என் மலர்
மகாராஷ்டிரா
- சரத் பவாரை அஜித் பவார் சந்தித்தது கூட்டணியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
- சரத் பவார் இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திக்க இருப்பதாக வதந்தி வெளியானது
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி ஏக்நாக் ஷிண்டே அரசியல் அங்கம் வகித்துள்ளார் அஜித் பவார். அம்மாநில துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவராருக்கு அண்ணன் மகன் ஆவார்.
இருவருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வரும் நிலையில், குடும்ப விசயமாக சந்தித்துள்ளனர். முன்னதாக ஒருமுறை சரத் பவார் மனைவி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் அஜித் பவார் சரத் பவார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சரத் பவாரை அஜித் பவார் ரகசிய சென்று சந்தித்தார். இது குடும்ப சந்திப்பு என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
ஆனால் சரத் பவார் உடன் கூட்டணி வைத்துள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் இந்த சந்திப்பை விரும்பவில்லை.
சிவசேனா தனது கட்சி பத்திரிகையில் இதுகுறித்து விமர்சனம் செய்திருந்தது. தொடர் சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.
சரத் பவார்- அஜித் பவார் சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ஏனென்றால் இந்த மாத இறுதியில் மகாராஷ்டிராவில் இரண்டு நாட்கள் I.N.D.I.A. கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சிகள் உள்ளன.
இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமே, பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மேலும், பொதுத்தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடித்து கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என உத்தவ் தாக்கரே நினைக்கிறார். இவ்வாறு இருக்கும்போது பவார்கள் சந்திப்பு கூட்டணி கட்சிகளுக்கு சரியென்று படவில்லை.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல், பவார்களின் சந்திப்பு கவலைக்குரிய விசயம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நானா பட்டோல் கூறியதாவது:-
இருவரின் சந்திப்பு எங்களை பொறுத்தவரை கவலைக்குரிய விசயம்தான். ரகசிய இடத்தில் நடைபெற்ற இருவருடைய சந்திப்பை நாங்கள் ஏற்கவில்லை. எனினும், இந்த விசயம் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் விவாதிப்பார்கள். எதிர்க்கட்சி கூட்டணி விவாதிக்கும். ஆகவே, இது குறித்து மேலும் விவாதிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் மக்களவை தேர்தலில் சரத் பவார் கட்சி இல்லாமல் போட்டியிடும் என்பதில் எந்த உண்மையும் இல்லை'' என்றார்.
- இவருக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்
- புனே நகரில் முந்த்வா பகுதியில் ஒரு விடுதியில் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார்
உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற 4 பேர் கொண்ட பாடகர் குழு, ஷாந்தி பீப்பிள் (Shanti People).
இக்குழுவின் முன்னணி பாடகி உமா ஷாந்தி. சுத்த சைவ உணவு பழக்கத்தை கொண்டுள்ள ஷாந்தி பீப்பிள் குழு இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து புதுவித இசையை வழங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல நாடுகளில் இவர்களுக்கு ரசிகர்கள் உள்ளதால், இவர்களின் பாடல் குழு தங்கள் இசை நிகழ்ச்சிக்காக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த 2022 அக்டோபரில் புனேயில் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த வருடம் இந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்தில் பெங்களூரு, போபாலில் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதை முடித்து விட்டு நேற்று முன் தினம் மகாராஷ்டிராவின் புனே நகரில் முந்த்வா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் உமா ஷாந்தி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் ஷாந்தி பீப்பிள் குழுவின் முன்னணி பாடகியான உமா ஷாந்தி இந்திய கொடியை கையில் பிடித்தபடி நடனமாடி, பிறகு அந்த தேசிய கொடியை பார்வையாளர்களை நோக்கி எறிவது தெரிகிறது.
