என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதார ஊக்குநர்கள் ஆய்வுக்கூட்டம்
    X

    சுகாதார ஊக்குநர்கள் ஆய்வுக்கூட்டம்

    • சுகாதார ஊக்குநர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து பேசிய போது :-

    அனைத்து கிராமங்களிலும் கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஊக்குநர்களுக்கு அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் அகிலா, ஒன்றிய ஒருங்கிணப்பாளர் மணிவேல், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். இதே போல ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×