என் மலர்
புதுச்சேரி
- முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முதல்வர் தகவல்
- கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
90 வயது முதல் 100 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
- திருநள்ளாறு ரிங்க் ரோட்டில், சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர்.
- சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாரையும், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.
புதுச்சேரி :
காரைக்கால் அருகே திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநள்ளாறு ரிங்க் ரோட்டில், சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாணையில் அவர்கள் கையில் வயலுக்கு நீர் பாய்ச்ச கூடிய, நீர் மூழ்கி மின் மோட்டார் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகே பாய்ச்ச வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டரை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட திருநள்ளாறு சுப்ராயபுரம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நேதாஜி(வயது29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரன்(28) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாரையும், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.
- 75 கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் நடைபெறுகிறது.
- பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் இது நிறைவடைகிறது.
புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தலைமைச் செயலகம் அருகில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், 7500 கிலோ மீட்டர் தூர கடல் பரப்பைக் கொண்ட இந்திய கடலோரத்தை தூய்மையாக வைத்திருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான கடற்கரையை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விடுதலை அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாட்கள் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் உள்ள 75 கடற்கரைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணிகள் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி பிரோமினேட் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கடலோரப் பகுதி தூய்மை விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் அவர் தொடங்கி வைத்தார்.

கடலோரத் தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். முன்னதாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள, ஈடன் கடற்கரைக்கு சென்று அங்கு கட்டமைப்பு வசதிகளை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பார்வையிட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- பிளஸ்-1 மாணவர் சேர்க்கையில் 3-ம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும்.
காரைக்கால்:
காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-பத்தாம் வகுப்பு ஜூலை, ஆகஸ்ட் 2022 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை, ஆக. 29-ந் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குனர்(மேல்நிலைக் கல்வி)அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களும், இதுவரை விண்ணப்பித்து எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காத மாணவர்களும் மற்றும் புதுச்சேரி மாநில குடியுரிமை இல்லாத மாணவர்களும், இந்த 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். கலந்தாய்வு செப்.1-ந் தேதி காலை 10 மணிக்கு தலத்தெரு பகுதியில் உள்ள மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஏழ்மை நிலையில் சீட்டு கட்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- திருபுவனை போலீசில் புகார் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் பேசியதாவது:-
என் தொகுதியில் ரூ.10 லட்சம் வரை 7 பிரிவுகளில் ஏலச்சீட்டு நடத்தியவர் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். சுமார் ரூ.1.50 கோடி பணத்தை கொண்டுசென்றுவிட்டார்.
அவர் பெங்களூருவில் வசிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் தனது பெயரில் இல்லாமல் மகள்கள் பெயரில் சொத்துக்களையும் வாங்கியுள்ளார்.
இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.
பலரும் திருபுவனை போலீசில் புகார் செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாள்தோறும் பாதிக்கப்பட்ட மக்கள், போலீசில் கூறி நடவடிக்கை எடுக்கும் படி தெரிவிக்கின்றனர். ஏழ்மை நிலையில் சீட்டு கட்டியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காரைக்கால்:
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், புதுச்சேரி முதலமைச்சருக்கு நேற்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினார்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் சங்க தலைவர் பழனிவேல் தலைமையில் ஏராளமானவர்கள் காரைக்கால் தலைமை தபால் நிலையத்திலிருந்து, புதுச்சேரி முதலமைச்சருக்கு போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பினர். இதில், காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
காரைக்கால்:
உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்க ளுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடி யாக ஊதியம் வழங்க வலியு றுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார ர்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள், கடந்த 22-ந்தேதி நகராட்சி வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 4 நாட்களாக போராட்டம் நடைபெற்றும், அரசு சார்பில் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை.
இந்நிலையில், நேற்று 4-ம் நாள் போராட்டமாக காத்திருப்பு போராட்டத்தை நடத்திவந்த ஊழியர்கள், திடீரென, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தை முற்றுகையிட சென்ற னர். விபரம் அறிந்த, காரைக்கால் நகர போலீ சார், கலெக்டர் அலு வலக வாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து ஊழியர்களை, கலெக்டர் அலுவல கத்திற்குள் நுழையாவி டாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கலெக்டர் அலுவலக வாயிலில், ஊழி யர்களுக்கும், போலீசாரு க்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்ட த்திற்கு, காரைகால் மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும், என்ற முதல மைச்சர் ரங்கசாமி வாக்குறு தியை உடனே நிறை வேற்ற வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை களை அரசு ஊழியர்க ளுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்.
