என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
    X

    ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்

    • ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மானிய விலையில் பெட்ரோல் வழங்க கோரிக்கை

    அரியலூர்:

    அரியலூரில் ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். மாவட்டத் தலைவர் தனசிங், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலர் ஆறுமுகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    அதில் உள்ளாட்சிகளில் நீண்ட காலமாக பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைவருக்கும் கூலி உயர்வு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு இலவச மனையுடன் வீடு கட்டி தர வேண்டும். குடி நீர் ஆபரேட்டர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், காஸ் வழங்க ேவண்டும் அரியலூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம்-ஜெயங்கொண்டம் - அரியலூர்-பெரம்பலூர் வழியாக சேலத்துக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றியச் செயலர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×