என் மலர்
அரியலூர்
- தீபாவளி சமயத்தில் மட்டும் 20 கொலை, கொள்ளைகள் தமிழகத்தில் நடந்துள்ளது.
- 2026-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
அரியலூர்:
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்று அவர் அரியலூர் மாவட்டத்தில் யாத்திரையை தொடங்கினார். ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் மாரியம்மன் கோயிலின் அருகிலிருந்து யாத்திரையை தொடங்கி பஸ் நிலையம் அருகே முடிந்தது. அப்போது, அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியாக யாத்திரையில் பங்கேற்று வருகிறேன். தமிழகத்தில் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை. இதனை மாற்ற பா.ஜ.க. விரும்புகிறது.
ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சியடையும்போது தான், தமிழகம் வளர்ச்சி அடையும். மது இல்லா தமிழகம், கொலை, கொள்ளை இல்லா தமிழகம் உருவாக பா.ஜ.க. யாத்திரை மேற்கொண்டுள்ளது. தி.மு.க. 2½ வருட ஆட்சியை முடித்துள்ளார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இருந்த தமிழகத்தின் வளர்ச்சி தற்பொழுது குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக்குக்கு இலக்கு வைத்து விற்பனை செய்தது.
இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் மட்டும் 20 கொலை, கொள்ளைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் ஊழல் இல்லாத இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார். அனைத்து ஏழை, எளிய குழந்தைகளை மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என மத்திய அரசு வழங்கி வருகிறது. தகுதி வாய்ந்த அனைத்து குழந்தைகளும் மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், தி.மு.க. பிரமுகர்கள் நடத்தக்கூடிய மருத்துவக் கல்லூரியில் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் முன் நாடகத்தை நடத்தி வருகிறார்கள். இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்தும் வருகிறார்கள். 2026-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்திய 8,373 ஏக்கர் நிலத்தை 35 ஆண்டுகள் கழித்து தற்போது விவசாயிகளிடமே ஒப்படைப்பதாக தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவை அரியலூர் மாவட்டத்தில் பெருகி இருக்கும்.
தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்களின் 11 அமைச்சர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழல் மிகுந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. இவ்வாறு அனைத்து விதத்திலும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்கள் விவசாயிகள் சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களுக்கான அரசாக கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஊழல் குறை சொல்ல முடியாத அரசாங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். எனவே வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அரியலூரில் அண்ணாமலை பேசுகையில், கடந்த 1976-ம் ஆண்டு முதல் 2013 வரை இந்தியாவில் திருடப்பட்ட சிலைகளில் 13 சிலைகள் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் திரும்ப பெறப்பட்டன. மோடி பிரதமரான பிறகு 351 சிலைகள் திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளது. தி.மு.க. 5 ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என கொடுக்கும் என கொடுத்த அறிக்கை பொய்யானது. அப்படி வேலை வழங்க வேண்டும் எனில் ஆண்டுக்கு 4 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வை நடத்த வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பா.ஜ.க. ஆதரவு பெற்ற எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் அரியலூரில் அண்ணாமலை பா.ஜ.க. ஆதரவு எம்.பி.யை தேர்தெடுக்க வேண்டும் என்று பேசியிருப்பது மீண்டும் கூட்டணி அமைவதற்கான அச்சாரமாக இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.
- அரியலூரில் 91 மில்லி மீட்டர் மழை பதிவு ஆனது
- அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது
அரியலூர்,
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் இன்று காலை 8.30 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செந்துறை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் அரியலூரில் 5.5, திருமானூரில் 5.2, கருவாடியில் 11, சித்தமல்லி அணைக்கட்டு பகுதியில் 15.2, ஜெயங்கொண்டம் 19.6,ஆண்டிமடத்தில் 14.5 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 91 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- 56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு அரியலூரில் புத்தக கண்காட்சி
- ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
அரியலூர்,
56-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில், பொது நூலக இயக்கம், மாவட்ட நுலக ஆணைக் குழு, வாசகர் வட்டம் மற்றும் தமிழ்களம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புத்தகக் கண்காட் சியை அரியலூர் கோட்டாட் சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசி னார்.
அப்போது அவர் பேசியதாவது:-புத்தகங்களைத் தேடி நூலகத்துக்குச் சென்றவர் கள் இன்று மிகப் பெரிய தலைவர்களாகவும், அரசு உயர் அதிகாரிகளாகவும் உள்ளனர்.ஆனால் இன்றைய தலை முறையினர் வாசிப்பு பழக் கத்தை மறந்து, கைப்பேசி, காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் தங்களின் அறிவு மட்டுமல்லாமல் மனநிலையும் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம் உண்டு .எனவே மாணவர்களும் இளைஞர்களும் நல்ல நூல்களை வாசித்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் தாங்கள் அடைய விரும்பும் லட்சியங்களை எளிதில் அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் தமிழினி ராமகிருஷ்ணன், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, தமிழ்களம் இளவரசன், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைச் செயலர் சௌந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக முதல்நிலை நூலகர் க.ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.
- அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலை பேசி எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது
- பேரிடர் கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் வாட்ஸ்-அப் எண் 9384056231 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்த புகார்கள், தொலைக்காட்சி செய்திகளில் வரப்பெற்ற புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அலுவல்களுக்கு உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் பேரிடர் தொடர் பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் தொலை பேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04329-228709 என்ற தொலை பேசி எண்களிலும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04329- 222058 , உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் 04331-245352, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் 04329-222062, ஜெய ங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் -04331-250220, செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் 04329-242320 மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் 04331-299800 என்ற தொலை பேசி எண்களிலும் 9384056231 என்ற வாட்ஸ்- அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- அரியலூர் மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்துள்ளது
- மொத்தம் 258 மி.மீ. மழை பதிவாகி உள்ளது
அரியலூர்,
அரியலூரில் 21.2 மி.மீ., திருமானூரில் 22.6 மி.மீ., குருவாடியில் 39 மி.மீ., ஜெயங்கொண்டத்தில் 45 மி.மீ., சித்தமலை அணை பகுதியில் 56 மி.மீ., செந்துறையில் 35.2 மி.மீ., ஆண்டிமடத்தில் 39.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 258 மி.மீ. மழை கொட்டியுள்ளது. இதன் சராசரி 36.91 ஆகும்.
- சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் தற்காலிக பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
- சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது
அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மழையின் காரணமாக இந்த பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி பேருந்துக்குள் செல்கின்றனர். எனவே தற்காலிக பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரியலூரில் திறப்பு விழா காணும் முன்பே மதுபான பாராக வாரசந்தை மாறிய அவலம்
- சேறும், சகதியுமாக காணப்படும் வாரச்சந்தையை சீர்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது
அரியலூர்,
அரியலூர் நகராட்சியில் ரூ.1.18 கோடியில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. திறப்பு விழா காண்பதற்கு முன்பே மதுபான பிரியர்களின் டாஸ்மாக் பாராக செயல்பட தொடங்கிவிட்டது. மாவட்ட, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அரியலூரில் சுற்றி திரியும் வெறிநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்
- நாய்களை பிடித்து செல்ல கோரிக்கை எழுந்துள்ளது
அரியலூர்,
அரியலூர் நகரில் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது. இந்த நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதுடன், உணவு பொருட்களை கையில் எடுத்து செல்லும் பொதுமக்களை விரட்டவும் செய்கின்றனர். குழந்தைகளுடன் செல்பவர்கள், பெரும் அச்சத்துடன் நாய்களை கடந்து செல்கின்றனர். எனவே நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது
- அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்தது
திருச்சி,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இருப்பினும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.
தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய் கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் ெ தற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த சுற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்தய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகிறது.
இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- அரியலூர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது
- அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் முதல்கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 15 -ந் தேதி தொடங்கப்பட்டு 1,51,038 எண்ணிக்கையிலான மகளிர் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகின்றனர்.
இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 51,893 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 53,726 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 22,484 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 22,935 மகளிரும் பயன்பெற்று வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வாலாஜாநகரம் ஊராட்சி, அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 6,217 மகளிருக்கு உரிமைத்தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இதில் அரியலூர் வட்டத்தை சேர்ந்த 1,830 மகளிரும், ஜெயங்கொண்டம் வட்டத்தைச் சேர்ந்த 2,279 மகளிரும், செந்துறை வட்டத்தைச் சேர்ந்த 1,059 மகளிரும், ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த 1,049 மகளிரும் பயன்பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
- உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், வாலாஜ நகர ஊராட்சி அலுவலக வளாகத்தில், உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவி அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் நாகமுத்து, மாவட்ட தலைவர் பாண்டியன், துணைச் செயலர் செவ்வேள், உலக திருக்குறள் கூட்டமைப்பு பெரம்பலூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தரராஜன், உலக திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு, கார வகைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. முடிவில் நிர்வாகி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
- அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் கலெக்டர் தலைமை யில் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
- முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள் ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் மேளா சிறப்பு முகாம் கலெக்டர் தலைமை யில், அரியலூர் மாவட்ட நிர்வாகமும், அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் இணைந்து வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கலெக்டர் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, பான் கார்டு, சாதி சான்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடன் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு அழைப்பு கடிதம், கல்லூரியில் சேர்ந்த தற்கான கடிதம், கல்லூரி யின் சான்று, முதல் பட்ட தாரி சான்று, உறுதி மொழி சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப் படங்கள் ஆகிய ஆவணங்க ளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள் ளார்.






