என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை   நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
    X

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது
    • மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்க மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர் ஆசிரியர் சங்க மாநாட்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் ரத்னா பரிந்துரையின்படி குறைந்தப்பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் , மருத்துவ காப்பீடு திட்டம் , அகவிலைப்படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை வரும் நிதியாண்டிலேயே செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் வி.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சங்கர்பாபு சிறப்புரையாற்றினார்.அரியலூர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கண்ணுசாமி , ராஜேந்திரன், ஜெகநாதன், அன்பழகன், மதுரை மாவட்ட தலைவர் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக நிர்வாகி அருணாசலம் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அருள்மொழி நன்றி தெரிவித்தார். மாநாட்டில் அரியலூர் , பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் ஊர் நல அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×