பொதுவான பணிநிலை அரசாணையை அம ல்படுத்தி, ஒருமுறை நிகழ்வாக அடாக் நிரந்த ரம் செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. போலீ சாரின் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் முற்றுகையை தொடர்ந்ததால், முற்று கையில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
- புதுவை அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் உள்ளது.
- வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை ஆன்மீக நகரமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும் புதுவை அருகே ஆரோவில்லில் மாத்ரி மந்திர் உள்ளது. இதனை காண வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மேலும் கடற்கரையை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
நவநாகரீக உடையணிந்து நகரை சுற்றிவரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஓட்டல்கள், மதுக்கடைகள், தங்கும் விடுதிகள், நிரம்பி வழிகின்றன. இதனால் புதுவை அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது.
கடற்கரை மட்டுமின்றி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பாண்டி மெரினா கடற்கரையையும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
முன்பு இந்த கடற்கரை புதர்கள் மண்டி இருந்தது. தற்போது அவை சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா உள்ளது. மேலும் ஏராளமான குடில்களும் தனியார் பங்களிப்புடன் பல்வேறு கடைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நகரப்பகுதிகளில் இருந்து இங்கு செல்ல சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சின்ன வீராம்பட்டினத்தில் நீல கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் உள்ளது.
இங்கும் சுற்றுலா பயணிகள் சென்று படகில் பயணம் செய்து கடற்கரையில் உள்ள பேரடைஸ் பீச்சை ரசித்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நகரின் மையப்பகுதிகளில் நவநாகரீக உடையுடன் வலம் வருகிறார்கள்.
இதனால் வார இறுதி நாட்களில் புதுவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திராகாந்தி சிலை, ராஜூவ் காந்தி சிலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, கொக்கு பார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை இருப்பதால் சட்டம்-ஒழுங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இன்று இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத்தொடங்கும்.
- என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே உரசல் இருந்து வருகிறது.
- பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜனதா புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
பா.ஜனதாவுக்கு 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் பாஜகவின் அசோசியேட் எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பா.ஜனதா நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும், மத்திய மந்திரி, மேலிட தலைவர்கள் வருகையின்போதும் இவர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கும் வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜனதா தலைமை முதல்-அமைச்சர் ரங்கசாமியை வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமைந்து 15 மாதமாகியும் வாரிய பதவி நிரப்பப்படவில்லை. இதனால் ஏற்கனவே என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே உரசல் இருந்து வருகிறது.
பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அதிருப்தியை பா.ஜனதா புதுவை தலைவர்களிடம் வெளிப்படுத்தி வந்தனர். சமீபத்தில் புதுவைக்கு வந்த பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிகளும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இதையடுத்து மேலிட பார்வையாளர் சுரானா, முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தும் இதுகுறித்து பேசினார். இந்த நிலையில் புதுவை சட்டசபையிலும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் வெடித்தது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ.க்கள் பரிந்துரை இல்லாமல் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு தருகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்களை புறக்கணிக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து பா.ஜனதா ஆதரவு தரும் ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.சீனிவாச அசோக்கும், என் தொகுதியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. எம்.எல்.ஏ.வான எனக்கு தெரியாமல் அறங்காவலர் குழு நியமிக்கப்படுகின்றனர். பரிந்துரை இல்லாமல் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது என புகார் செய்தார்.
இதே குற்றச்சாட்டை பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் சிவசங்கர் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் தெரிவித்தார். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தங்கள் தொகுதியிலும் இதே நிலை நீடிப்பதாக கூறினார். அவர் பேசியதாவது:-
எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனையை கேட்டுத்தான் கோவில் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறை எதிர்கட்சி தொகுதிகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால் ஆளும்கட்சி தொகுதிகளில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் கமிட்டி அமைக்கின்றனர். இதனால் ஆளும்கட்சியாக இருந்தாலும் எம்.எல்.ஏ.க்களான எங்கள் உரிமை பறிபோகிறது.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் என்பதற்காக எங்களை பழிவாங்குகிறீர்களா? நாங்களும் கையெழுத்திட்டுத்தான் முதல்-அமைச்சரை தேர்வு செய்துள்ளோம். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு கடிதம் மூலம் ஆதரவு அளித்துள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ. தொகுதிகளை முதல்-அமைச்சர் பழி வாங்குகிறாரா? இந்த ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்கட்சியாககூட நாங்கள் அமர்வோம் என்று கூறினார்.
