என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு
- அரியலூரில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
- உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், வாலாஜ நகர ஊராட்சி அலுவலக வளாகத்தில், உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவி அபிநயா இளையராஜா தலைமை வகித்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட செயலர் நாகமுத்து, மாவட்ட தலைவர் பாண்டியன், துணைச் செயலர் செவ்வேள், உலக திருக்குறள் கூட்டமைப்பு பெரம்பலூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தரராஜன், உலக திருக்குறள் கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு, கார வகைகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. முடிவில் நிர்வாகி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.






