என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.
புதுச்சேரி:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story






