பா.ஜனதாவில் உண்மை பேசும் ஒரே நபர் இவர்தான்: சுப்ரியா சுலே சொல்கிறார்

ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே
பா.ஜனதாவில் உண்மை பேசும் ஒரே நபர் இவர்தான்: சுப்ரியா சுலே சொல்கிறார்
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.

அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com