search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உரிய மருந்து ஊசி இல்லாததால் நோயாளிகள் அவதி
    X

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உரிய மருந்து ஊசி இல்லாததால் நோயாளிகள் அவதி

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
    • நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

    மேலும் இதைப்பற்றி இரவு நேர மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இதுபற்றி தலைமை மருத்துவரிடம் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இந்த பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் இரவு நேர மருத்துவர்கள் மரியாதை குறைவாக பேசுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். வரும் நோயாளிகளிடம் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும். இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மருத்துவர்கள் அலட்சியப்படுத்துவதால் சில உயிர்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரத்திற்கு கூட மருத்துவம் இல்லாமல் இருப்பது ஏன், அதற்காக தான் அரசு மருத்துவமனை இருக்கிறதா என நோயாளிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இது போன்ற மருத்துவர்களுடைய அலட்சிய போக்கினை கைவிட்டு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கை என நோயாளிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×