என் மலர்
இந்தியா

வைரலான ஆட்டோ ரிக்ஷா பந்தயம்
- வீடியோவில் போட்டியை ஒரு நபர் நேரடி வர்ணனை செய்ததும் காண முடிந்தது.
- வீடியோவை பார்த்த பயனர் ஒருவர் பார்முலா கார் பந்தயத்தைவிட சுவாரஸ்யமானது என கருத்து தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் கார் பந்தயம், மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்றவைகளின் வீடியோக்கள் வைரலாவதை பார்த்திருப்போம். ஆனால் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் ஆட்டோ பந்தய காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது.
ரெடிட் தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆட்டோ பந்தயத்திற்கான கொடியை ஒருவர் அசைத்ததும் 3 ஆட்டோக்கள் பந்தயத்தில் சீறிப் பாய்ந்தன.
ஒன்றை ஒன்று முந்துவது போல பாய்ந்து செல்லும் வீடியோவில் முடிவு தெரியவில்லை. இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீடியோவில் போட்டியை ஒரு நபர் நேரடி வர்ணனை செய்ததும் காண முடிந்தது.
எனினும் இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. அதைப்பார்த்த பயனர் ஒருவர் பார்முலா கார் பந்தயத்தைவிட சுவாரஸ்யமானது என கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர் இந்த பந்தயத்தை பார்க்க விரும்புகிறேன். இது எங்கே நடக்கிறது? என கேள்வி எழுப்பி இருந்தார். மற்றொரு பயனர், இந்த பந்தயம் மிகவும் பொழுதுபோக்காக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.






