என் மலர்
மகாராஷ்டிரா
- வெங்காயம் ஏற்றுமதிக்கான வரியை 40 சதவீதம் என அறிவித்த மத்திய அரசு, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றது
- டிசம்பர் மாதம் வரை பண்டிகை காலங்கள் என்பதால் மத்திய அரசு இவ்வாறு முடிவு எடுத்துள்ள
தொடர்ச்சியாக பண்டிகைகள் வரும் நிலையில், வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக நிர்ணயித்து, வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே வெங்காயம் குறித்து மகாராஷ்டிரா மாநில மந்திரி தாதா புசே கூறியதாவது:-
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை நீங்கள் பயன்படுத்தும்போது, சில்லறை விற்பனையை காட்டிலும், 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யும்போது, அதை உங்களால் வாங்க முடியும். வெங்காயம் வாங்க முடியாதவர்கள், இரண்டு முதல் நான்கு மாதங்கள் அதை சாப்பிடாமல் இருந்தால், எந்த வித்தியாசமும் ஏற்பட போவதில்லை.
ஏற்றுமதி வரி அமல்படுத்தும்போது, சரியான ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும். சில நேரங்களில் குவிண்டால் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆலோசனை மூலம் இதற்கு சமூக தீர்வு காண முடியும்.
இவ்வாறு தாதா புசே தெரிவித்தார்.
முன்னதாக, நாசிக்கில் வெங்காய வியாபாரிகள் சங்கம், ஏலத்தில் கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வெங்காயம் உற்பத்தில் நாசிக் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- மீன்களில் சிலவகை எண்ணெய் உள்ளன. இது கன்னத்தை மிருதுவானதாக வைத்திருக்கும்
- மற்றவர்கள் பார்த்தால், அவர்கள் ஈர்க்கப்டுவார்கள்
மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா மந்திரி விஜயகுமார் காவிட், தினந்தோறும் மீன் சாப்பிட்டால், ஐஸ்வர்யா ராய் போன்று கண்கள் அழகாக இருக்கும்'' எனக் கூறியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மந்திரி விஜயகுமார் காவிட், நந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
அவர் அந்த வீடியோவில் ''தினந்தோறும் மீன் சாப்பிடுபவர்களின் கன்னங்கள் மிருதுவானதாக இருக்கும். கண்கள் பளிச்சென பளபளக்கும். யாராவது அவர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களால் ஈர்க்கப்படுவீர்கள்.
நான் ஐஸ்வர்யா ராய் பற்றி கூறினேனா?. அவர் மங்களூருவில் கடற்கரையோரம் வசித்தவர். தினமும் அவர் மீன் சாப்பிடிக்கனும். அவர் கண்களை பார்த்தீர்களா? அவரை போன்ற கண்களை நீங்கள் பெறுவீர்கள். மீனில் சிலவகை எண்ணெய் உள்ளன. அது உங்களுடைய கன்னங்களை மிருதுவாக வைத்திருக்கும்'' என்றார்.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ., அமோல் மிட்கரி ''மந்திரி இதுபோன்று அற்பமான கருத்துகளை வெளிப்படுத்துவதைவிட, பழங்குடியின மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.'' என்றார்.
பா.ஜனதா எம்.எல்.ஏ., நிதேஷ் ராணே, ''நான் தினந்தோறும் மீன் சாப்டுகிறேன். என் கண்கள் ஐஸ்வர்யா ராய் கண்கள் போன்று இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து ஆராய்ச்சி ஏதும் உள்ளதா? என்று அவரிடம் கேட்க இருக்கிறேன்'' என்றார்.
- 55.99 கோடி ரூபாய்க்காக ஏலம் விடப்படும் என நேற்று அறிவிப்பு
- இன்று காலை அந்த அறிவிப்பு திரும்பப்பெறுவதாக பரோடா வங்கி அறிவித்தது
பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல். இவர் பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2022-ல் இருந்து பேங்க் ஆஃப் பரோடாவில் சுமார் 55.99 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சன்னி தியோல் தந்தை தர்மேந்திரா வங்கியில் தனி உத்திரவாதம் அளித்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்தாததால், ஜூகுவில் உள்ள அவரது பங்களாவை, வங்கி நேற்று முடக்கியது. அத்துடன் வருகிற 25-ந்தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும் என அறிவிப்பையும் வெளியிட்டது.
ஆனால், இன்று காலை தொழில்நுட்ப காரணமாக ஏலம் அறிவிப்பு திரும்பப் பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பா.ஜனதா எம்.பி. என்பதால் வங்கி உடனடியாக திரும்பப்பெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நேற்று நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.
இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.
- இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர்.
- உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.
