search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    2-வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்: ஜிப்மரில் பணிகள் பாதிப்பு
    X

    ஜிப்மர் மருத்துவமனை

    2-வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்: ஜிப்மரில் பணிகள் பாதிப்பு

    • பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 580 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மாதம் ரூ.11 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர். பணி நிரந்தரம், சம்பள உயர்வு வழங்கக்கோரி தொழிலாளர் துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2017-ல் 2 மாதத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    ஆனால் ஜிப்மரில் இப்போதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதை கண்டித்து ஜிப்மர் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், கண்காணிப்பாளர் கிருஷ்ணகோபால்கோயல் ஆகியோர், சங்க தலைவர் சிவசங்கரன், பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி உட்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகளை இடமாற்றம் செய்தல், மருத்துவ பதிவேடு, புறநோயாளி பதிவு, உள் நோயாளிகளுக்கு உணவு வழங்குதல், சலவை, எக்ஸ்ரே, ரத்த வங்கி உட்பட 60-க்கும் மேற்பட்ட துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துறைகளில் தினக்கூலி ஊழியர்களுக்கு பதிலாக துப்புரவு தொழிலாளர்களை நியமித்து ஜிப்மர் நிர்வாகம் பணிகளை கவனித்து வருகிறது.

    Next Story
    ×