என் மலர்tooltip icon

    அரியலூர்

    • கஜலட்சுமி பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    • பின்னர் அவர் வீடு திரும்பவில்லை

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் கஜலட்சுமி(வயது 19). இவர் பஸ் நிறுத்தம் சாலையில் உள்ள தனியார் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் நேற்று காலை செல்போன் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவரை உறவினர்கள் வீடுகள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கஜலட்சுமியின் தாய் புனிதா புகார் அளித்தார். அதன்பேரில் கஜலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை தெருவை சேர்ந்த முருகன்-ஜெயந்தி தம்பதியரின் மகன் கிருபாகர் (வயது 11).
    • கிருபாகர் கராத்தே சாதனை நிகழ்த்தும் போட்டியில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து சாகசம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை தெருவை சேர்ந்த முருகன்-ஜெயந்தி தம்பதியரின் மகன் கிருபாகர் (வயது 11). பாத்திமா மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கராத்தே சாதனை நிகழ்த்தும் போட்டியில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து சாகசம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

    இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி மாணவர் கிருபாகரை அழைத்து பாராட்டி, அவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்து தெரிவித்தார்.


    • ஜெயங்கொண்டத்தில் கோவில் வழிபாட்டுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
    • சூரக்குழி ரெட்டப் பள்ளம் ஏரியில் மாயமான அஜய் பிணமாக கிடப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அண்ணன்காரன் குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில நேற்று முன்தினம் சூரக்குழி ரெட்டப்பள்ளம் அருகிலுள்ள தனது உறவினரின் குலதெய்வ கோவில் விழாவில் பங்கேற்பதற்காக வேல்முருகன் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.

    அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த வேல்முருகனின் மூத்த மகன் அஜய் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். இதற்கிடையே சூரக்குழி ரெட்டப் பள்ளம் ஏரியில் மாயமான அஜய் பிணமாக கிடப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆண்டிமடம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடகை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. திருவிழாவுக்கு சென்ற இடத்தில் குழந்தை இறந்தது அங்கு வந்திருந்த உறவினர்கள் மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அரியலூரில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டர் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தமிழ்நாடு அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டர் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கு.விமலா கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு சீருடை, ஷூ, முதலுதவிப் பெட்டி உள்ளிட்டவைகள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கி, அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க அமைப்புச்சாரா ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலாளர் அப்பாஸ், பொருளாளர் கொளஞ்சியப்பன், இணைச் செயலாளர் ராஜ்குமார், செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹீப், அமைப்புச்சார ஓட்டுநர் அணியைச் சேர்ந்த க.பாபு, மாவட்ட ஆலோசகர் சகானா, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீதான முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

    வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை நாள்களில் பணிகள் வழங்கப்படுவது, ஆய்வுகள் மற்றும் கட்ச்செவி, காணொலி வாயிலாக நடத்தப்படும் ஆய்வுகளை கைவிட வேண்டும்.

    ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுப்பட்ட மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குநர்கள் அனைவருக்கும் 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சேக்தாவூத், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    • மின்சாரம் பாய்ந்து மாடு செத்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பசுமாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இந்நிலையில் எந்திரங்களின் சோதனை ஓட்டத்திற்காக மின்மாற்றியில் இருந்து தற்காலிகமாக மின்சாரம் பெற்று பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் ஞானசேகரன் என்பவரது மாடு அந்த வழியாக வந்தபோது, மின்வயரை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே செத்தது.

    இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர் மற்றும் அப்பகுதி மக்கள் மின் வயரை பாதுகாப்பின்றி அலட்சியமாக அமைத்திருந்ததாக, அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தேவையில்லை என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவர் செல்வம் தலைமையிலான குழுவினர் இறந்த பசுமாட்டை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மனைவி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன்(வயது 58). இவர் டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்றுவிட்டு, மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவரது மனைவி அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி "

    • நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்
    • 17 கிராம் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுபா(வயது 32). இவர் சம்பவத்தன்று, வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பீரோவின் கதவு திறக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு பவுன் சங்கிலி, 3 ஜோடி தோடு உள்பட மொத்தம் 17 கிராம் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சுபா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், நகைகளை திருடியது வீரசோழபுரம் வீராரெட்டி தெருவை சேர்ந்த நவீன்குமாரின் மனைவி சினேகா(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து சினேகாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடகு வைத்தவருக்கு நகைகளுக்குரிய பணம், இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டனர்.
    • அறிவிப்பின்றி 240 கிராம் தங்க நகைகள் ஏலம்:

    அரியலூர்:

    அறிவிப்பின்றி ஏலம் விடப்பட்ட 240 கிராம் தங்க நகைளுக்கு உரிய பணம் மற்றும் ரூ.1 லட்சம் இழப்பீடு தொகை நகை அடகு வைத்தவருக்கு வழங்க வேண்டும் என்று தனியார் நிதி நிறுவனத்துக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

    அரியலூர் அரசு நகர், அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் செல்வராஜ்(வயது 68). அரசு சிமென்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவரான இவர், தனக்கு சொந்தமான 240 கிராம் தங்க நகைகளை அரியலூரில் இயங்கி வரும் இந்திய இன்போ லைன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.4,76,000 கடன் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், வட்டியுடன் அசல் தொகையை செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிடில் நகை ஏலம் விடப்படும் என்று செல்வராஜூக்கு அந்த நிதி நிறுவனம் அறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் ஏலம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு முறையான அறிவிப்பு அனுப்பாமல், மும்பை பதிப்பில் வெளியாகும் ஒரு செய்திநாளிதழில்ல ஏலம் விளம்பரம் செய்யப்பட்டு, அவரது நகைகள் ஏலத்தில் விடப்பட்டன.

    இந்நிலையில், நமது நகைகள் ஏலம் விடப்பட்டதை அறிந்த செல்வராஜ், அந்த நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, எந்த தேதியில், எவ்வளவு தொகைக்கு ஏலம் விடப்பட்டது, யாரால் எடுக்கப்பட்டது போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த நிதி நிறுவனம் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை.

    இதையடுத்து செல்வராஜ், தமது நகைகளை திரும்பத் தருமாறும், சேவைக் குறைப்பாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

    இருதரப்பிலும் சாட்சியங்களும் ஆவணங்களையும் பரிசீலித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.

    நகையை அடமானம் வைத்து கடன் பெற்றவருக்கு முறையாக அறிவிப்பு அனுப்பாமல் ஏலம் விட்டது சேவை குறைபாடு.

    அவர் அடமானம் வைத்த 240 கிராம் தங்க நகைக்கு இன்றைய சந்தை மதிப்பு தொகையை நிதி நிறுவனம் திரும்ப வழங்க வேண்டும். அந்த பணத்தில் இருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன் மற்றும் சாதாரண வட்டியை கழித்துக் கொள்ள வேண்டும். சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபபட்டது.

    திருமானூரில் நடைபெற்ற அக்கட்சியின் கோரிக்கை மாநாடு, நிதியளிப்பு பொது கூட்டத்தில். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    திருமானூர், திருமழப்பாடி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை குறைக்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை நகர்புறங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக் கூட்டத்துக்கு அக்கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் டில்லிபாபு தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏசுதாஸ், சுப்பு, கார்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.கணேசன், ஆரோக்கியநாதன், லட்சுமணன், கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • 26-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர், தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற 26-ந்தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் உதவி சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பாரி (வயது 59), விவசாயி. இவரது மகள் ஆனந்தி (23). இவர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆனந்தி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்."

    ×