இதை கண்ட அஷுதோஷ் போஸ்லே எனும் வழக்கறிஞர் தேசிய கொடியை உமா அவமதித்ததாக புகார் ஒன்றை முந்த்வா காவல்துறையினரிடம் பதிவு செய்தார். இதனையடுத்து காவல் அதிகாரி விஷ்ணு தம்ஹானே இந்த வீடியோவை ஆராய்ந்து உமா ஷாந்தி மீதும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கரிக் மொரேன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- சரத் பவாருடன் அஜித் பவார் ரகசிய சந்திப்பு
- அண்ணன் மகனை சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என்றார் சரத் பவார்
மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வந்தன. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை கைப்பற்றி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பூசலை உண்டாக்கிய அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் பங்கேற்று துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அதில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத் பவாருக்கும், அஜித் பவாருக்கும் இடையில் அரசியல் மோதல் இருந்து வருகிறது. துரோகி என்ற அளவிற்கு அஜித் பவாரை சாடினார் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். கட்சி பிளவுக்குப் பிறகு ஏற்கனவே இருவரும் சந்தித்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் ரகசியமாக சந்தித்தது மகாராஷ்டிரா அரசியலில் பேசும்பொருளாக உருவெடுத்தது.
சந்திப்பு குறித்து சராத் பவார், தனது அண்ணன் மகனான அஜித் பவாரை சந்திப்பதில் தவறு இல்லை. ஒருபோதும் பா.ஜனதாவில் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் கட்சி பத்திரிகையான சாம்னா, சரத் பவார் தொடர்ந்து அஜித் பவாரை சந்திப்பது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதில் ''அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாரை சந்திப்பதை பார்க்க நகைப்புக்குரியதாக உள்ளது. அவர் அதை தவிர்க்கவில்லை.
பா.ஜனதாவின் சாணக்கியர் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து அஜித் பவரை சரத் பவாருடன் சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், இதுபோன்ற சந்திப்பு சரத் பவாரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். இது நல்லது அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
- மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
- வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மும்பை:
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மாநகரின் முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
ஆனால் சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
தொடர்ந்து மிரட்டல் வந்த தொலைபேசி எண் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மால்வாணி பகுதியை சேர்ந்த ருக்சார் அகமது (வயது 43) என்பது தெரியவந்தது. தையல் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் அவர் இதேபோல மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 79 முறை போன் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
- மகாராஷ்டிராவின் தானே அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் இறந்துள்ளனர்.
- நோயாளிகள் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத் குற்றம்சாட்டினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களில் சிலர் முதியவர்கள் எனவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறுகையில், கல்வா மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள். 8 பேர் ஆண்கள். இந்தச் சம்பவம் குறித்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே விசாரித்தார். அவர் நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் இறந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து துணை முதல்வரானார் அஜித் பவார்
- அஜித் பவார், சரத் பவார் ஆகியோருக்கு எத்தனை எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு என்பது உறுதியாக தெரியவில்லை
மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும், அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றனர்.
இதனால் சரத் பவார்- அஜித் பவார் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.
பா.ஜனதா- ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பாரா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களுக்கு முன் எழுந்தது. பின்னர் அவர்தான் நீட்டிப்பார் என பா.ஜனதா உறுதியாக கூறியதால், அந்த பிரச்சனை அப்படியே அமர்ந்தது.
இந்த நிலையில் நேற்று சரத் பவார்- அஜித் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு புனேவில் உள்ள தொழில் அதிபர் அதுல் சோர்டியா பங்களாவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அமேல் மிட்கரி கூறுகையில் ''இரு தலைவர்களுடைய சந்திப்பு, குடும்பம் தொடர்பானதாக இருந்திருக்கும்'' என்றார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பட்கால்கர் ''இதுகுறித்து ஜெயந்த் பாட்டீல் மற்றும் பவார்களிடம், சந்திப்பு குறித்து கேட்டால் சிறந்ததாக இருக்கும்'' என்றார்.
தேசியவாத காங்கிரசில் 54 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் சரத் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது, அஜித் பவாருக்கு ஆதரவு எவ்வளவு உள்ளது? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
சிவசேனா கட்சியில் இருந்து 40 எல்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் இணைந்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, அஜித் பவார் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து துணை முதல்வராகியுள்ளார்.
- மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு பயணம்
- அடித்து கொலை செய்யப்பட்டு ஆற்றில் பிணம் வீச்சு
மகாராஷ்டிர மாநில பா.ஜனதாவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் கணவரால் கொலை செய்யப்பட்டு, உடல் ஆற்றில் வீசப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சனா கான் தனது கணவர் அமித் என்ற பப்பு ஷாவை பார்க்க ஜபால்புர் சென்றுள்ளார். அப்போது பண பரிமாற்றம் தொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அமித் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதுடன், சாலையோர உணவகமும் நடத்தி வந்துள்ளார்.
நாக்பூரில் இருந்து ஜபால்புர் சென்ற சனா கானுக்கும் அவருக்கும் இடையில் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜபால்புரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்ற அமித், சனா கானை அடித்து கொலை செய்துள்ளார். மேலும், உடலை ஹரின் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். நாக்பூர் மற்றும் ஜபால்புர் போலீசார் இணைந்து, விசாரணை மேற்கொண்டு அமித்-ஐ கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், ''சானாவும் அமித்தும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பணம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. நாக்பூரில் இருந்து ஜபால்புர் வந்து தகராறில் ஈடுபட்டபோது, கணவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்'' எனத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மற்றொருவரும் ஈடுபட்டுள்ளார். அவரை தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சனா கான் ஆகஸ்ட் 2-ந்தேதி நாக்பூரில் இருந்து ஜபால்புர் சென்றுள்ளார். சுமார் 10 நாட்களாக காணமால் போன நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
- பிரகாஷ்சுர்லே எம்.எல்.ஏ மகன் ராஜ் சுர்லே மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
- மும்பை போலீசார் ராஜ்சுர்லே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை கோரேகான் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இசை கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்து வருகிறார். நேற்று இவர் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் திடீரென அலுவலகத்துக்குள் புகுந்தது. அவர்கள் துப்பாக்கி முனையில் ராஜ்குமார் சிங்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். இதனை தடுக்க முயன்ற அலுவலக ஊழியர்களை அவர்கள் மிரட்டினார்கள்.
ராஜ்குமார் சிங்கை அந்த கும்பல் தகிசரில் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்.எல்.ஏ பிரகாஷ்சுர்லே அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில்ஆளும் கட்சியை சேர்ந்த பிரகாஷ்சுர்லே எம்.எல்.ஏ மகன் ராஜ் சுர்லே மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை போலீசார் ராஜ்சுர்லே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- துஷாரை காந்தியை வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் "வெள்ளையனே வெளியேறு" எனும் இயக்கம் 1942ல் ஆரம்பிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிராக இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமான ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படும் இந்த போராட்டம், மகாத்மா காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினையடுத்து 1942 ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப்பட்டதாகும்.
இதில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 9ம் தேதி 'கிராந்தி திவஸ்' எனும் பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மும்பை கிராந்தி மைதானத்தில் இதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்திற்கெதிராக அமைதி வழியில் போராட மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் 8ம் தேதி இரவு மும்பை காவல்துறை இவர்களின் கொண்டாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்தது. அவர் வீட்டு வாசலில் சுமார் 20 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.
தடையை மீறிய துஷார், ஆகஸ்ட் 9 தேதி காலை 07:00 மணியளவில் நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டிலிருந்து புறப்பட்டார். துஷாரை அங்கு நின்றிருந்த ஒரு காவல்துறை அதிகாரி தடுத்தார்.
இதனை மீறி துஷார் புறப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி மும்பை சான்டா க்ரூஸ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் நிறைவடையும் வரை அவர் அங்கேயே வைக்கப்பட்டார்.
இது குறித்து துஷார் காந்தி கூறுகையில், 'வெள்ளையர்களால் என் கொள்ளு தாத்தாவும் கொள்ளு பாட்டியும் கைது செய்யப்பட்ட நாளிலேயே என்னை காவலில் வைத்ததற்கு காவல் துறைக்கு நன்றி. இந்தியாவில் இன்றிருக்கும் நிலை அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அடக்குமுறை நாட்களை போன்றே உள்ளது' என்றார்.
- இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது.
- தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே:
பலரும் விரும்பி பருகும் பானங்களில் காபி முதன்மையானது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்திய காபி வெளிநாடுகளுக்கு செல்கிறது.
