என் மலர்
அரியலூர்
- பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அவர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் புதியதாக தொடங்கப்பட்டு, மூன்று மாதம் முடிவடைந்த 20 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியாக ஒரு குழுவுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உரிமமின்றி மரக்கன்றுகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில்
அரியலூர்:
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமம் பெறாமல் காய், கனி மரக்கன்றுகள், நாற்றுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற 70 நர்சரிகள் இயங்கி வருகின்றன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான முந்திரி, மா, பலா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, தென்னங்கன்றுகள் மற்றும் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் நாற்றுகள் வாங்கும் போது அரசு அங்கீகாரம் பெற்ற நர்சரி பண்ணைகளில் மட்டுமே வாங்க வேண்டும். நர்சரி பண்ணையாளர்கள் காய்கறி நாற்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது அதற்குரிய ரசீது வழங்க வேண்டும்.
கன்றுகள் இருப்பு விபரங்களை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து முறையாக கணக்கு பராமரிக்க வேண்டும். அரசு விதை உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு பழ மரக்கன்றுகள் மற்றும் நாற்றுகள் விற்பனைச் செய்தால் விதைகட்டுப்பாட்டு ஆணையின் படிஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
- அரியலூரில் கட்சி கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி
அரியலூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழுர், தா.பொட்ட கொல்லை, உடையார்பாளையம், விக்கிரமங்கலம், கீழப்பழுவூர், திருமானூர், ஆண்டிமடம், கூவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்,
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தால் காங்கிரசின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை உள்ள கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள் விளை பொருட்களுக்கு ஆதார விலை கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது. இதனால் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.மழைக்காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் சங்கர், நகரத் தலைவர் சிவக்குமார், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
- ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மானிய விலையில் பெட்ரோல் வழங்க கோரிக்கை
அரியலூர்:
அரியலூரில் ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். மாவட்டத் தலைவர் தனசிங், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலர் ஆறுமுகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அதில் உள்ளாட்சிகளில் நீண்ட காலமாக பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைவருக்கும் கூலி உயர்வு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு இலவச மனையுடன் வீடு கட்டி தர வேண்டும். குடி நீர் ஆபரேட்டர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், காஸ் வழங்க ேவண்டும் அரியலூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம்-ஜெயங்கொண்டம் - அரியலூர்-பெரம்பலூர் வழியாக சேலத்துக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றியச் செயலர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
- டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) ராஜசேகரன் (35) ஓட்டுநர். இவரது மனைவி ஜெயா (33). மகள் சுபாஷினி (11). சம்பவத்தன்று ராஜசேகரன் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு ஜெயா தனது மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ஜெயா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துள்ளனர். இதில் திடீக்கிட்டு எழுந்த ஜெயா தனது அருகில் முகத்தை மூடியவாறு 4 பேர் டவுசருடன் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சத்தம் போட டவுசர் கொள்ளையர்கள் ஜெயாவின் வாயை பொத்தி பிடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு முன்பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
முன்னதாக அதே பகுதியில் தனியார் கூரியர் ஓட்டுநர் கமலகாந்தன் என்பவரின் மனைவி பணிமலர் (37) மகள் சிவாணி(4) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களது வீட்டிலும் திருட சென்ற நிலையில் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த டவுசர் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், செக் புக் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை தண்ணீரில் முக்கி வெளியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுசர் கொள்ளையர்கள் திருடுவதற்கு முன்பாக வீட்டில் இருந்த சொம்பில் மதுபானத்தை ஊற்றி குடித்துவிட்டு ஆற அமர திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
- பூச்சி மருந்து குடித்து முதியவர் உயிரிழந்தார்
- வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (65) இவரது மனைவி ஆரோக்கிய மேரி (60) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். ஞானபிரகாசத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அடிக்கடி வயிற்று வலியில் துடித்து வந்த ஞானபிரகாசம் வலி தாங்காமல் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.மயங்கி கிடந்தவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது
- மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்க மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர் ஆசிரியர் சங்க மாநாட்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் ரத்னா பரிந்துரையின்படி குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் , மருத்துவ காப்பீடு திட்டம் , அகவிலைப்படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை வரும் நிதியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் வி.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சங்கர்பாபு சிறப்புரையாற்றினார்.அரியலூர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கண்ணுசாமி , ராஜேந்திரன், ஜெகநாதன், அன்பழகன், மதுரை மாவட்ட தலைவர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக நிர்வாகி அருணாசலம் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அருள்மொழி நன்றி தெரிவித்தார். மாநாட்டில் அரியலூர் , பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் ஊர் நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.
- சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்
- விவசாயி உயிரிழந்த சம்பவத்தில்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட காசங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 52). விவசாயி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி செந்துறை ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை செல்ல விடாமல் செந்துறை போலீசார் வழிமறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் செந்துறை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
- அரியலூர் அரசு பள்ளி மாணவி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்
- ஆசிய செஸ் போட்டியில்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அன்புரோஜா. குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இளையமகள் சர்வாணிகா (வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வாணிகா, செஸ் போட்டியில் ஆர்வம் அதிகம் கொண்டதால் பெற்றோர் அவருக்கு உரிய பயிற்சியினை அளித்தனர். ஒன்றிய அளவிலான மண்டல அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட சர்வாணிகா வெற்றி பெற்ற சாதித்து உள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் கடந்த 3-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 16-வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சர்வாணிகா 3 பிரிவுகளிலும் வெற்றி பெற்று சா தனை படைத்துள்ளார். 7 வயதுக்குட்பட்டோருக்கான முதல் பரிவில் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாம் பிரிவல் நடைபெற்ற 7 சுற்றுகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து நடைபெற்ற மூன்றாம் பிரிவில் 9 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.இதன் மூலம் 3 பிரிவுகளில் நடைபெற்ற 23 ஆட்டங்களிலும் வெற்றியை பெற்று, ஆசிய அளவில் புதிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். 3 பிரிவுகளிலும் த ங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 தங்கப்பதக்கங்களையும், 3 கோப்பைகள் மற்றும் அணிக்கான கோப்பைகள் உட்பட மொத்தம் 5 கோப்பைகளையும் வென்றுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ள 7 வயது மாணவி சர்வாணிகாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- துணை தோட்டக்கலை அலுவலரை தொடர்பு ெகாள்ளலாம்
அரியலூர்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரபி பருவத்தில் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் பாதிப்புகளில் இருந்து வாழ்வாதாரத்தினையும், பொருளாதார இழப்பினையும் பாதுகாக்க பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தகவல்களுடன் கூடிய புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சிட்டா நகல், நடப்பு பயிர் சாகுபடி அடங்கல், முன் மொழிவுப் படிவம் ஆகியவற்றை கொண்டு தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்டணம் செலுத்தலாம். தனியார் நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 செலுத்திட கடைசி நாள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் துணை தோட்டக்கலை அலுவலரை 9943841155 என்ற செல்போன் எண்ணிலும், திருமானூர் தோட்டக்கலை அலுவலரை 8760531338 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
- சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- கலெக்டர்கள் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்
ஐக்கிய நாடுகள் பொது சபை 1948-ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை பிரகடனப்படுத்தியது. அதனை தொடர்ந்து 1950-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி சர்வதேச மனித உரிமைகள் தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. இதில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்து துறை அலுவலர்கள் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் போலீசாரும் சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்."
- மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
- குடும்பத்தகராறு காரணமாக சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது34) கூலித் தொழிலாளியான இவர், மனைவி ஜெயப்பிரியாவுடன் (26) ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக நேற்று முன் தினம் வீட்டில் இருந்த சிறிய தாம்பூலத் தட்டை ெஜயப்பிரியா மீது வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், கழுத்துப் பகுதி வெட்டுப்பட்ட நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயன்றதாக ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






