என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீதான முந்தைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை நாள்களில் பணிகள் வழங்கப்படுவது, ஆய்வுகள் மற்றும் கட்ச்செவி, காணொலி வாயிலாக நடத்தப்படும் ஆய்வுகளை கைவிட வேண்டும்.
ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுப்பட்ட மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குநர்கள் அனைவருக்கும் 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சேக்தாவூத், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.






