என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி
  X

  மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவிந்தம்மாள்தனக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
  • அப்போது அங்கு வந்த ஒருவர், கோவிந்தம்மாளின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்திகளை பறிக்க முயன்றுள்ளார்.

  அரியலூர் :

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த விழுதுடையான் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 70). இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த ஒருவர், கோவிந்தம்மாளின் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்திகளை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவிந்தம்மாள் சத்தம் போட்டதையடுத்து, அருகில் உள்ள வயலில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

  இது குறித்து கோவிந்தம்மாள் ஆண்டிமடம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தம்மாளிடம் நகை பறிக்க முயன்றது பெரியாத்துக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×