மும்பை:
அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன் போதைப்பொருள் என தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த கொக்கைனின் மதிப்பு ரூ.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பயணியையும், அவரிடமிருந்து அந்த போதைப்பொருளை பெற்றுச்செல்ல நாவி மும்பை பகுதியின் வாஷி பகுதிக்கு வந்த உகாண்டா நாட்டு பெண் ஒருவரையும் அதிகாரிகள் பொறி வைத்து பிடித்து, கைது செய்துள்ளனர்.
- சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் இஸ்வர்லால் ஜெயின். இவர் சரத்பவாரின் உதவியாளர் ஆவார்.
வங்கியில் ரூ.353 கோடி கடன் வாங்கி விட்டு அதை செலுத்தாமல் மோடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி.யான இஸ்வர்லால் ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் இஸ்வர்லால் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ஜல்கான், நாசிக், தானே ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் மற்றும் அவரது குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 39 கிலோ தங்க வைர நகைகள் மற்றும் ரூ.1.1 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் தவிர ரூ.50 கோடிக்கும் அதிகமான 60 சொத்துக்களும் பற்றிய விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக ஒரு இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
- ஆம்புலன்சுக்கு போன் செய்த நிலையில் அது வர தாமதமாகி உள்ளது.
மும்பையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 62 வயதான மூதாட்டி ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக அந்த மூதாட்டி சென்றுள்ளார்.
அப்போது சாலையை கடக்க முயன்ற அந்த மூதாட்டி மீது எதிர்பாராதவிதமாக ஒரு இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் வக்சவுரே மற்றும் காவலர்கள் விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்த நிலையில் அது வர தாமதமாகி உள்ளது. இதனால் ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் போலீஸ்காரர் வக்சவுரே, படுகாயம் அடைந்த மூதாட்டியை தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்து அந்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
அவர் மூதாட்டியை தூக்கி சென்ற புகைப்படம் டுவிட்டரில் வைரலாக பரவியது. இதை பார்த்த பயனர்கள் பலரும் போலீஸ்காரர் வக்சவுரேவுக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
- நாய் மீது சபிஸ்தா ஆசிட் வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்த துகாரம் என்பவர் பிரவுனி என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு திடீரென கண் அருகே காயம் ஏற்பட்டது. அது எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்வதற்காக துகாரம் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த சபிஸ்தா அன்சாரி என்ற பெண் அந்த நாய் மீது ஆசிட் வீசியதைப் பார்த்து துகாரம் அதிர்ச்சி அடைந்தார்.
சபிஸ்தா தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த பூனையுடன் துகாரம் வளர்த்து வந்த நாய் விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதற்கு சபிஸ்தா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவத்தன்று அவர் பூனையுடன் விளையாடிய நாய் மீது ஆசிட் வீசியது தெரிய வந்தது. இதனால் நாய் பிரவுனிக்கு கண் பார்வை இழந்ததோடு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாய் மீது சபிஸ்தா ஆசிட் வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும், இதுதொடர்பாக துகாரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சபிஸ்தா அன்சாரி மீது விலங்குகளை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதற்கிடையே, கண் பார்வை இழந்த நாயை, தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
- மும்பை வழியாக பயணித்த சீன கப்பலிலிருந்து உதவி கோரி இந்த மையத்திற்கு ஒரு செய்தி வந்தது
- அன்றிரவு முழுவதும் வானிலை சாதகமாக இல்லை
இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது.
இப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது மும்பையிலுள்ள கடற்சார் மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையம் (Mumbai Rescue Coordination Centre).
அரபிக்கடலில் மும்பை வழியாக பயணித்த எம்வி டாங் ஃபேங் கான் டான் நம்பர் 2 (MV Dong Fang Kan Tan No 2) எனும் சீன ஆராய்ச்சி கப்பலிலிருந்து இவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த கப்பல் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் போது இன் வெய்க்யாங் (Yin Weigyang) எனும் ஒரு மாலுமிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியுடன் கூடிய மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு உடனடி மருத்துவ உதவி வேண்டி, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது.
அந்த சீன கப்பல், அரபிக்கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. முழு இருளில் இருந்த அன்றிரவு முழுவதும் வானிலையும் சாதகமாக இல்லை.
இருப்பினும் அந்த பயணியை காக்க இந்திய கடலோர காவல்படை தீவிரம் காட்டியது. இதனைத்தொடர்ந்து, மும்பையிலுள்ள மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையத்தை சேர்ந்த நிபுணர்கள், நேரத்தை வீணாக்காமல் அவரை காப்பாற்ற வான்வழியாக விரைந்தனர்.
