என் மலர்
உள்ளூர் செய்திகள்

கதண்டுகள் பறந்ததால் பள்ளிக்கு விடுமுறை
- கதண்டுகள் பறந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது
- 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கடந்த சில நாட்களாக கதண்டு கூடு கட்டி இருந்துள்ளது. இந்நிலையில் அக்கிராமத்தில் நடைபெற்ற பால்குட திருவிழாவின் போது வெடி வெடித்ததில் கதண்டுகள் பறந்துள்ளது. அவை நேற்று காலையிலும் பள்ளி வளாகத்தில் பறந்து கொண்டு இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.
Next Story






