என் மலர்
அரியலூர்
- அரியலூரில் பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
- அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அழைப்பு
அரியலூர்,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டதாரி ஆசி ரியர்களுக்கான ப ணி க்காலியிடங்களுக்கு கட்ட ணமில்லா பயிற்சி வகுப்பு கள் நவம்பர் 17-ந் தேதி முதல் நடைபெற்று வரு கிறது.
மத்திய மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வாலிபர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் கட்டண மில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற வாலிபர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் உருவாக்கப்ப ட்டுள்ளது.
இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் லில் , பல்வேறு போட்டித் தேர்வுக ளுக்கான மென்பாடக்கு றிப்புகள், மாதிரிவி னாத்தா ள்கள், காணொ ளிகள் உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவி க்கப்பட்டுள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிக்காலியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்று வருகிறது.
இப்பணிக் காலியி டங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆதார் அ ட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டல் மையத்தி னை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாலிபர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அரிய லூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித் தேர்வி னை எதிர் கொள்ளும் வாலிபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்து ள்ளார்.
- அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை.
- இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்த ப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை காவல் துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போ க்கு வரத்துபா திக்கப்பட்டது.
- அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்த ஐந்து இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
- புகையிலைப் பொரு ள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.1,100 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் சுகாதாரமற்ற வகையில் இயங்கி வந்த ஐந்து இறைச்சி கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
திருமானூர் வட்டார சுகாதார மேற்பா ர்வை யாளர் வகீல் தலைமை யிலான சுகாதார ஆய்வா ளர்கள் குமார் மற்றும் சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏலாக்கு றிச்சி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இறைச்சி கடைகள் நடத்திய வருக்கும், டெங்கு கொசுக்கள் உருவா கும் வகையில் இருப்பி டங்களை வைத்திருந்த 2 நபர்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும், பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொரு ள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.1,100 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.
- வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.
- முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
அரியலூர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் ,உடையார்பா ளையம் வரு வாய் கோட்டங்களில் வரு வாய் மற்றும் பேரிடர் மே லாண்மைத் துறை சார்பில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.
அரியலூர் கோட்டாட்சி யர் அலுவல கத்தில் நடை பெற்ற முகாமில், பொது மக்களிடமிருந்து பல்வேறு பட்டாக்கள் தொடர்பான 802 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதே போல் உடையார்பா ளையம் வருவாய் கோட்ட த்துக்கான முகாம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமில், பொது மக்களிடமிருந்து 1706 மனுக்கள் பெறப்பட்டு இதில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த இருமுகாம்களை பார்வையிட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, தீர்வுக் காணப்பட்ட நபர்க ளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார்.
இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர்கள் அரி யலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிம ளம் மற்றும் தாசில்தார்கள், வருவாய்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் கூட்டுறவு வாரவிழாவில் ரூ.33.42 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- 4482 பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் 4482 பயனாளிகளுக்கு 33.42கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.விழாவில் அமைச்சர் பேசும் போது.
மகளிர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேலான மகளிர் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தின் காரணமாக கூட்டுறவுத் துறைகளின் மத்திய வங்கிகளில் சுமார் 20,996 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அந்த வங்கி கணக்குகளின் மூலம் உரிமைத் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.இந்த செயல்பாடுகளால் மகளிர் எளிதாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெறமுடியும். பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சருக்கு உறுதுணையாக அனைவரும் இருக்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பொது மேலாளர் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் முத்துமாரி, மண்டல மேலாளர் டாப்செட் திருச்சி புண்ணியமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், பொதுமேலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முருகன், மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் ராஜா, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அறப்பளி, வருவாய் கோட்டாட்சியர் (அரியலூர்) ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா, மற்றும் கூட்டுறவு சங்களின் பணியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் 21 ஆயிரம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் இளம்செடி, பூ மற்றும் கதிர் பிடிக்கும் பருவமென பல்வேறு நிலைகளில் உள்ளது. 25 முதல் 35 நாட்கள் உள்ள இளம்செடியில் படைப்புழு வின் தாக்குதல் தென்படுகி றது. படைப்புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிய ஏக்கருக்கு 5 எண் இனக்க வர்ச்சி பொறி வைத்து, படைப்புழுக்களின் தாக்குத லுக்கு ஏற்ப பூச்சிக்கொல்லி தெளிக்கலாம்.