இந்நிலையில் உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் சிக்கமளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீப்ரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது இது ரூ.64 முதல் ரூ.650 வரை விற்கப்படுகிறது.
ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் காபி விலை உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சில சிறிய காபி விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர்.
காபி விளையும் சிக்கமகளூரு பகுதிகளில் காலநிலை மாற்றமும் உற்பத்தியை பாதித்துள்ளது. பூக்கும் நாட்களில் பருவமழை பெய்ததால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக காபி எஸ்டேட் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 70 சதவீத காபி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காபி உற்பத்தியாகும் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காததால் வழக்கமான 2 அறுவடைகளுக்குப் பதிலாக 4 சுற்றுகள் தேர்ந்தெடுத்து அறுவடை செய்துள்ளனர். பிரேசிலின் அராபிகா காபி விலைகள் சர்வதேச சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு 200 கிராம் ஜாடியின் விலை 280 ரூபாயில் இருந்து அதே ஜாடியின் விலையை 360 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அராபிகா ரக காபியை மக்கள் விரும்புவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
காபி பயிரிடுதற்கு தொழிலாளர் செலவில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அதிகரித்து உள்ளது. ஆனால் அரபிகா காபி விலை கடந்த ஆண்டை விட இப்போது கொஞ்சம் குறைவாக உள்ளது. வணிகர்கள் அதை பொதுவாக மொத்தமாக வாங்குகிறார்கள், எனவே விலை உயரும் சூழல் உள்ளது என்று என்று கர்நாடக காபி தோட்டக்காரர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில அரசு திறந்து விட மறுப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.
- துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் முகத்தை துணியால் மூடி இருந்தார். அதை பார்த்ததும் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.
துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார். இதனால் கோவிலுக்குள் பயங்கரவாதி புகுந்து விட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர் ஒருவர், துப்பாக்கியுடன் இருந்த நபரை நோக்கி சென்றார். அவர், முகமுடி அணிந்திருந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.
அப்போது, தான் பயங்கரவாதி அல்ல போலீஸ்காரர் என்றும், இது பயங்கரவாத தடுப்பு தொடர்பாக போலீசாரின் ஒத்திகை என்றும் துப்பாக்கியுடன் இருந்த நபர் தெரிவித்தார். பிணைக் கைதியாக இருந்த வரும் போலீஸ்காரர் ஆவார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்திகைக்காக போலீஸ்காரர் துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் மாறு வேடத்தில் கோவிலுக்குள் நுழைந்தது தெரிய வந்தது.
மேலும் போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்தவர் பிரசாந்த் குல்கர்னி என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலர் அதிருப்தி தெரிவித்தனர். பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற ஒத்திகைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபயணம் மேற்கொண்டார்.
- 2-வது கட்டமாக குஜராத், மேகாலயா இடையே ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
மும்பை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.
இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை கடந்து சென்றது. மொத்தம் 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டார். கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக மீண்டும் ஒற்றுமை யாத்திரையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இம்முறை குஜராத் மாநிலத்திலிருந்து மேகலாயா வரை நடைபயணம் மேற்கொள்ளலாம். இதில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ராகுல் காந்தி குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணத்தை தொடங்கும்போது, நாங்களும் மகாராஷ்டிராவில் நடைபயணம் தொடங்க உள்ளோம்.
அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி நடைபயணத்தை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது. ராகுல் காந்தி நடைபயணம் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்டும்.
மாநில காங்கிரஸ் சார்பில் விதர்பாவில் எனது தலைமையில் நடைபயணம் நடைபெறும். மேற்கு விதர்பாவில் எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தலைமையிலும், மேற்கு மகாராஷ்டிராவில் முன்னாள் முதல் மந்திரி பிருத்விராஜ் சவான் தலைமையிலும், நிதி தலைநகரான மும்பையில் வர்ஷா கெய்க்வாட் தலைமையிலும் நடைபயணம் நடைபெறும்.
மராத்வாடாவில் முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் தலைமையிலும், வடக்கு மகாராஷ்டிராவில் பாலாசாகிப் தோரட் பொறுப்பிலும் நடைபயணம் நடைபெறும். மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.






