என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது - கே.எஸ்.அழகிரி பேட்டி
    X

    பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது - கே.எஸ்.அழகிரி பேட்டி

    • பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    • அரியலூரில் கட்சி கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி

    அரியலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழுர், தா.பொட்ட கொல்லை, உடையார்பாளையம், விக்கிரமங்கலம், கீழப்பழுவூர், திருமானூர், ஆண்டிமடம், கூவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்,

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது, ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணத்தால் காங்கிரசின் செல்வாக்கு பெருமளவில் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை உள்ள கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகள் விளை பொருட்களுக்கு ஆதார விலை கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பா.ஜ.க. அரசு விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனியிடம் கொடுக்க முயற்சிக்கிறது. இதனால் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.மழைக்காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் சங்கர், நகரத் தலைவர் சிவக்குமார், உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×