது மேல் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ெபரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி வசந்தாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தவிட்டார்.

    • தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    • ஊர்வலத்தில் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போஷான் அபியான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஜெயங்கொண்ட வட்டாரத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடை பெற்றது.

    மேலும் தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் முருகானந்தம், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவியரசி வரவேற்று பேசினார்.

    விழிப்புணர்வு ஊர்வலமானது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக அண்ணாசிலைக்கு சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக வந்து முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் மேற்பார்வையாளர்கள் வளர்மதி, நவமணி, சத்தியபாமா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.

    முடிவில் வட்டார திட்ட உதவியாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்துறை கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியினை செந்துறை மாவட்ட கல்வி அலுவலர் பேபி அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தனி போட்டி மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    உடற்கல்வி ஆசிரியர்கள், போட்டிகளை நடத்தினர். சோழன்குடிக்காடு ஆசிரியர்கள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் கொள்ளை நடந்துள்ளது
    • குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது நடந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் வசிப்பவர் கமலக்கண்ணன் (வயது 62). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 29 -ந் தேதி குடும்பத்தோடு கமலக்கண்ணன் கன்னியாகுமரி சுற்றுலாவிற்கு சென்று பின்னர் இன்று கா லை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து போது வீட்டின் முன் கதவு கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது
    • சிறப்பு யாகம் நடத்தி விஷேச அபிஷேகம் செய்யப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கொப்பாட்டி அம்மன் கோயில். இங்கு கொப்பாட்டி அம்மன், பாவாயி அம்மன், பாப்பாத்தி அம்மன் ஆகிய 3 அம்மன்கள் நிலைகொண்டுள்ளன. இந்த கோவிலை உஞ்சினி கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    குடிசாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்த கொப்பாட்டி அம்மன் கோவிலுக்கு ஆடி பூரம் அன்று திருவிழா நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு யாகம் நடத்தி விஷேச அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 அம்மன்களுக்கும் சந்தனக் காப்பு வலையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

    அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் திரளான பெண்கள் கலந்து விளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொப்பாட்டி அம்மன் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.

    • ஜவுளி வியாபாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • குடும்பத்துடுன் சென்னைக்கு சென்ற போது நடந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் ம ாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தர்மலிங்கம் (வயது 50). இவர், ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றிருந்த இவர், நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த புடவைகள் மற்றும் பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்துறை போலீசாரை கண்டித்து கடையடைப்பு நடைபெற்றது
    • முத்துசாமி என்பவர் மர்மான முறையில் உயிரிழந்தார்

    அரியலூர்:

    செந்துறை அருகேயுள்ள ஆர்.எஸ்.மாத்தரில் காவல் துறையை கண்டிதது கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பெரியாக்குறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது குறித்து அவரின் உறவினரான தமிழ்ப்பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளர் முடிமன்னன், செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு பெரியாக்குறிச்சியில் முத்துசாமியின் உடலைப் பார்க்க சென்றார். அப்போது அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து முத்துச்சாமியின் உடலை பார்க்க விடாமல் தடுத்த செந்துறை காவல் உதவி ஆய்வாளர் தன்ராஜை கண்டித்து ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் உள்ள கடைகளை அடைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வருகிற 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் கவுதமன் தெரிவித்துள்ளார். 

    • சுதந்திரதின விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

    அரியலூர்:

    சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை வகித்து தெரிவித்ததாவது: அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், தங்கள் பகுதியில் உள்ள சுதந்திர போராட்டத்தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்து, மாலை அணிவிக்க வேண்டும். 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் அறிவிப்பின்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மலையாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் மடியேந்தி சாமியிடம் பிச்சை கேட்பது போல சாதம் பெற்று சென்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடியில் உள்ள சதுரகிரி மலையில் அமைந்துள்ளது மலையாண்டி சாமி கோவில். இந்த கோவிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வளர்பிறையில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இக்கோவிலின் இந்த ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. இதில் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

    மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் பெண்களுக்கு மடிப்பிச்சை சோறு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி ஏராளமான பெண்கள் தங்கள் மடியேந்தி சாமியிடம் பிச்சை கேட்பது போல சாதம் பெற்று சென்றனர். மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக மலையாண்டி சாமிக்கு வெள்ளி, சில்வர், இரும்பு முதலிய உலோகங்களால் ஆன வேல்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களி லிருந்தும், வெளி மாவட்டப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை பூதகுடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×