என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர்.
    • அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரி அருகே, சைக்கிளில் சென்ற வாலிபரிடம், ரூ.20 ஆயிரம் மதிப்பி லான செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை, கோட்டுச்சேரி போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் தலத்தெரு கே.எம்.ஜி நகரைச்சேர்ந்தவர் கபிலர். இவர் காரைக்கால் நலவழித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (வயது(22). இவர், சுகாதார ஆய்வாளருக்கு படித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார். அபிஷேக், வழக்கமாக சைக்களில் உடற்பயிற்சி செய்வது வழக்கமாம். சம்பவத்தன்று காலை, சைக்களில் உடற்பயிற்சி செய்த வாறு, காரைக்கால் கீழகாசாகுடி சாலை வழியாக, தனியார் மருத்துவக்கல்லுரி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர். தொடர்ந்து, சைக்கிளை ஒழுங்காக ஓட்ட மாட்டாயா என கேட்டு அபிஷேக்கை அடிப்பது போல் கையை ஓங்கி, அபிஷேக் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திடீரென 3 நபர்களில் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் வழக்கம்போல் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்த போது, படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மேடு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம்(40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய ஏழு மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு 21-ந்தேதி மாலைக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் மாலை 6 மணிவரை மீனவர்கள் கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் மாயமான ஏழு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் காரைக்கால் மேடு சக மீனவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மாயமான மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (23 -8-22) காலை கோடியக்கரை அருகே மாயமான ஏழு மீனவர்களின் பைபர் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை, கடலில் தேடி சென்ற சக மீனவர்கள் பார்த்து, உடனடியாக ஏழு மீனவர்களையும் மீட்டு தங்கள் விசைப்படகுகளில் ஏற்றினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு, முதல் கட்டமாக தண்ணீர் மற்றும் உணவு வழங்கினர். இவர்களுக்கு நாகை மீனவர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் காரைக்காலுக்கு பத்திரமாக நேற்று இரவு திரும்பினர்.

    7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    காரைக்கால்:

    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற, காரைக்கால் மேடு மீனவர்கள் 7 பேர் மாயமானது குறித்து, இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக தே டிவருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18-ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம் (40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய 7 மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மாயமான 7 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார்.
    • தாக்குதலில் காயம் அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில், மது போதை யில், மனைவி மற்றும் குடும்பத்தாரை தாக்கிய கணவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூரை சேர்ந்தவர் தீபா ரோஸ்லின் (வயது25). இவருக்கும், கீழ்மாத்தூர் சங்கர் (28) என்பவருக்கும், கடந்த சில ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்ததும், சங்கர் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன், சங்கர் மாமியார் வீட்டு க்கு வந்து தங்கி விட்டார். ஆனால், வேலை எதற்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போடு வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 17-ந் தேதி வீட்டு சமையலுக்காக ஏதாவது வாங்கி வருமாறு சங்கரிடம் தீபா ரோஸ்லின் சொல்லியுள்ளார். அதன்படி வெளியே சென்ற சங்கர் மாலை 6 மணிக்குதான் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏன் தாமதம் என மனைவி தீபா ரோஸ்லின் கேட்டபோது, நீ என்ன என்னை கேள்வி கேட்பது என சண்டை போட்டதோடு, மனைவியை தாக்கியுள்ளார். தடுக்க வந்த மனைவியின் சகோதரி தீபிகாவையும் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தீபா ரோஸ்லின் தந்தை, பாட்டி ஆகியோரையும் சங்கர்தாக்கினார். தாக்கு தலில் காயம்அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் கொடு த்த புகாரின் பேரில், திரு.பட்டினம்போலீசார் வழக்கு பதிவுசெய்து சங்கரை தேடிவருகின்றனர்.

    • காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும்.
    • லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும்.

    புதுவை சட்ட சபை இன்று கூடியது. நிதி பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:-

    புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை, காலை சிற்றுண்டி, மதிய உணவு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் தொடரும்.

    21 வயது முதல் 57 வயது வரை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

    ஏனாம் பிராந்தியத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் அரசு கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் புதுவை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். துணை மின் நிலையங்கள் புனரமைக்கப்படும். நலிவடைந்த கூட்டுறவு சங்கங்கள் மேம்படுத்தப்படும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் மீண்டும் இயக்கப்படும்.

    காரைக்கால் பிராந்தியத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்யப்படும். கலைஞர்களுக்கு கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் வழங்கப்படும்.

    புதுவையில் மேலும் 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும். காரைக்காலில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல்.
    • கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.

    புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022- 23க்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடியதும் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    • காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது

    காரைக்கால்: 

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டு சுப்பிரமணியன், சமாதான கமிட்டி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட, ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது.

    • காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    • உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியில், இளம்பெண்ணுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த வாலிபரை, கோட்டுச்சேரி போலீசார் போக்கோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர். காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இளம்பெண் சாலையில் நடக்கும் போதெல்லாம், அந்த பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கூலி வேலை செய்துவரும் பால் எடிசன் (வயது33). என்ற வாலிபர் அக்கறையோடு விசாரிப்பது வழக்கமாம். நேற்று முன்தினம், வழக்கம் போல், அந்த இளம்பெண் சாலையில் நடந்து செல்லும் போது, பால் எடிசன் என்பவர், பேசுவதுபோல் சென்று, இளம்பெண்ணை, தனது வீட்டின் கொல்லைப்புற கதவுவழியாக இழுத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. தொடர்ந்து, இளம்பெண் அவரிடமிருந்து திமிறி ஓடியுள்ளார். அப்போது, இது குறித்து, யாரிடமாவது சொன்னால், உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். நடந்த விபரம் குறித்து, இளம் பெண் தனது தாயிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து, இது குறித்து, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த–னர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பால் எடிசனை கைது செய்தனர்.

