என் மலர்
நீங்கள் தேடியது "SANDALWOOD BRACELET DECORATION"
- அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது
- சிறப்பு யாகம் நடத்தி விஷேச அபிஷேகம் செய்யப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கொப்பாட்டி அம்மன் கோயில். இங்கு கொப்பாட்டி அம்மன், பாவாயி அம்மன், பாப்பாத்தி அம்மன் ஆகிய 3 அம்மன்கள் நிலைகொண்டுள்ளன. இந்த கோவிலை உஞ்சினி கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
குடிசாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்த கொப்பாட்டி அம்மன் கோவிலுக்கு ஆடி பூரம் அன்று திருவிழா நடத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு யாகம் நடத்தி விஷேச அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 அம்மன்களுக்கும் சந்தனக் காப்பு வலையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் திரளான பெண்கள் கலந்து விளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கொப்பாட்டி அம்மன் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.






