search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா
    X

    லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்கள் எடுத்தது.
    • 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    மும்பை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் வான்கடே மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    Live Updates

    • 2 Nov 2023 3:09 PM GMT

      இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.

    • 2 Nov 2023 2:59 PM GMT

      உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் முகமது சமி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஜாகீர் கான் ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளுடன் 2 மற்றும் 3 -வது இடத்தில் உள்ளனர்.

    • 2 Nov 2023 2:54 PM GMT

      உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் ஜாகீர் கான் மற்றும் ஸ்ரீநாத் சாதனையை முகமது சமி சமன் செய்தார். 

    • 2 Nov 2023 2:42 PM GMT

      முகமது சமி பந்து வீச்சில் மேத்யூஸ் 12 ரன்னில் அவுட் ஆனார்.

    • 2 Nov 2023 2:26 PM GMT

      3 -வது விக்கெட்டை கைப்பற்றினார் முகமது சமி. சமீரா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    • 2 Nov 2023 2:13 PM GMT

      10 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    • 2 Nov 2023 2:06 PM GMT

      முகமது சமி பந்து வீச்சில் அசலங்கா 24 பந்துகள் சந்தித்து 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹேமந்தா முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

    • 2 Nov 2023 1:33 PM GMT

      குசல் மெண்டீஸ் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ்.

    • 2 Nov 2023 1:32 PM GMT

      சிராஜ் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சமரவிக்ரமா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    • 2 Nov 2023 1:30 PM GMT

      சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கருரத்னே 0 ரன்னில் அவுட் ஆனார்.

    Next Story
    ×