முதல் பூச்சிக்கொல்லி தெளிப்பாக விதைத்த 15 முதல் 25 நாளில் அசாடி ரக்டின் 1 சதவீதம், இசி 20 மில்லி அல்லது தயோடிகார்ப் 20 கிராம்அல்லது இமா மெக்டின் பென்சோயேட் 4 கிராம், 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இரண்டாம் கட்ட தெளிப்பாக, விதைத்த 31 முதல் 45 -வது நாளில் ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் எஸ்இ 5 மில்லி அல்லது மெட்டாரைசியம் - 80 கிராம் அல்லது குளோரன் டிரானிலிபுரோல் - 4 மில்லி அல்லது புளுபென்டமைட் - 4 மில்லி அல்லது நோவாலூரான் 15 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துப் பகுதியில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும்.
அரை ஏக்கருக்கும் குறைவாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கண்ட பூச்சிக்கொல்லி யினை 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கலவையை நிரப்பி மூடியின் மேல் பகுதியில் துளையிட்டு குருத்தில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும். மக்காச்சோளம் பயிர் கதிர் பிடிக்கும் பருவத்தில் இருப்பின் டிரோன் மூலமாக மருந்தினை விரைவாக தெளிக்கலாம்
மேற்கண்ட தொழில்நு ட்பங்களை பயன்படுத்தி படைப்புழுவின் தாக்குதலை வெகுவாக குறைத்து, மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அரியலூர்,
அரியலூர் அண்ணாநகர் பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் ஆனந்தவேல், டி.எஸ்.பி. சங்கர்கணேஷ், கூட்டுறவு சரக இணைபதிவாளர் தீபாசங்கரி, துணை பதிவாளர் அரப்பலி, மேலாண்மை இயக்குனர் பழனியப்பன், செயலாளர் சுப்பிரமணியன், இந்தியன் ஆயில்கார்ப்பரேசன் அதிகாரிகள் சுர்ஜன், கார்த்திக், ராஜீவ்சரன், ஒன்றியகவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் ஓஎன்ஜசி நிறுவனத்துக்கு மீத்தேன் எடுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழர் நீதி மற்றும் ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் ஓஎன்ஜசி நிறுவனத்துக்கு மீத்தேன் எடுத்திட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
பொன்னாற்றையும், பொன்னேரியையும் தூர்வாரி ஆழப்படுத்தி இணைத்திட வேண்டும். பொன்னேரியை ஆழப்படுத்தும் மண்ணை சிமென்ட் ஆலை சுரங்க குழிகளில் நிரப்பி புனரமைப்பு செய்திட வேண்டும்.
முந்திரிக்கு ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதிக் கோரி தமிழர் நீதி கட்சியினர் மனு அளித்தனர்.
இப்போராட்டத்துக்கு அரியலூர் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழர் நீதி மற்றும் ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 48 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தில் நிறுவன தலைவர் சுபா.இளவரசன், தமிழ் மண்ணுரிமை மற்றும் மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்களின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், தமிழர் நீதி கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் தங்க.தமிழன், ஆசைதம்பி, மாவட்டச் செயலர் பாக்கியராஜ், மகளிரணி மாநிலத் தலைவர் கவியரசி
இளவரசன், தமிழரசு பொதுச் செயலர் கா.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கல்வி கடன் மேளா வில் 17 மாணவ, மாணவி களுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கி பேசினார்
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவி பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடை பெற்ற கல்வி கடன் மேளா வில் 17 மாணவ, மாணவி களுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன்களை எந்தவித சிரமமின்றி பெறும் வகை யில், அவர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து கல்வி கடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன்கள் பெறுவதற் கான வழிமுறைகள் தெரியப டுத்தும் வகையிலும், எளி மையாக்கும் விதத்திலும் கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகளுடனான ஆலோ சனைக் கூட்டங்கள் மற்றும் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வி கடன்கள் பெறுவதில் சிரமங்கள் ஏதும் இருப்பின் அது குறித்து விளக்கங்கள் பெறு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது.
