என் மலர்
அரியலூர்
- சுகாதார ஊக்குநர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
- கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து பேசிய போது :-
அனைத்து கிராமங்களிலும் கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஊக்குநர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் அகிலா, ஒன்றிய ஒருங்கிணப்பாளர் மணிவேல், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். இதே போல ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
- குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கடுகூர் மற்றும் வீராக்கன் ஆகிய இடங்களிலுள்ள கால்நை மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், கால்நடை மருந்தகத்துக்கு தினசரி வரும் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், முதலுவி மற்றும் அவசர அறுைவ சிகிச்சைகளுக்கு தேவையான மருந்து இருப்பு, தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியின் பயன்பாட்டு விவரம் மற்றும் பயனடைந்த ஆடுகளின் எண்ணிக்கை குறித்து கடுகூர் கால்நடை மருத்துவரிடம் கூடுதல் கேட்டறிந்தார். மேலும் மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து குறித்த காலத்தில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கால்நடை மருந்தகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் கால்நடைகளுக்காகப் பராமரிக்கப்பட்டு வரும் தீவன மரங்கள் மற்றும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிரை தொழில்முனைவோராக கொண்டு வெள்ளாடு வளர்க்கும் திட்டததின் கீழ் வழங்கப்பட்ட ஆடுகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிடடு ஆடுகளை முறையாக பராமரிக்கவும், அவ்வப்போது கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தவும் குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.
பின்னர் உடையார் பாளையத்தை அடுத்த வீராக்கன் கால்நடை மருந்தகத்துக்கு சென்று அங்கு கால்நடை காப்பீடு திட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
- 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
- கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நாயகனைபிரியாள் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் மன்மத ராசா (வயது 22) சுமரன் (22) இருவரும் கடந்த ஜூன் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துயைின் பேரில் மன்மதராஜா, சுமரன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
- விஸ்வநாதனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- விஸ்வநாதன் நேற்று முந்திரித்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வடக்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 36). விவசாயி. இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகளும் உள்ளனர்.
விஸ்வநாதனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் கடன் சுமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த விஸ்வநாதன் நேற்று முந்திரித்தோப்பில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் விஸ்வநாதனின் மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரியலூரைச் சேர்ந்தவர் முத்துவேல் (45). விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளர்.
- முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர் :
அரியலூரைச் சேர்ந்தவர் முத்துவேல் (45). விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளரான இவர், தனது முகநூல் பக்கத்தில், பிற மத கடவுளை தவறாக சித்தரித்து, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் விதமாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாக அரியலூர் கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார், அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், முத்துவேல் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பிற மதங்களை இழிவுபடுத்துதல், மத மோதல்களை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் அரியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோவிந்தம்மாள்தனக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த ஒருவர், கோவிந்தம்மாளின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்திகளை பறிக்க முயன்றுள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த விழுதுடையான் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், கோவிந்தம்மாளின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்திகளை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவிந்தம்மாள் சத்தம் போட்டதையடுத்து, அருகில் உள்ள வயலில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து கோவிந்தம்மாள் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தம்மாளிடம் நகை பறிக்க முயன்றது பெரியாத்துக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் பதுக்கி வைத்து மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
- இதைத் தொடர்ந்து போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் பதுக்கி வைத்து மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதிக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விற்றவரை பிடித்து விசாரித்தபோது,
அவர் ஜெயங்கொண்டம் வடக்குத்தெருவை சேர்ந்த பாலகுரு(வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாலகுருவை கைது செய்து, அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அரியலூர்:
தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜையும், பால்குடம் மற்றும் அன்னபடையல் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, அமுதபடையல் இட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அம்மன் வீதி நடந்தது.
- வாகன விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
- தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 32,), அன்புச்செல்வன் (35) கூலித் தொழிலாளியான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இடைக்கட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சின்னவளையம் கிராம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்றது
அரியலூர்:
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்நடை பெற்றது. இதன்படி அரியலூர் பேருந்துநிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் எஸ்.எம். சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன் அழகானந்தம், மாவட்ட பொறுப்பாளர்கள் அமானுல்லா, பாலசிவகுமார், தியாகராஜன், அழகானந்தம், ரவிச்சந்திரன், சகுந்தலா தேவி, பழனிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டன்.
இதைபோல் ஜெயங்கொண்டம் நகரத்தில் சிதம்பரம் சாலையிலிருந்து நான்கு ரோட்டில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள்தா.பழூர் சரவணன் ஜெயங்கொண்டம் வடக்கு சக்திவேல், தெற்குகண்ணன், ஆண்டிமடம் வடக்கு சாமிநாதன், தெற்கு வேல்முருகன், உடையார்பாளையம் நகர காங்கிரஸ் தலைவர் அக்பர் அலி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ஆனந்தராஜ்,
மாவட்ட சிறுபான்மை தலைவர் குருசாமி,ஜெயங்கொண்டம் வட்டார நிர்வாகிகள்பன்னீர்செல்வம், தர்மலிங்கம், ராமச்சந்திரன், ஜம்பு, ரெங்கநாதமூர்த்தி, அந்தோனி டேவிட், ஜெயங்கொண்டம் நகர நிர்வாகிகள்ஜெ கநாதன், சந்திரசேகரன், தங்கராசு, ரமேஷ், காளிமுத்து, மற்றும் உடையார்பாளையம் ஆண்டிமடம் இலையூர் நிர்வாகிகள்இளைஞர் காங்கிரஸ்மா வட்டதுணைத்தலைவர் சிற்றரசன், ஜெயப்ரகாஷ்தீபன், மதன் உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
- மாவட்ட நீதிபதி தகவல்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 13ஆம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்நடைபெற உள்ளது.
மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும்,
முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது, நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்,
அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம், எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
- வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்
அரியலூர்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30) இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2021-ம் ஆண்டில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் சிறுமிக்கு பாலியல தொல்லை கொடுத்ததற்காக 7 ஆண்டுகள சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததற்காக 2 ஆண்டுகள் சிறை, ரூ.2,500 அபராதம் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை, ரூ.2,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ராஜா ஆஜரானார்.






