என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக்பூர் அரசு ஆஸ்பத்திரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சையை பாதியில் விட்டு சென்ற டாக்டருக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாக்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி சவுமியா சர்மா உறுதியளித்துள்ளார்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் டீ கொடுக்காததால் கோபத்தில் டாக்டர் ஒருவர் ஆபரேசனை பாதியில் விட்டு சென்றுள்ளார். இந்த அதிர்ச்சியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாக்பூர் மாவட்டம் மவுடா பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உள்ள நிலையில் டாக்டர் பாலவி மருத்துவமனை ஊழியரிடம் டீ கேட்டுள்ளார்.

    நீண்ட நேரமாகியும் டீ கொடுக்காததால் அவர் கோபம் அடைந்தார். ஆத்திரத்தில் டாக்டர் பாலவி ஆபரேசனை பாதியிலேயே விட்டு சென்றார். மீதமுள்ள 4 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில் டாக்டர் வெளியேறி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    டாக்டரின் இந்த செயலால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வேறொரு டாக்டர் வரவழைக்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாக்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி சவுமியா சர்மா உறுதியளித்துள்ளார்.

    மேலும் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டு சென்ற டாக்டர் பாலவிக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×