search icon
என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது.
    • தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது.

    இம்பால்:

    காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்காக ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார்.

    அதுபோல நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியும் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி மணிப்பூரில் இருந்து மும்பை வரை ராகுல் நடைபயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாளை ராகுல் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

    மணிப்பூர் தலைநகா் இம்பாலில் அமைந்துள்ள ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடைபயண தொடக்க விழாவை நடத்த காங்கிரஸ் சாா்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து இம்பால் கிழக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

    தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழுவதைத் தவிா்க்கும் வகையில் அரசு, மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளா்களுடன் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்குவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

    மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வசதியாக, நடைபயண தொடக்க நிகழ்வில் பங்கேற்கும் நபா்கள் அனைவரின் பெயா் மற்றும் கைப்பேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே கலெக்டர் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்' என்றும் அவர் கூறி இருந்தார்.

    இந்த நிலையில், தொடக்க விழா நடக்கும் இடத்தை வேறு பகுதிக்கு காங்கிரஸ் மாற்றி உள்ளது. இது தொடர்பாக மணிப்பூா் மாநில காங்கிரஸ் தலைவா் கெய்ஷம் மேகசந்திரா கூறியதாவது:-

    நடைபயண தொடக்க விழாவை ஹப்தா காங்ஜிபங் அரசு மைதானத்தில் நடத்திக்கொள்ள அனுமதிக்கக்கோரி கடந்த 2-ந் தேதி அரசிடம் அனுமதி கடிதம் சமா்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, மாநில முதல்வா் பிரைன் சிங்கை கடந்த 10-ந் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

    இதன் காரணமாக, கடைசி நேரத்தில் இம்பாலி-லிருந்து 34 கி.மீ. தொலைவுக்கு அப்பால் கோங்ஜோம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் மைதானத்தில் தொடக்க விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தவுபால் போலீஸ் துணைக் கண்காணிப்பாளா் நேற்று முன்தினம் இரவு அனுமதி வழங்கினாா். நடைபயணத்தை காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜூன காா்கே கொடியசைத்துத் தொடங்கி வைப்பாா்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் யாத்திரைக்கான 'தொடக்க விழா நிகழ்விடம் மாறியபோதும், நடைபயண வழித்தடத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    மணிப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் நடைபயணம், 67 நாட்களில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மும்பையில் வருகிற மாா்ச் 20-ந் தேதி நிறைவடைய உள்ளது.

    • மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்த வண்ணம்தான் உள்ளது.
    • பிஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் அதிகரிப்பு.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மைதேயி- குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு பிரிவினரிடையேயான மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்த நிலையில் ஏராளமானோர் அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ராணுவம், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை வெடித்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனால் பதட்டம் நிலவியது.

    இந்நிலையில் மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். தாரா சிங், இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) ஆகிய 4 பேரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கும்பலால் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டம் ஹாடக் பைலென் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் ஆயுதமேந்திய குழு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தாராசிங் மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கும்பி- தவுபால் மாவட்டத்தில் உள்ள வாங்கூவில் இரு பிரிவனருக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு மணிப்பூரில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யாத்திரைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணம் காரணமாக மணிப்பூர் அரசு தொடர்ந்து மறுப்பு.
    • முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் அறிவித்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணம் காரணமாக மணிப்பூர் அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.

    ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மணிப்பூரில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரையை மேற்கொள்ள மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்தது.

    குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுடன் மட்டுமே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் மணிப்பூர் மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.

    • ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தகவல்.
    • ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்து வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை" என்றார்.

    இதுகுறித்து, "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "மணிப்பூரின் வேறு பகுதியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எந்த இடம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என விளக்கம் அளித்துள்ளார்.

    • துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
    • முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் லிலாங் சிங்காவ் பகுதிக்குள் காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி நடத்திய திடீர் துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தௌபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

     


    திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் மூன்று நான்கு-சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.  

    • அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
    • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை.

    மணிப்பூர் மாநிலத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இன்று பிற்பகல் 3.30 மணி முதலே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறந்தது.
    • அடையாளம் தெரியாத பறக்கும் தட்டால் வான்வெளி தற்காலிகமாக மூடல்.

    மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையம் அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் பறப்பதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடி பிடிக்கும் நோக்கில் இந்திய விமானப்படை இரண்டு ரஃபேல் ஜெட் விமானங்களை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியது.

