சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில்
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்ட காசங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செம்புலிங்கம் (வயது 52). விவசாயி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் செம்புலிங்கத்தை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி செந்துறை ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை செல்ல விடாமல் செந்துறை போலீசார் வழிமறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் செந்துறை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com