என் மலர்
அரியலூர்
- ஜெயங்கொண்டத்தில் 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அமிர்தராயன் கோட்டை நாகராஜன் என்பவரது மகன் காசிராஜன் (வயது 21) என்பதும், இவர் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த 80 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சா பொட்டலங்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்."
- பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
- கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ரம்யா (வயது 39). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கு மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரம்யா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் (48) என்பவரை கைது செய்தார்."
- உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது
- ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் வனிதா ராவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், நன்மைகள் ஆகியன குறித்து பேசினர்.
ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராணி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் வடிவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்துறை உதவிப்பேராசரியர் பவானி வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவர் கனிெமாழி நன்றி கூறினார்.
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
- அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக அடையாள அட்டைபெறும் வகையில் குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதன்படி முதல் கட்டமாக அரியலூர் குறுவட்டத்துக்கு கலெக்டர் அலுவலக வளாகதில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (10-ந்தேதி) குவாகம் குறுவட்டத்துக்கு வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 12-ந்தேதியும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் எலும்புமுறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநலன், கண், குழந்தைகள் நலன் ஆகிய மருத்துவர்கள் பங்கறே்று மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்குவர். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மட்டும் தங்களது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5, ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.
- மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- இடைத்தரகர்கள் இன்றி மணல் அள்ள வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் இடைத்தரகர் இன்றி மணல் குவாரி தொடங்கக் கோரி, மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம், சன்னாசி நல்லூர், சிலுப்பனூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்களின் பல்வேறு போரட்டங்களையடுத்து, வரும் 21 ஆம் தேதி முதல் குவாரி இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் குவாரியில் இருந்து பொக்லைன் மூலம் அள்ளப்பட்ட மணல் இருப்பு வைக்கப்பட்டு மாட்டு வண்டிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இடைத்தரகர் இன்றி தொழிலாளர்களே ஆற்றில் இறங்கி மணல் அள்ளிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாய பாதுகாப்பு சங்க அமைப்பாளர் பாலசிங்கம், மாட்டு வண்டி உரிமையாளர் நல சங்கத் தலைவர் மோகன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் மாட்டு வண்டிகளுடன் ஆற்றில் இறங்கி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் கனிமவளத் துறையினர், கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தயைடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.
அரியலூர்:
செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பால்குடத் திருவிழாவுக்காக அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதற்கு காவல்துறையை சேர்ந்த சிலரும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்குள் நுழைய விடாமல் மாற்று சமுகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுத்த நிறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில் கலெக்டரிடம் மாணவர்கள் மற்றும் ெபற்றோர்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், 10 நபர்கள் உள்ளே சென்று மனு அளிக்க கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. ஆனாலும் அனைவரையும் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், காவல்துறையை கண்டித்தும், கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட முகாமை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறி அவர்களிடமிருந்து மனுவினை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- முதியவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவில் வசித்து வருபவர் வைத்திலிங்கம்(வயது 75). இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணனின் மகன் சுதாகர்(36) குடிபோதையில், வைத்திலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி மது பாட்டில் வாங்கி வரக்கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளார். மது வாங்கி வர மறுத்ததால், ஆத்திரமடைந்த சுதாகர் வைத்திலிங்கத்தை பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வைத்திலிங்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தா.பழூர் போலீசில் வைத்திலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்."
- மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
- அரியலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுட்கால சிறை தண்டனையும் பத்தாயிரம் அபராதமும் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் வினோத் (வயது27). இவர் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து கல்லூரி மாணவி பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் வினோத் வீட்டில் சென்று கேட்டபோது திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது குறித்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்து. இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி ஆனந்தன் வினோத்திற்கு கல்லூரி மாணவியை பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதற்காக ஆயுள் காலம் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மேலும் வஞ்சனை செய்ததற்காக ஒரு வருடம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
- வணிகவரி துறை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்
- பரபரப்பு கடிதம் சிக்கியது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சிவகுமார் (வயது 27). இவர் வணிகவரித்துறையில் பணியாற்றி வந்தார்.
இவரின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளார். தந்தை ராஜவுடன் வசித்து வந்த சிவகுமாருக்கு, திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவந்த சிவகுமார், இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இன்று காலை வெகு நேரமாக எழுந்து வராததால், அவரது தந்தை ராஜா, மகனை எழுப்புவதற்காக சென்றார். அறையின் கதவை திறந்து பார்த்த போது, சிவகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த ராஜா, அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு விசாரணை மேற்கொண்ட போலீசார், சிவகுமாரின் அறையை சோதனை செய்தனர். அப்போது ஒரு கடிதத்தை கைப்பற்றினர். இதில் மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
- நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.
மேலும் இதைப்பற்றி இரவு நேர மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இதுபற்றி தலைமை மருத்துவரிடம் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் இரவு நேர மருத்துவர்கள் மரியாதை குறைவாக பேசுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். வரும் நோயாளிகளிடம் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும். இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மருத்துவர்கள் அலட்சியப்படுத்துவதால் சில உயிர்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரத்திற்கு கூட மருத்துவம் இல்லாமல் இருப்பது ஏன், அதற்காக தான் அரசு மருத்துவமனை இருக்கிறதா என நோயாளிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இது போன்ற மருத்துவர்களுடைய அலட்சிய போக்கினை கைவிட்டு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கை என நோயாளிகள் தெரிவித்தனர்.
- ஒரே நாளில் 21,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- அரியலூரில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
அரியலூர்:
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 33-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் 21,650 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது."
- செல்வமுத்து மாரியம்மன் கோவில் பால்குட விழா நடந்தது
- ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர்:
அரியலூர் மணியன்குட்டை தெருவிலுள்ள செல்வமுத்துமாரியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, அரியலூர் பள்ளேரியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் செல்வ முத்துமாரியம்மனுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மூலுவர் செல்வமுத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது வீடுதோறும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.