    • காரைக்கால் நிரவியில் வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி ரோஜா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழகத்தில் உள்ள ஒரு சிமெண்ட் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 14ந் தேதி, தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கபட்டு, படுக்கையறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்க நகை திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, அவர் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர்.
    • கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    புதுச்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர் வினோத்சங்கர் (வயது46). சித்த மருத்துவ தொழில் செய்து வரும் இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலத்தை சேர்ந்த வினோதன் என்பவர் வினோத் சங்கருக்கு பழக்கமானார். அப்போது வினோதன் தன்னிடம் சக்திவாய்ந்த பச்சைநிற மூலிகை கல் இருப்பதாக வினோத்சங்கரிடம் கூறினார். இதனை நம்பி அந்த மூலிகை கல்லை ஏராளமாக பணம் கொடுத்து வினோத் சங்கர் வாங்கினார்.

    ஆனால், போலி மூலிகை கல் என தெரியவந்ததும் அந்த கல்லை வினோத்சங்கர் திருப்பி கொடுத்து விட்டார்.

    இதனையடுத்து வினோதன் மீண்டும் தனக்கு தெரிந்த நபரிடம் சக்தி வாய்ந்த கலசம் இருப்பதாக வினோத்சங்கரிடம் தெரிவித்தார். இதையடுத்து அதனை வாங்க வினோத்சங்கர் தனது அறக்கட்டளையில் பணிபுரியும் 4 பேருடன் புதுவைக்கு காரில் வந்தார். மரப்பாலம் சந்திப்பில் வந்தபோது வினோதன் உள்பட 9 பேர் காரை நிறுத்தினர்.

    பின்னர் கத்தியை காட்டி வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் கடத்தி சென்று தாக்கி அவர்களிடமிருந்த ரூ.24 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    மேலும் வினோத்சங்கரிடமிருந்து ஏ.டி.எம். கார்டை பறித்து அதன்மூலம் ரூ.1 லட்சத்து 5ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர். அதுமட்டுமில்லாது வினோத்சங்கரின் அறக்கட்டளை நிர்வாகி முத்துக்குமாருக்கு போன் செய்து ரூ.4 லட்சத்தை கொடுத்தால் வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர்.

    இதையடுத்து முத்துகுமார் திருக்கோவிலூரில் வைத்து ரூ.4 லட்சத்தை வினோதன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்து வினோத்சங்கரையும், அவருடன் வந்தவர்களையும் மீட்டு சென்றார்.

    இதுகுறித்து வினோத்சங்கர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோதன், வேல்ராம்பட்டை சேர்ந்த கல்விசெல்வம், முகமது பரூக், மகேஷ், பிரபு, அதிகைவாணன் ஆகிய 6 பேர் உடனடியாக கைது செய்தனர்.

    அதன்பிறகு அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த அறிவு என்ற அறிவழகன் (28), வேல்ராம்பட்டு விமல் (23) மற்றும் கொம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு என்ற ஜெயசந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய புதுவை ரோடியர்பேட் கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி ரோல் அந்தோணி (35) என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரோல் அந்தோணி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காரைக்கால் கீழவாஞ்சூர் கிராமத்தில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கி னார். கிராம முக்கியஸ்தர்கள் செல்வராஜ், சசிகுமார், முத்துகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் அந்த கிராமத்தில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பள்ளிக் குளத்தின் கரையில், அழிந்துவரும் பனை மரத்தினை காத்திடும் வகையில், பனை விதைகள் நட்டார். அவரைத்தொடர்ந்து, நூற்றுக்கு மேற்பட்ட பனை விதை களை, கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் நட்டனர். கிராம இளைஞர்கள் சதீஷ்குமார், திருமுருகன், பூவராகவன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் ரோஹன்குமார் நன்றி கூறினார்.

    • பெற்றோர்களுக்குரூபாய் 25 ஆயிரம் அபராதமும், 1நாள் சிறை தண்டனையும் அளித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தனது வாகனத்தை வழங்க வேண்டாம்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் மறி கிருஷ்டியன் பால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 18 வயதிற்கு குறைவான சிறார்களுக்கு, தங்களது மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதியளித்த குற்றத்திற்காக 3 வ ழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனத்தின் பெற்றோர்களுக்குரூபாய் 25 ஆயிரம் அபராதமும், 1நாள் சிறை தண்டனையும் அளித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை கவனத்தில் கொள்வதுடன், சிறார் ஏற்படுத்தும் வாகன விபத்திற்கு எவ்வித விபத்து காப்பீடும் கிடைக்காமல் அதற்கும் சிறாரின் பெற்றோர்(அ) உரிமையாளரே பொறுப்பாவர் என்பதையும் தெரியபடுத்தி, 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தனது வாகனத்தை வழங்க வேண்டாம் என்று போக்குவரத்து காவல் துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×