- காரைக்காலில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- நேரிடையாக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஆவண செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலில் மீன்வளத் துறையில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் செயல் பட்டால், சட்டரீதி யான நடவ டிக்கை பாயும். என, மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சவுந்தரபாண்டி யன், இது குறித்து வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டத் தில்உள்ளஇறால் வளர்ப்புபண்ணை உரி மையாளர்கள் தங்கள் இறால் பண்ணைகளை பதிவு செய்யவும், பதிவை புதுப்பித்து கொள்ளவும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் எளி மைபடுத்தியுள்ளது. ௨ ஹெக்டேருக்கு மேல் அளவுள்ள இறால் பண்ணை களை, மாவட்ட அளவிலான குழ பரிந்துரை செய்து மாநில குழுவிற்க்கு அனுப்பி, பிறகு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு பதிவு செய்ய அனுப்புவது என்ற நடைமுறையை எளிமை யாக்கி உள்ளது. தற்போது அந்தந்த மாவட்டங்களிலே விண்ணப்பித்து அதற்கென உள்ள குழு மூலம் பரிந்துரை செய்து நேரிடையாக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஆவண செய்யப் பட்டுள்ளது.
மேலும், 2 மாதத்திற்குள் பதிவு தேதி முடிய உள்ள பதிவுகளை புதுப்பித்து கொள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள் கட லோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திற்கு, நேரிடையாகவே உரிய ஆவணங்களுடன் அனுப்பி பதிவை புதுப்பித்து கொ ள்ளலாம். மேலும், காரைக்கால் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத இறால் பண்ணைகள் செயல்பட அனுமதியில்லை. அவ்வாறு பதிவு செய்யப்படாத இறால் வளர்ப்பு பண்ணை கள் இறால் வளர்ப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டால் தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிகை பாயும் என்பதை காரைக்கால் மீன் வளத்துறை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காரைக்கால்:
தமிழகப்பகுதியை சேர்ந்த ஒருவர், 14 வயது சிறுமி உள்ளிட்ட தனது குடும்பத்துடன் காரைக்கால் நகர் பகுதி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த 14 வயது சிறுமி, உறவினர் வீட்டின் எதிரே, தனியாக, செல்போனை வைத்துகொண்டு விளையாட்டி கொண்டி ருந்தார். அப்போது அங்குவந்த அதேபகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மைக்கேல் (வயது23) என்பவர், ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை கொண்டுவந்து, சிறுமியின் தொடையில் விட்டுள்ளார்.
பயந்துபோன சிறுமி சத்தம் போடவே, சிறுமியின் கை களை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள், மைக்கேலின் செயலை பார்த்து, மைக்கேலை பிடித்து அடித்து, உதைத்து, காரைக்கால்நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர்.
- அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரி அருகே, சைக்கிளில் சென்ற வாலிபரிடம், ரூ.20 ஆயிரம் மதிப்பி லான செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை, கோட்டுச்சேரி போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் தலத்தெரு கே.எம்.ஜி நகரைச்சேர்ந்தவர் கபிலர். இவர் காரைக்கால் நலவழித்துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் (வயது(22). இவர், சுகாதார ஆய்வாளருக்கு படித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கிறார். அபிஷேக், வழக்கமாக சைக்களில் உடற்பயிற்சி செய்வது வழக்கமாம். சம்பவத்தன்று காலை, சைக்களில் உடற்பயிற்சி செய்த வாறு, காரைக்கால் கீழகாசாகுடி சாலை வழியாக, தனியார் மருத்துவக்கல்லுரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்களில் வந்த 3 மர்ம நபர்கள், சைக்களில் மோட்டார் சைக்கிளை மோதுவது போல் வந்து நின்றனர். தொடர்ந்து, சைக்கிளை ஒழுங்காக ஓட்ட மாட்டாயா என கேட்டு அபிஷேக்கை அடிப்பது போல் கையை ஓங்கி, அபிஷேக் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை திடீரென 3 நபர்களில் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, அபிஷேக் மற்றும் கபிலர், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.