வித்யலஷ்மி இணையத ளத்தின் மூலம் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். இதேபோன்று மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கும் தெரியப்ப டுத்தி அவர்களையும் விண்ணப்பிக்க செய்ய வேண்டும்.
கல்வி கடன் பெறுவது தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள் ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் தாங்களகவோ அல்லது கல்லூரி முதல்வர்கள் அல்லது நிர்வாகிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவி பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜே.லயனல் பெனடிக்ட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இவர் அவரது முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
- இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளயம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 39). இவர் பா.ஜனதா கட்சியின் திருமானூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ஆவார். இவர் அவரது முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி,
கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி. வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை. உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி,
குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையார். ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- இளைஞர்களை ஏமாற்றி கையெழுத்து இயக்கம் நடத்துகிறது தி.மு.க. என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார்
- ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற யாத்திரையின் போது பொதுமக்கள் மத்தியில் பேசினார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 104-வது பாத யாத்திரையை தொடங்கினார். புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, நான்கு ரோடு சந்திப்பு வரை அவர் யாத்திரை மேற்கொண்டார்.
அவர் சென்ற வழி அனைத்திலும் ஏராளமான பொதுமக்கள் குறை கேட்டு அவர்களுடைய மனுக்களை பெற்றுக்கொண்டார். யாத்திரையின் முடிவில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி வந்த பிறகு கொலை கொள்ளை அதிகரித்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது. அவர்கள் பதவியேற்கும் போது தமிழ்நாடு எப்படி இருந்ததோ அதேபோல்தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு எந்த வகையிலும் முன்னேறவில்லை இளைஞர்களுக்கு சரியான முறையில் கல்வி இல்லை விவசாயிகளுக்கு. விவசாயத்தில் எந்த பயனும் இல்லை.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், தனது மகன் குடும்பமும், மருமகன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளார்.
நாம் எல்லா ஏழை குழந்தைகளுக்கும் டொனேஷன் இல்லாமல் பணத்தை கொடுக்காமல் நேரடியாக மருத்துவ கல்லூரிலே சேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, தி.மு.க .இளைஞர்களை ஏமாற்றும் விதமாக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வந்து கொண்டிருக்கிறது.
இளைஞர்களை முன்வைத்து நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக எப்படிப்பட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஏராளமான கிராமங்களில் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தி.மு.க. 23 வருடங்களாக ஏமாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலே தீபாவளி அன்று மட்டுமே சாராயம் டாஸ்மாக்-ல் விற்கப்பட்ட சாராய மூலமாக 11 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளனர்.
மதுவிலிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்துதான் ஒரு ஆட்சி நடக்க வேண்டுமா? என்கின்ற கேள்வியை மக்கள் எல்லாரும் முன் வைக்கின்றனர். அதேபோல்இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும், இது போன்ற ஊழல் அமைச்சர்களை பார்த்தது கிடையாது. தமிழ்நாட்டில் அவர்கள் வாக்குறுதியான 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்கள்.மேலும் இவர்கள் வாங்கிய கடனை ஏழை விவசாயிகள் நீங்கள் தான் கட்ட வேண்டும்.
ஜெயங்கொண்டம் ரயில் பாதை திட்டம் பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தலைவர் எஸ்.கே.ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகரத் தலைவர் ராமர் உள்ளிட்ட மாநில, மாவட்ட மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