    நேற்று (நவம்பர் 19) மதியம் சுமார் 2.30 மணி அளவில் இம்பால் விமான நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறந்ததால், வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    "இம்பால் விமான நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறப்பதாக தகவல் கிடைத்ததும், அருகாமையில் உள்ள விமான தளத்தில் இருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. இந்த விமானத்தில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன."

    "போர் விமானம் வான்வெளியில் தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்திலேயே சென்று சந்தேகத்திற்குறிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இம்பால் விமான நிலையம் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பறக்கும் தட்டு பதிவாகி இருப்பதால், அதனை வைத்து தொடர் விசாரணை மற்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது," என பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.
    • விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலாவில் விமான நிலையம் அருகே விமான கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று திடீரென பறந்தது.

    பிற்பகல் 2 மணியளவில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

    ரேடார் பதிவுகள், சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து மர்ம பொருளை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
    • மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை.

    கலவரம் மூண்டதை தொடர்ந்து மே 3-ந்தேதி முதலே மாநிலத்தில் செல்போன் இணையதளம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இடையில் செப்டம்பர் மாதத்தில் சில நாட்கள் மட்டும் இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் அடுத்தடுத்து இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே சமூக வலைத்தளங்கள் வழியாக வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை (புதன்கிழமை) வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் பிறப்பித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் முழுவதும் எரிந்து காணப்படுகிறது. அவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
    • வீடியோ 7 வினாடிகள் ஓடுகிறது. அதில் குக்கி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

    மணிப்பூரில் பழங்குடியின வாலிபர் ஒருவரின் உடலை குழியில் வைத்து எரிக்கும் வீடியோ காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வாலிபர் கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் டிரவுசர் அணிந்துள்ளார். அவர் குழியில் படுத்த நிலையில் உள்ளார். அவரது முகத்தில் காயம் உள்ளது. உடல் முழுவதும் எரிந்து காணப்படுகிறது. அவர் உயிருடன் எரிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.

    இந்த வீடியோ 7 வினாடிகள் ஓடுகிறது. அதில் குக்கி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ மணிப்பூர் பகுதியில் பல வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாவதால் மணிப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீடியோ மே மாதம் முதலே பரவி வருவதாக தெரிகிறது. அவர் யார் என்று அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

    மணிப்பூரில் கடந்த மே மாதம், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதில் 180 பேர் பலியானார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கேம்சந்த் யும்னம் வீடு நோக்கி கையெறி குண்டு வீசிய சம்பவம் நேற்று நடந்தது. அவரது வீடு, இம்பாலில் யும்னம் லெய்கை பகுதியில் உள்ளது. வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், திடீரென வீட்டை நோக்கி கையெறி குண்டை வீசினர்.

    நல்லவேளையாக, பிரதான வாயிலுக்கு சற்று முன்பே குண்டு கீழே விழுந்து வெடித்து விட்டது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தினேஷ் சந்திரதாஸ் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். வெடிகுண்டு சிதறல்கள் பட்டதால், அவர்களுக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் பார்வையிட்டார். குண்டு வீச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தலைமை செயலாளர் வினீத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்டங்கள், நிறுவனங்கள், இடங்கள், துணை கோட்டங்கள் ஆகியவற்றின் பெயரை சிலர் மாற்றுவதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி மாற்றுவது, தற்போதைய சூழ்நிலையில் இரு சமூகங்களுக்கிடையே பிளவை உருவாக்கும்.

    சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடும். எனவே, இதுபோன்று பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும்.
    • சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.

    இம்பால்:

    மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

    இந்நிலையில் 2 மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்கள் தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.

    தற்போது 4 பேரும் கைதான சுராசந்த்பூர் தான் மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும். இங்கு தான் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பரவியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இரண்டு சிறார்களும் கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது..

    இதுதொடர்பாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங், தனது எக்ஸ் வலைதளத்தில், "ஒரு பழமொழி சொல்வது போல், ஒருவர் குற்றம் செய்துவிட்டு தலைமறைவாகலாம், ஆனால் அவர்கள் சட்டத்தின் நீண்ட கைகளில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்கு மரணதண்டனை உட்பட அதிகபட்ச தண்டனையை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    ×