என் மலர்
உள்ளூர் செய்திகள்

என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் கொள்ளை
- என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் கொள்ளை நடந்துள்ளது
- குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது நடந்துள்ளது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் வசிப்பவர் கமலக்கண்ணன் (வயது 62). இவர் நெசவு தொழில் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29 -ந் தேதி குடும்பத்தோடு கமலக்கண்ணன் கன்னியாகுமரி சுற்றுலாவிற்கு சென்று பின்னர் இன்று கா லை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து போது வீட்டின் முன் கதவு கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஒரு லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story