வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம்
வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலுவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) ராஜசேகரன் (35) ஓட்டுநர். இவரது மனைவி ஜெயா (33). மகள் சுபாஷினி (11). சம்பவத்தன்று ராஜசேகரன் வேலைக்கு சென்றுவிட்டார். இரவு ஜெயா தனது மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த ஜெயா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துள்ளனர். இதில் திடீக்கிட்டு எழுந்த ஜெயா தனது அருகில் முகத்தை மூடியவாறு 4 பேர் டவுசருடன் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சத்தம் போட டவுசர் கொள்ளையர்கள் ஜெயாவின் வாயை பொத்தி பிடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு முன்பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

முன்னதாக அதே பகுதியில் தனியார் கூரியர் ஓட்டுநர் கமலகாந்தன் என்பவரின் மனைவி பணிமலர் (37) மகள் சிவாணி(4) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களது வீட்டிலும் திருட சென்ற நிலையில் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த டவுசர் கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், செக் புக் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை தண்ணீரில் முக்கி வெளியில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுசர் கொள்ளையர்கள் திருடுவதற்கு முன்பாக வீட்டில் இருந்த சொம்பில் மதுபானத்தை ஊற்றி குடித்துவிட்டு ஆற அமர திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com