ஸிஜி ஏஎல்ஹெச் எம்கே-3 (CG ALH MK-III)எனும் ஹெலிகாப்டரில் கப்பலுக்கு விரைந்து சென்று அவரை கப்பலிலிருந்து தூக்கி அவசரகால மருத்துவ உதவிகளை செய்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதும் அவரை மீண்டும் அந்த கப்பலின் மருத்துவ நிர்வாக முகவரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பேருதவிக்கு சீனா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"நாங்கள் காக்கிறோம்" (We Protect) எனும் குறிக்கோளுடன் செயலாற்றும் இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சவாலான வானிலையில் கடும் இருள் சூழ்ந்த இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும் ஆபத்தான நேரங்களில் உதவி செய்யும் நண்பனாக வாழும் இந்தியர்களின் பண்பை இது பறைசாற்றுவதாக வைரலாகும் வீடியோவை காண்பவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
In a daring operation, @IndiaCoastGuard #ALH MK-III evacuates a #Chinese national from MV Dong Fang Kan Tan No 2 around 200 Km mid-sea amidst challenging night conditions & extreme weather. Patient was reported chest pain &cardiac arrest symptoms.#SAR #ArabianSea#MaritimeSafety pic.twitter.com/THG0nBZjhi
— Indian Coast Guard (@IndiaCoastGuard) August 17, 2023
- பனாமா நாட்டு கொடியுடன் கூடிய ஆராய்ச்சி கப்பல் உதவியை நாடியது
- முதலுதவி செய்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார்
மும்பை அருகே அரபிக்கடலில் பனாமா நாட்டு கொடியுடன் ஆராய்ச்சி கப்பல் ஒன்று பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்த சீனாவைச் சேர்ந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடினர்.
மருத்துவ உதவி என்பதால் உடனடியாக சீன நாட்டினர் உயிரை காப்பாற்ற இந்திய கடலோர காவல்படை கடலுக்குள் சென்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக, மோசமான வானிலை நிலவியது.
என்றாலும், கடலோர காவல்படை, அதை எதிர்கொண்டு கப்பலை அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, ஹெலிகாப்டர் மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், கப்பல் ஏஜென்டிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடலோர காவல்படையின் துரித நடவடிக்கையால் சீன நபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
- போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
- உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.
மும்பை:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற சென்ட்ரல் அதிவிரைவு ரெயிலில் கடந்த 31-ந்தேதியன்று ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் சேத்தன்சிங் சவுத்ரி என்பவர் தன்னுடன் பயணம் செய்த போலீஸ் அதிகாரி திகாரம் மீனா மற்றும் 3 பயணிகள் என 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி னர். அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.
- வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார்.
- உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை நகரில் வங்கி அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு சபர்பன் பந்த்ரா பகுதியில் உள்ள உணவகத்திற்கு உணவு சாப்பிட வந்துள்ளார்.
அப்போது அவர், சிக்கன் கிரேவி உணவை ஆர்டர் செய்தார். உணவகத்தில் அவருக்கு பரிமாறப்பட்ட கிக்கன் உணவில் சிக்கனுடன் சேர்ந்து செத்த எலியும் இருந்தது. இதைக்கண்டு வங்கி அதிகாரி அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் வங்கி அதிகாரி சிக்கன் கிரேவியை ஓரிரு வாய் சாப்பிட்ட பிறகே கண்டுபிடித்தார். சிக்கன் துண்டு என்று நினைத்து கடித்த வங்கி அதிகாரிக்கு வித்தியாசம் தெரியவே அதனை உன்னிப்பாக கவனித்தார். அப்போதுதான் அது சிக்கன் துண்டு அல்ல.. சுண்டெலி என்று தெரியவந்தது.
இதனை உணவக ஊழியர்களிடம் காண்பித்தபோது அது எலிதான் என்பது நிரூபணமானதை அடுத்து, வங்கி அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர்.
சிறுது நேரத்தில் வங்கி அதிகாரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
இதைதொடர்ந்து, உணவகம் மீது வங்கி அதிகாரி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட உணவக மேலாளர் மற்றும் ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.
- மும்பையை சேர்ந்த மயங்க் பாண்டே என்பவரது காபி கடை மும்பையில் பிரபலமாகி வருகிறது.
- பிரசாந்த் நாயர் என்பவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள் கூட தங்களது சில நேரங்களில் வித்தியாசமான விளம்பரங்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த மயங்க் பாண்டே என்பவரது காபி கடை மும்பையில் பிரபலமாகி வருகிறது. அவரது கடையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்தான் இதற்கு முக்கிய காரணம். அதாவது அந்த போஸ்டரில் நான் எனது காபி கடையை உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். அதற்கு ஆதரவு தாருங்கள் என இருந்தது.
இதனை பிரசாந்த் நாயர் என்பவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றுள்ளது. இணைய பயனர்கள் பலரும் மயங்க் பாண்டேவின் வெற்றிக்காக வாழ்த்துவதாக கூறி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.






